தூஷணமான நாமங்கள் Jeffersonville, Indiana, USA 62-1104M 1நன்றி சகோ. நெவில் இது எனக்கு ஒரு வகையில் எதிர்பாராத செயல். இன்று நான் இங்கு வரக் கருதவில்லை. இன்றிரவு இராப்போஜன இரவு. எனவே இன்று காலை இங்கு வந்துவிட்டு போகலாமென்று எண்ணினேன். நான் சகோ. நெவிலை தொலைபேசியில் கூப்பிட்டேன். அவர் ''நீங்கள் இங்கு வரும் பட்சத்தில், சிறிது எங்களுக்கு பிரசங்கிக்கலாமே'', என்றார். ''நான் சபைக்கு செல்லும் பட்சத்தில் - அது சாத்தியமானால் - நான் பிரசங்கம் செய்யப்போவதில்லை. ஆனால் சபையை பலப்படுத்தும் என்று நான் எண்ணியுள்ள சில விவகாரங்களின் பேரில், சிறிது நேரம் சபையிடம் பேசுவேன்'', என்று எண்ணினேன். 2இலையுதிர்கால வேட்டைப் பயணத்திலிருந்து நாங்கள் (நானும் இங்குள்ள சகோதரர்களும்) இப்பொழுதுதான் திரும்பி வந்தோம். எங்களுக்கு அருமையான தருணம் உண்டாயிருந்தது... நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். நாங்கள் வேட்டையாடின வேட்டை பொருட்கள் எங்கள் அனைவருக்கும் நிறைய கிடைத்தன. மான் இறைச்சி மிக மிக நன்றாயிருக்கும் என்று நமது போதகருக்கும் எனக்கும் தெரியும். எனவே, எங்களுக்கு சில அருமையான மான்கள் கிடைத்தன. எனக்கு ஒரு கரடியும் இரண்டு மான்களும் கிடைத்தன. நாங்கள் திரும்பி வந்தோம். நான் ஏழு முத்திரைகளின் பேரில் பேச வேண்டிய நேரம் இதுவே. ஆனால் அவர்கள் சபைக் கட்டிடத்தை இன்னும் கட்டி முடிக்கவில்லை. அதற்கு ஏதோ தடங்கல் உள்ளது. சபை கட்டிடம் கொள்ளக்கூடிய ஜனங்களுக்கு தங்கள் வாகனங்களை நிறுத்த போதிய இடம் இல்லாத காரணத்தால் நகராண்மைக் கழகத்தார் தகராறு செய்கின்றனர் என்று நினைக்கிறேன். 3இங்கு ஒரு புதிய சபை கட்டிடத்தைக் கட்ட விரும்புகிறோம். ஒரு பெரிய சபை கட்டிடத்திற்கென நாங்கள் பெரும்பாலான தொகையை ஒதுக்கி விட்டோம். இந்த ஆராதனைகளை நாம் நடத்தும் போது, அது எப்படியுள்ளதென்று உங்களுக்குத் தெரியும், அது மிகவும் பரிதாபமானது. ஜனங்கள் சுவர்களைச் சுற்றிலும், மழையில் வெளியிலும் நின்று கொண்டிருக்கின்றனர். அது மிகவும் பயங்கரம். என் நண்பர்களும் கூட என்னைக் குறை கூறுகின்றனர், அவர்கள், “சகோ. பிரன்ஹாமே, காண்பதற்கு அவர்கள்...'' என்கின்றனர். என் மருத்துவர் நண்பர் என்னிடம். ''அவர்களுக்கு ஏதாவது ஒரு இடத்தை ஒழுங்கு செய்யலாமே... அந்த வழியாகக் கடந்து சென்றேன். அவர்களுக்காக நான் வருந்துகிறேன்“ என்றார். எனக்கு அடுத்த வீட்டில் குடியிருக்கிற நர்ஸ் ஒருத்தி என்னிடம், ''நீங்கள் வருவதாக கேள்விப்பட்டு ஒரு நாள் விடியற்காலை 5 மணிக்கே அங்கு சென்றேன். அந்த நேரத்தில் ஜனங்கள் ஏற்கனவே அங்கு கூடியிருந்தனர். நீங்கள் 9.30 மணிக்கு அங்கு வருவதாக குறிக்கப்பட்டிருந்தது“ என்றாள். எனவே, பாருங்கள்? அது மிகவும் கடினமாயுள்ளது. 4எல்லோரும் உட்காருவதற்கு போதிய இடம் உள்ள ஒரு சபைக் கட்டிடம் நமக்குத் தேவையாயுள்ளது. நாம் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருப்பதாக எண்ணம் கொண்டிருக்கிறேம் - அதை நாம் விசுவாசிக்கிறோம். நடந்து கொண்டிருக்கும் காரியங்களை நாம் சபைக்கு போதிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். உரைக்கப்பட்டுள்ள சில தீர்க்கதரிசனங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உரைக்கப்பட்டன. கடந்த இருபத்தைந்து அல்லது முப்பது ஆண்டுகளாக உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள் நிறைவேறும் என்று இந்த சபையிலிருந்து அறிவிக்கப்பட்டு வந்தது. அவை இப்பொழுது நிறைவேறிக் கொண்டு வருகின்றன. இவைகளை நாம் புதுப்பிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம், ஆனால் நமக்கு போதிய இடமில்லை. எனவே இன்று காலை... நேற்று நான் சந்திக்க வேண்டியவர்களை சந்தித்தேன். இன்று பகல் இன்னும் சிலரை சந்திக்க வேண்டும். பிறகு, சிலர் இங்கு வரவேண்டுமென்று விரும்பினர்; நரம்புதளர்ச்சி கொண்ட ஒரு அருமையான இளைஞன்; அவர் வெளிநாட்டு சுவிசேஷ ஊழியத்தில் ஈடுபட்டிருக்கும் போதகர் சகோதரன். ஓ, அப்படிப்பட்ட அநேகர். மேலும் நார்வேயிலிருந்து வந்துள்ள ஒரு சகோதரன். இப்படி பின்னாலுள்ள அறையில் சிறு பேட்டிகளை நடத்தினோம். நான், “நல்லது, நாம் வெளியே செல்வோம்'', என்றேன். சகோ. நெவில், “நல்லது, நாம் வெளியே வந்து சபையை சிறிது பெலப்படுத்த ஒரு சில வார்த்தைகள் பேசுவோம்'', என்றார். 5முதலாவதாக - நான் முதலாவதாக சொல்ல விரும்புவது என்னவெனில்... நான் சபைக்கு வர நேரிட்டால், நான் கூற விரும்பும் சில காரியங்களை இங்குள்ள தாளில் எழுதி வைத்துக் கொண்டேன். நான் இங்கு இல்லாதிருந்தபோது, நம்முடைய அருமை சகோதரன் டெய்லரின் மறைவைக் குறித்தது. சகோ. டெய்லர் இந்த சபைக்கு பல ஆண்டுகளாக வந்து கொண்டிருந்தார். நம்மெல்லாருக்கும் அவரைத் தெரியும் என்று நான் உறுதியாக அறிந்திருக்கிறேன். ஆனால் இங்கு அந்நியர் சிலர் இருப்பார்களானால், உங்களுக்கு உட்கார இருக்கை தேடித் தந்த அந்த விலையேறப் பெற்ற வயோதிபர் தான் சகோ. டெய்லர், மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு முன்பு அவரை நான் கடைசியாக கண்டபோது - அவரை நான் மறுபடியும் ஒரு இளைஞனாகக் காண்பேன் -அவர் வாசலருகே நின்று கொண்டிருந்தார். அவர் என்னிடம், “சகோ. பிரன்ஹாமே, எனக்கு சில புத்தகங்கள் வேண்டும். அவைகளை விநியோகிக்க விரும்பு கிறேன்'' என்றார். எனவே நாம்.... அவர்... 6அவருக்கு நீரிழிவு நோய் இருந்ததாகவும் அவர் அதை அறியவில்லை என்றும், அவர் மயக்க நிலை (Coma) அடைந்து இறந்து விட்டதாகவும் கேள்விப்பட்டேன். அவர் இறக்கவில்லை. அவர் கர்த்தராகிய இயேசுவுடன் கூட இருக்கச் சென்றுவிட்டார் அவர் மிகவும் விசுவாசமுள்ள, அருமையான சகோதரன். அவர் எப்பொழுதும் மற்றவர்களுக்காக கவலை கொண்டார். சபைக்கு வருபவருக்கு உட்கார இருக்கை தேடிக் கொடுப்பதே அவருக்கு மிகவும் விருப்பமாயிருந்தது. உங்களுக்குத் தெரியுமா, நாம் இவ்விடம் விட்டுக் கடந்து மறுபுறம் செல்லும்போது, அங்கும் சகோ. டெய்லர் நமக்கு உட்கார ஒரு இருக்கை கண்டு பிடித்துத் தருவதைக் காண்பது நன்றாயிருக்குமல்லவா? நான் நினைக்கிறேன், சகோ. டெய்லரின் ஞாபகார்த்தமாக... அவருடைய அடக்க ஆராதனையின் போது, சகோ. நெவிலுடன் கூட சேர்ந்து பேச நான் இங்கு இருக்கவில்லை. ஆனால் அவரைப் பாராட்டும் வகையில் அவரைக் குறித்து ஒரு சில வார்த்தைகளை அவருடைய விதவையாகிய சகோதரி டெய்லருக்கு கூற விரும்புகிறேன், அவர்கள் இன்று காலை இங்கு எங்கோ இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்களுடைய விசுவாசமுள்ள இருதயத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. ஒரு நாள் சகோ. டெய்லர் என்னிடம், “என் இடத்தை வந்து பாருங்கள். நீங்கள் மீன் பிடிப்பதற்காக, ஒரு சிறு குளத்தை தோண்டி, அதில் மீன்கள் போட்டு வைத்திருக்கிறேன்'', என்றார். அவர் எப்பொழுதுமே மற்றவர்களுக்காக கவலை கொண்டார். அவருக்காக கவலை கொள்பவர் ஒருவர் இருந்தார், அது கிறிஸ்துவே, அவருக்கு இரட்சிப்பை அளித்தார். எனவே இன்று காலை சபையானது ஒரு சரீரமாக கூடி வந்திருக்கும் இந்நேரத்தில், அவருடைய ஞாபகார்த்தமாக நாம் எழுந்து நின்று தேவனுக்கு முன்பாக நமது தலைகளை வணங்குவோம். 7எங்கள் பரலோகப் பிதாவே, மானிடராகிய நாங்கள் இக்காலை வேளையில் இந்த ஆராதிக்கும் ஸ்தலத்தில் வந்திருக்கிறோம். உம்முடைய மகத்தான கரம் எங்கள் மத்தியில் அசைவாடி, நாங்கள் நேசித்த எங்கள் விலையேறப்பெற்ற சகோதரரில் ஒருவரை எங்களிடத்திலிருந்து எடுத்துக் கொண்டது. நீர் அவரை நேசித்தீர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். கர்த்தாவே, இதற்கெல்லாம் ஒரு காரணம் உண்டு. இல்லையென்றால் அது இவ்விதமாக நடந்திருக்காது. ஏனெனில், தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாய் நடப்பதாக வேதம் கூறியுள்ளதென்று நாங்கள் அறிந்திருக்கிறோம். நாங்கள் உலகத்தில் சுற்றுமுற்றும் பார்த்து. கல்லறை அவரைப் பிடித்து வைக்க முடியாது என்பதை இயற்கை எங்களுக்கு அறிவுத்துவதைக் காண்கிறோம். அவரை பூமிக்கு எந்த நோக்கத்துக்காக அனுப்பினீரோ. அதை அவர் செய்து நிறைவேற்றினார். அவர் மிகவும் நல்ல, விசுவாசமுள்ள சகோதரன். நாங்கள் காண்கிறோம் தாவர இனத்தில் சூரியன் தன் வாழ்க்கையில் காலையில் எழுந்து எங்களுக்கு ஒளியை அளிக்கிறது... நடுப்பகலில் அது நடுத்தர வயதை அடைந்து, மாலையில் அது இறந்து, மறுபடியும் அடுத்த நாள் காலையில் புத்துணர்ச்சியுடன் எழுந்து இவ்விதம் தேவனுடைய நோக்கத்தை நிறை வேற்றி வருகிறது. பூக்கள் பூத்து பூமியை அழகுபடுத்துவதை நாங்கள் காண் கிறோம். அவை சவ அறைகளையும், மணவறைகளையும் அலங்கரித்து ஒரு நோக்கத்தை நிறைவேற்றுகின்றன. அவை தங்கள் இருதயங்களை திறந்து கொடுத்து, தேனீக்களுக்கு இலவசமாக தேனையளித்து, வழிப்போக்கருக்கு நறுமணத்தை கொடுத்து, அழகை நாடுபவருக்கு அழகைத் தருகின்றன, தேவனுடைய சேவைக்கென்று தனக்குள்ள எல்லாவற்றையும் அது அளித்து, அதன் பிறகு தன் தலையைச் சாய்க்கிறது. ஆனால் வசந்த காலம் வரும்போது அது மறுபடியும் எழும்புகிறது. ஏனெனில் அது தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றினது. 8எனவே இயற்கை வடிவிலும், வேதத்தில் காணப்படும் பரிசுத்த ஆவியின் வாக்குத்தத்தத்தின் மூலமாகவும், இவைகளை நாங்கள் அறிந்து, கர்த்தாவே, தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றின நம்முடைய சகோதரன் டெய்லரும் கூட அவ்வாறே உயிரோடெழுவார் என்பது எங்கள் இருதயத்துக்கு மகிழ்ச்சியை அளிக்கிறதாய் உள்ளது. அவர் மறுபடியும் எழுந்திருக்க மாட்டார் என்று கூறுவது, வேதத்தையும், நமது தேவனையும், உயிர்த்தெழுதல் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் தேவன் நாம் காண அளித்துள்ள எல்லாவற்றையும் மறுதலிப்பதாகும். எனவே அவரை மறுபடியும் காணக்கூடிய அந்த நேரத்தை நாங்கள் எதிர் நோக்கியிருக்கிறோம். அவர் அப்பொழுது வாலிபமாகவும் ஆரோக்கியமாகவும் காணப்பட்டு, இனி ஒருபோதும் வியாதிப்பட மாட்டார், வயோதிபராக மாட்டார். அவருக்கு விசுவாசமுள்ள துணைவியாக இருந்த அவருடைய விலையேறப்பெற்ற மனைவியை ஆசீர்வதிப்பீராக. கர்த்தாவே, அவர்கள் ஒருமித்து குளத்துக்கு செல்வதையும் அங்குள்ள பெஞ்சுகளில் உட்கார்ந்து கொண்டு பேசுவதையும் மீன் பிடிப்பதையும், அவர்கள் ஒருவருக்கொருவர் இனியவர்களா யிருந்ததையும் நாங்கள் இனி காணமாட்டோம். ஆனால் ஒரு மகத்தான நாள் வருகிறதென்றும் அப்பொழுது விசுவாச வீரர்கள் அந்தப் பெரிய வெற்றி வளைவின் கீழ் அணி வகுத்து சென்று, தேவதூதர்களுடன் பாடும் தெய்வீக பாடல்கள் ஆகாயத்தில் தொனிக்கும் என்றும் நாங்கள் அறிந்திருக்கிறோம். அந்த இடத்தில் அவர்களை நாங்கள் மறுபடியும் காண்போம். அது வரைக்கும், கர்த்தாவே, எங்களுக்குத் தைரியத்தைத் தாரும். எங்களை ஆசீர்வதித்து எங்களுக்குதவி செய்யும். நாங்களும் இந்த சபைக்கு வரும் ஒவ்வொருவரும் சகோ. டெய்லர் கதவருகில் நின்று கொண்டு, வரும் ஒவ்வொருவரும் செளகரியமாக உட்கார்ந்து இளைப்பாறி தேவனுடைய வார்த்தையைக் கேட்க அவர்களுக்கு இடத்தைக் கண்டுபிடித்து தரும் காட்சியை நாங்கள் இனி நீண்டகாலம் காணமாட்டோம். கர்த்தாவே, அன்று அவர் கடந்து சென்ற போது, அவர் உட்காருவதற்கென தேவனுடைய பிரதான தூதன் கதவருகில் நின்று அவருக்கு ஒரு இடம் கண்டுபிடித்து தர வேண்டுமென்று நான் ஜெபித்தேன். ஏனெனில் “இரக்கமுள்ளவர்கள் இரக்கம் பெறுவார்கள்” என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. கர்த்தாவே, அவரை நாங்கள் காணும் வரைக்கும், என்றாகிலும் ஒரு நாள் மறுபுறமுள்ள தேசத்தில் நாங்கள் மறுபடியும் சந்திக்கும் வரைக்கும், அவருடைய நினைவுகள் எங்கள் இருதயங்களில் இனிதே தொடர்வதாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலம் இதை நாங்கள் கேட்கிறோம். ஆமென். 9நமது மத்தியிலும், தொழுது கொள்ள இந்த சபைக்கு அல்லது கட்டிடத்திற்கு வரும் அந்நியர்களின் மத்தியிலும் அவர் நீண்ட காலம் இனி காணப்படமாட்டார். அந்த நாள் வரைக்கும் தேவனுடைய முன்னிலையில் அவருடைய ஆத்துமா சமாதானத்துடன் இளப்பாறுவதாக. நாமும் கூட என்றாவது ஒரு நாள், ஒருவர் பின் ஒருவராகச் சென்று வரிசையில் அப்படி சேர்ந்து கொள்வோம். நமக்கு சமயம் உள்ள போதே, நம்மால் கூடுமான வரைக்கும், வரப்போகும் அந்த நேரத்திற்காக நம்மை ஆயத்தம் செய்து கொள்வோமாக. ஏனெனில் அந்த நேரம் எப்பொழுது வருமென்று நமக்குத் தெரியாது. அடுத்தது யாரென்று நமக்குத் தெரியாது. அந்த நாள் வருமானால், அது நமக்குத்தான் என்பது போல் ஒவ்வொரு நாளும் வாழ்ந்து நாம் ஆயத்தமாயிருப்போம். 10இப்பொழுது, நாங்கள் ஒரு அறிவிப்பைச் செய்ய விரும்புகிறோம். ஒருக்கால் வெகு விரைவில்... நான் திரும்பி வந்த முதற்கொண்டு, சபை கட்டிடத்தைக் கட்டுவதைக் குறித்து, நமது கூட்டங்களை நடத்துவதற்கென நமது சபை கட்டிடத்தை ஆயத்தப்படுவதைக் குறித்து நான் தர்மகர்த்தாக்களைக் கலந்தாலோசிக்கவில்லை. அப்பொழுது நான் (என்னை மன்னிக்கவும்) ஏழு முத்திரைகளைக் குறித்து தொடர்ந்து பேசுவேன். அதன் பிறகு நாம் உடனடியாகப் பேசுவதற்கு ஏழு கலசங்களும் மற்றவைகளும் உள்ளன. இப்பொழுது, அடுத்த ஞாயிறு காலை நான் சகோதரன் எல்.ஜி. ஹவருடன் கூட பிரதிஷ்டை ஆராதனைக்காக கென்டக்கியிலுள்ள எலிசபெத் டவுனில் இருக்க வேண்டும். அங்கு ஒரு புதிய கூடாரத்தை - அவர்கள் கென்டக்கியிலுள்ள எலிசபெத் டவுனை அடையலாம். இல்லை 31 எண் நெடுஞ்சாலை, அல்லது சுங்கச்சாவடியை அடைந்து அங்கிருந்து திரும்புவீர்களானால், அது உங்களை எலிசபெத் டவுனுக்குக் கொண்டு போய்விடும். அது ஏறக்குறைய ஒரு மணி நேரம் பிரயாணம். அது இங்கிருந்து முப்பத்தைந்து அல்லது நாற்பது மைல் தொலைவில் உள்ளது. 31 எண் நெடுஞ்சாலை வழியாக 40 மைல் தூரமும், மற்ற வழியாக - சுங்கச் சாவடி வழியாக - 35 மைல் தூரமும். அது மல்பெர்ரி சாலையில் உள்ளது. பிரதிஷ்டை ஆராதனை... சகோ. ஹூவர் வழக்கமான ஞாயிறு பள்ளியை 10 மணிக்கு நடத்துவார். நான் பிரதிஷ்டை ஆராதனையை 11 மணியிலிருந்து 12 மணி வரைக்கும் நடத்திப் பிரசங்கம் செய்வேன் - வரப்போகும் ஞாயிறு, நவம்பர் 11-ம் தேதி. 11அறிக்கை பலகையில் அதைக் குறித்த செய்தி தொங்கவிடப்பட்டுள்ளது. அது... அதிலிருந்து நீங்கள் செல்ல வேண்டிய வழியை அறிந்து கொள்ளலாம். நீங்கள் செல்ல வேண்டிய வழியை அவர்கள் வரைந்து காண்பித்துள்ளனர். அது சபைக்கு முன்பாகத்தில் உள்ள அறிக்கை பலகையில் உள்ளது. பிறகு நவம்பர் 22-ம் தேதியன்று நான் லூயிசியானாவிலுள்ள ஷ்ரீவபோர்ட்டில் இருக்க வேண்டும் - 22, 23, 24, 25, 26 தேதி களில்- 5 நாட்கள் என்று நினைக்கிறேன். லூயிசியானாவின் ஷ்ரீவ் போர்ட்டிலுள்ள லைஃப் கூடாரத்தில், அங்கு சகோ.மூருடன். அவர்கள் பொன் விழாவைக் கொண்டாடுகின்றனர்.பெந்தெ கொஸ்தே ஆசீர்வாதம் ஜம்பது ஆண்டுகளுக்கு முன்பு லூயிசியானாவிலுள்ள ஷ்ரீவ் போர்ட்டில் இம்மாதம் 22ம் தேதியன்று விழுந்தது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் பெந்தெகொஸ்தே செய்தி பிரசங்கிக்கப்பட்டது- பரிசுத்த ஆவி லூயிசியானாவில் வந்த போது அவர்கள் அதன் ஞாபகார்த்தமாக,இந்த பொன் விழாவை கொண்டாடுகின்றனர்.இந்த விழாவின் போது நான் சகோ. மூருடன் ஷ்ரீவ்போர்ட்டிலுள்ள லைஃப் கூடாரத்தில் ஐந்து இரவுகள் பேசக் குறிக்கப்பட்டுள்ளது. 12அதன் சுற்று வட்டாரத்தில் உங்களுக்கு நண்பர்கள் யாராகிலும் தங்க நேர்ந்து, அவர்களுக்கு எழுதி அறிவிக்க நினைத்தால், அவர்கள் அங்கு வருவது எங்களுக்கு மகிழ்ச்சியாயிருக்கும். வரப் போகின்ற கூட்டங்களைக் குறித்து அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். லைஃப் கூடாரம், அங்கு சகோ. மூருடன் யாராகிலும் எப்பொழுதாகிலும் இருந்திருக்க நேர்ந்தால், அவர் மிகவும் அருமையானவர். அங்குள்ள ஜனங்கள் அருமையானவர்கள். அந்த பழைமையான தென் பாகத்திலுள்ளவர்களை நீங்கள் மிஞ்ச முடியாது. ஷ்ரீவ்போர்ட்டை சுற்றிலும் உள்ள எவரும், லைஃப் கூடாரம் எங்குள்ளதென்று கூறுவார்கள். ஷீரீவ்போர்ட்டின் ஜனத்தொகை 200,00. அது மிகவும் நல்ல பட்டினம். அங்கு தாராள இடமுண்டு. எனவே... அந்தக் கூடாரம் பெரியக் கூடாரம், மிகப் பெரிய கூடாரம். அதற்கு மாடி, முன் மண்டபங்கள், முக்கிய தளங்கள், அதற்கும் அப்பால் ஒரு தளம், அங்கு நிறைய இடவசதி. இங்கிருந்து கடந்து பட்டின அரங்கிற்கு செல்வது போல் அங்கு ஐயாயிரம் பேர் உட்கார வசதியுண்டு இங்கிருந்து தெருவைக் கடந்து பட்டின அரங்கிற்கு செல்வது போல். 13சங்கை ஜாக் டி. மூர்... லூயிசியானாவிலுள்ள ஷ்ரீவ் போர்ட்டின் லைஃப் கூடாரம்... அது 22ம் தேதி தொடங்குகிறது. அது வியாழன் தொடங்கி ஞாயிறு முடிய வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு. ஐந்து நாட்களல்ல, நான்கு நாட்கள். என்னை மன்னிக்கவும், அது நவம்பர் 22, 23, 24, 25 தேதிகளில் (அப்படித் தான் என்று நினைக்கிறேன்). இங்குள்ள சபையைக் குறித்து நாங்கள் என்ன செய்திருக்கிறோமென்று சபை எவ்வளவு முன்னேறியுள்ளது என்று காண்போம். இதை பத்து நாட்களில் முடித்து கொடுக்க, போதிய ஆட்களை இப்பணியில் ஈடுபடுத்தப்போவதாகவும், அப்பொழுது நாம் அதில் உட்காரலாமென்றும் காண்ட்ராக்டர்கள் கூறுகின்றனர். பாருங்கள்? மிக வேகமாக நகரத்தார் கையொப்பமிட அவர்கள் காத்திருக்கின்றனர்... உங்களுக்குத் தெரியுமா, வாகனங்களை நிறுத்த நமக்கு இவ்வளவு இடம் தேவை, இதற்கு இவ்வளவு, ஊ, என்னே, ஒரு கட்டிடத்தைக் கட்ட வேண்டுமானால், அரசாங்க சட்டத்தால் ஏற்படும் காலதாமதம். நான் மறுபடியும் சுவிசேஷ வேலைக்கு செல்வதற்கு முன்பு, சபைக்கு மறுபடியும் வர எனக்குப் பிரியமுண்டு. 14உகண்டாவிலுள்ள டாங்கனிக்காவுக்கு வர எனக்கு அழைப்பு வந்துள்ளது. அங்கிருந்து வேறு இடங்களுக்கு. ஜோசப் பெப்ரவரி தொடங்கி கூட்டங்களை ஒழுங்கு செய்திருக்கிறார். நேற்று நான் உள்ளே வந்த போது, வெளிநாட்டிலிருந்து சில சகோதரர்களும் சகோதரி தாம்ஸம் வந்திருந்தனர். நான் கதவில் ஒரு குறிப்பு வைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். அது தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு சங்கம் விடுத்த அழைப்பு. என்ன செய்யலாமென்று அறிய அவர்களுக்கு எழுதுகிறேன். நான் அவ்வளவு தூரம் செல்லும் போது, பெப்ரவரி மாதத்தின் கடைசியில் தென்ஆப்பிரிக்காவுக்குச் சென்று, மார்ச்சு மாதத்தையும் அங்கு கழிக்கலாம் என்று எண்ணினேன். சபை கட்டிடம் கட்டி முடிந்து விடுமென்று நம்புகிறேன். குளிர் காலம் தொடங்குவதற்கு முன்பு, கூடுமானால், நான் சபை காலங்களைக் குறித்து பேசலாம். இல்லாவிடில், நான் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த பிறகுதான் பேச வேண்டும். அது வரைக்கும் கர்த்தராகிய இயேசு வரத்தாமதித்தால்... 15நேற்று - நேற்றுக்கு முந்தின நாள் என்று நினைக்கிறேன், ஒரு ஒலிநாடாவை நான் கேட்க நேர்ந்தது. அது இன்று காலை இங்கு மறுபடியும் போடப்பட்டதென்று நினைக்கிறேன். தென்பாகத்தைச் சேர்ந்த ஏதோ ஒரு சகோதரன். அவருடைய தாயார் கூட்டத்துக்கு வந்திருந்தார்கள். அவர்களுடைய மார்பில் புற்று நோய் இருந்தது. அவர்கள் மரணத்தினால் நிழலிடப்பட்டிருந்தார்கள். அண்மையில் நடந்த கூட்டங்களில் ஒன்றில், அது சதர்ன் பைன்ஸ் என்னுமிடத்தில் நடந்த கூட்டமென்று நினைக்கிறேன். அல்லது வேறெங்கோ - பரிசுத்த ஆவி அவர்களிடம் அவர்களுக்கிருந்த புற்று நோயைக் குறித்து எடுத்துக் கூறி, அவர்கள் யாரென்றும் எங்கிருந்து வருகிறார்களென்றும் அறிவித்து, அவர்களுக்கு பின்மாற்றம் அடைந்த ஒரு பையன் உள்ளதாகவும், அவன் ஒரு விபத்தில் ஈடுபட்டு கொலை வழக்கிற்குள்ளாவான் என்றும், இப்படி அநேக காரியங்களைக் கூறினார். இந்த ஆள்.... எல்லாமே அதே விதமாக நடந்தது... அவர்களுடைய புற்று நோய் அல்லது வளர்ச்சி அவர்களை விட்டுப்போய்விட்டது (அந்த வளர்ச்சி புற்று நோய் என்று உங்களுக்குத் தெரியும்). அது அவர்களை விட்டுப்போய்விட்டது. அந்த பையன் விபத்து ஏற்பட்டு கொலை வழக்கிற்குட்பட்டான், எல்லாமே பரிசுத்த ஆவி கூறின விதமாகவே. அவன் மறுபடியுமாக கிறிஸ்துவினிடம் வழிநடத்தப்பட்டான். அவன் அதை ஒலிநாடாவில் பதிவு செய்தான். அது போடப்பட்ட போது நான் கேட்டேன், “அந்த தென்பாகத்து பேச்சை நீங்கள் ரசித்தீர்களா?” அவன், “வட கரோலினரில்...” என்றான். (சகோ. பிரன்ஹாம் தென்பாகத்தினர் பேசுவது போல் பேசிக் காண்பிக்கிறார்-ஆசி). ஓ, அது எனக்கு மிகவும் பிரியம். அந்த தென்பாகத்தினரை, அவனிடம்... கர்த்தர் அவனை ஆசீர்வதித்திருக்கிறார். அவன், “சகோ. பிரன்ஹாமே, உங்கள் சபையோரைத் தவிர வேறு யாரிடமும் உபதேசத்தை பிரசங்கிப்பதில்லையென்று நீங்கள் கூறுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். நாங்களும் உங்கள் சபையோரில் ஒரு பகுதியே” என்றான். அவன் அவ்வாறு கூறினது மிகவும் அருமையானது. 16இப்பொழுது, ஒரு புகைப்படம் உள்ளது. அது இன்று காலை அறிக்கை பலகையில் ஒருக்கால் வைக்கப்பட்டிருக்கலாம். இல்லையென்றால், பில்லி அதை அங்கு வைப்பான். நான் முதலில் ஒளியைக் குறித்து பேசத் தொடங்கினபோது அவர்கள் அநேகமுறை என்னிடம், “நீங்கள் அந்த ஒளியைப் காண்பதாக கற்பனை செய்கிறீர்கள், சகோ. பிரன்ஹாமே'', என்று கூறியதுண்டு. இங்கு ஒருக்கால் வெகு சிலர்... இதன் புகைப்படத்தை எடுப்பதற்கு முன்பு இருந்த எஞ்சியுள்ள பழைய காலத்தவர் வெகு சிலரே இருக்கக்கூடும். அவர்களுக்கு ஒருக்கால் நினைவிருக்கும், நீண்ட நாட்களுக்கு முன்பு நான் அவ்வாறு கூறினது உங்களுக்கு ஞாபகமுள்ளதா?பாருங்கள், நான்கைந்து கைகளே உயர்த்தப்பட்டுள்ளன. இங்கு சகோதரி ஸ்பென்சர், சகோதரன் மற்றும் சகோதரி ஸ்லாட்டர், இங்கு ஒரு சகோதரன், அங்கு ஒரு சகோதரன். பழைய காலத்தவர் ஐந்தாறு பேர் மாத்திரமே மீதமுள்ளனர். 17நல்லது, சில காலம் கழிந்து. அந்த புகைப்படக் கருவியின் இயந்திரக்கண் அந்த புகைப்படத்தை எடுத்தது. எனவே அது வாஷிங்டன் டி.சி.க்கு அனுப்பப்பட்டு அங்கு பரிசோதகர்களால் பரிசோதனை செய்யப்பட்டு திரும்பி வந்தது - இருமுறை எடுக்கப் பட்டது (double exposure) போன்ற எதுவுமில்லை. “ஒளி லென்ஸின் மேல் பட்டது”, என்றார் ஜார்ஜ் ஜே. லேஸி. அவருடைய பெயரை அதில் கையொப்பமிட்டுள்ளார். பாருங்கள்? அநேக முறை நான் எட்டிப் பார்த்து, “இந்த நபரின் மேல் இருண்ட நிழல் காணப்படுகிறது. அவர் மரணத்துக்கேதுவாக நிழலிடப்பட்டிருக்கிறார்”, என்று கூறுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அவ்வாறு பல முறை நான் கூறினதை எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள். (பாருங்கள்?) பல முறை? நல்லது, புகைப்படக் கருவி அதைப் புகைப்படம் எடுத்தது. எனவே அது இங்கு நம்மிடம் உள்ளது. கரோலினாவிலுள்ள சதர்ன் பைன்ஸ் என்னுமிடத்தில் எங்களுக்கு மிகவும் அருமையான கூட்டம் உண்டாயிருந்தது. அந்த கூட்டத்தின் போது ஒரு ஸ்திரீ ஒரு சகோதரியினிடம் வந்து அவளிடம் என்ன கூறினாள் என்றால்... அந்த ஸ்திரீக்கு இரு மார்பகங்களிலும் புற்று நோய் கண்டு அவள் மரிக்கும் நிலையில் இருந்தாள். மருத்துவர்கள் அவளைக் கைவிட்டு அவள் மரித்துவிடுவாள் என்று கூறிவிட்டனர். அந்த ஸ்திரீயிடம் நான் அவள் யாரென்றும், அவள் எங்கிருந்து வருகிறாள் என்றும் கூறிவிட்டு, ''உன்மேல் ஒரு கறுத்த நிழல் உள்ளது. நீ மரணத்துக்கேதுவாக நிழலிடப்பட்டிருக்கிறாய்“ என்று கூறின போது, அந்த சகோதரி அங்கு வந்து அவளை புகைப்படம் எடுத்தாள். இதோ அது புகைப்படத்தில்... புகைப்படக் கருவியின் இயந்திரக் கண் அந்த மரண நிழலைப் படம் எடுத்தது. 18உங்களில் யாராவது பத்து கட்டளைகள் என்னும் திரைப்படத்தைக் கண்டதுண்டா? அதில் மரண தூதன் எவ்வாறு கறுத்த நிழலாக உள்ளே புகுந்ததை? அது இந்த புகைப்படத்தில் உள்ளது. அது அறிக்கை பலகையில் வைக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். இல்லையென்றால், பில்லிக்கு நான் கூறினது கேட்டிருக்கும். அவன் அதை அறிக்கை பலகையில் வைத்துவிடுவான். அந்த நபரைச் சுட்டிக் காட்டி ஒரு அம்பு வரையப் பட்டுள்ளது. அவள்... அந்த ஸ்திரீயை விட்டு அந்த நிழல் போனது. அவள் அற்புதவிதமாக சுகமடைந்தாள். அது இருண்ட புகை கொண்ட தொப்பியைப் போல அவளைச் சூழ்ந்து, அவளைத் தொப்பியிட்டிருந்தது. அந்த புற்று நோயின் காரணமாக அது அங்கிருந்து புறப்பட்டு வந்து இப்படி தொங்கிக் கொண்டிருந்தது. அந்த நிழலிலிருந்து தான் புற்று நோயின் காரணமாக மரணம் அவளுக்குள் ஊற்றப்பட்டுக் கொண்டிருந்தது. நல்லது, நீங்கள் எவ்வளவு தான் ஜனங்களிடம் உண்மையைக் கூற முயன்றாலும், அது உண்மையல்லவென்று யாராவது ஒருவர் சந்தேகப்படுவார். நீங்கள் எப்பொழுதுமே உண்மையைக் கூறினால், நீங்கள் சரியென்று அறிந்து கொள்வீர்கள். 19மேற்கு பாகத்தில் பெரிய மாட்டுப் பண்ணை நடத்தும் ஒரு நண்பர் எனக்குண்டு. காட்டு மிருகங்களைப் பாதுகாக்கும் நிர்வாகத்தினர், ட்ரபுல்சம் பள்ளத்தாக்கில் எத்தனை கடம்பை மான்கள் உள்ளன என்று அவைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்கென, அவருக்கு பனிக்கட்டி மேல் செல்லும் வாகனம் (Snow mobile) ஒன்றை வாங்க 400 டாலர்கள் கொடுத்தனர். அவர் நமது சபைக்கு வரும் திரு. ஜெப்ரீஸ், முற்றிலும் நாத்திகனாக இருந்த அவரை நான் கிறிஸ்துவினிடம் நடத்தினேன். நானும் அவரும் ஒன்றாக குதிரை சவாரி செய்ததைக் குறித்து நான் கூறின வரலாற்றை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அவர் டார்வின் தத்துவத்தைத் தவிர வேறெதிலும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அவர் கன்னிகை பிறப்பு அர்த்தமற்றது என்னும் எண்ணம் கொண்டிருந்தார். அன்றொரு இரவு நாங்கள் ஒன்றாக முகாமிட்டிருந்த போது. அங்கேயே அவர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார். இந்த மனிதன் காட்டு மிருகங்கள் பாதுகாப்பு நிர்வாகத்தினரிடம், “நீங்கள் எனக்கு அந்த வாகனத்தை பனிக்கட்டியின் மேல் செல்லும் வாகனத்தை வாங்கித் தர வேண்டாம். அங்குள்ள கடம்பை மான்களின் எண்ணிக்கையை உங்களிடம் என்னால் பிழையின்றி கூற முடியும். அங்கு பத்தொன்பது கடம்பை மான்கள் உள்ளன. அங்கு இருபது - இருபத்தொன்று மான்கள் இருந்தன. நான் அவைகளில் இரண்டைக் கொன்றேன்” என்றார். அவர் இதை வேட்டை அதிகாரியிடம் கூறினார். சட்டப்படி நீங்கள் ஒரு கடம்பை மானை மாத்திரமே கொல்லலாம். அவர் “இருபத்தொன்று கடம்பை மான்கள் இருந்தன. நான் இரண்டைக் கொன்றேன். மீதமுள்ளது பத்தொன்பது” என்றார். வேட்டை அதிகாரி, “ஆம், ஜெப், நீர் இரண்டு மான்களைக் கொன்றீர் என்று எனக்குத் தெரியும்” என்றார். அவர், “ஆம், நான் கொன்றேன்” என்றார். அவர்கள் அதை நம்பாமல் பனிக்கட்டி வாகனத்தில் சென்ற போது. அங்கு பத்தொன்பது கடம்பை மான்கள் இருந்தன. அவர், ''பில்லி, ஒரு மனிதனிடம் உண்மையைக் கூறினால், அவன் நம்பமாட்டான்“, என்றார். அப்படித்தான் அது உள்ளது. நீங்கள் ஜனங்களிடம் உண்மையைக் கூறலாம். இருப்பினும் அவர்கள்... காரியங்களைக் குறித்து தவறாகப் புரிந்து கொள்ளுதலும், பொய் உரைத்தலும் மிகுதியாயுள்ளபடியால், நீங்கள் உண்மையைக் கூறினால், அவர்கள் நீங்கள் உண்மையைக் கூறுகிறீர்கள், நம்புவது கிடையாது. பார்த்தீர்களா? 20ஆனால் சத்தியத்தை சத்தியமென்று ஊர்ஜிதப்படுத்தும் பரலோகப்பிதா நமக்குள்ளதற்காக நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். எனவே, இது நான் உலகில் வாழும் கடைசி நாளாயிருக்குமானால்... இவைகளைக் குறித்து நான் உண்மையைக் கூறினேன் என்று விஞ்ஞான ஆய்வுகளும் நிரூபணங்களும் நிரூபித்துவிட்டன. அது உண்மை. அது சத்தியம். அது ஒருக்கால் அறிக்கை பலகையில் இருக்கக் கூடும். பில்லி, நீ அறையில் இருக்கிறாயா? அந்த புகைப்படம் உன் கையில் உள்ளதா? இருந்தால், இங்கு கொண்டு வா. இவர்கள் காணத்தக்கதாக அதை இங்கு மாட்டலாம். இவர்களால் காணமுடியுமாவென்று எனக்குத் தெரியவில்லை. அறிக்கை பலகையில் மேல் விளக்கு இருக்கும். இதோ அந்த புகைப்படம் (சகோ. பிரன்ஹாம் புகைப் படத்தைக் காண்பிக்கிறார் -ஆசி). உங்களால் காண முடியவில்லையென்று எண்ணுகிறேன். அந்த ஸ்திரீயின் தலையின் மேல் மரண நிழல் தொப்பியைப் போல் உள்ளதை நீங்கள் காணலாம். அந்த ஸ்திரீ எடுத்த புகைப்படத்தின் பின்னால், அதைக் குறித்த விவரணம் எழுதப்பட்டுள்ளது. அது உள்ளதா என்பதைக் காண்பிக்க. இதோ அது இங்குள்ளது. அது தொப்பியிடப்பட்ட மரணநிழல். சகோ. பிரன்ஹாம் யாரோ ஒருவரிடம் பேசுகிறார் “இந்த புகைப்படத்தில் இங்கு காணுங்கள். நீங்கள் இதை ஏற்கனவே பார்த்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன், இல்லையா, சகோ. நெவில்”? சகோதரன் நெவில் “ஆம்” என்று கூறுகிறார் -ஆசி) பில்லி, இதை ஒருக்கால் அறிக்கை பலகையில் வைப்பான். பில்லி இதை முன்பாகத்துக்கு கொண்டு சென்று, வெளியே செல்லும் போது எல்லாரும் காணத்தக்கதாக அறிக்கை பலகையில் மாட்டுவான். அவன், அல்லது டாக், யாராவது ஒருவர். இங்கு நீங்கள் அதை நன்றாக காண முடியும் என்று நினைத்தேன். ஆனால் அத்தகைய புகைப்படம் காண்பதற்கு இங்கு மிகவும் இருளாய் உள்ளது. அவன் அதை அங்கு வைப்பான், நீங்கள் வெளியே செல்லும் போது அதைக் காணலாம். எல்லா அறிவிப்புகளும் ஞாபகமிருக்கட்டும். 21இன்று காலை, சபைக்கு உற்சாகமளிக்கக் கூடிய ஒன்றைக் குறித்து, உங்களுக்கு அதிகம் உற்சாகமளிக்கக் கூடிய ஒன்றைக் குறித்து, சிறிது நேரம் பேசலாம் என்று எண்ணினேன். (சகோ, பிரன்ஹாம் திருப்பும் விளக்கைக் குறித்து (spotlight) அவருடைய சகோதரன் எட்கருடன் உரையாடுகிறார் -ஆசி) ஆம், டாக், நீங்கள் அப்படி செய்வீர்களானால் நன்றாயிருக்கும். அதை இங்கு உபயோகிக்க விரும்புகிறேன், நான்... சென்ற வாரத்தில் அதை போடவில்லை. இன்றைக்கு அது நன்றாயிருக்கும் என்று நினைக்கிறேன். அதைக் குறித்து இன்று பேச விரும்புகிறேன். ஏனெனில் அது சகோதரி கண்ட சொப்பனத்துடன் சம்பந்தப்பட்டது. 22சகோதரி ஷெப்பர்ட் இன்று காலை சபைக்கு வந்திருக்கிறாளா என்று தெரியவில்லை. அன்றிரவு அவளை சந்தித்தேன். நான் முதன் முறையாக அந்த ஸ்திரீயை சந்தித்த போது; அவள் யாரென்று எனக்குத் தெரியவில்லை. அவள்... இல்லை என்று நினைக்கிறேன்... ஆம், அந்த சொப்பனத்தை எடுத்துக் கூறினால் உனக்கு ஆட்சேபனையுண்டா?அது தவறாகி விடுமா? சகோதரி ஷெப்பர்ட், உனக்கு ஆட்சேபனை இருக்காதென்று எண்ணுகிறேன். இல்லையா? சரி. அதனால் பரவாயில்லை. அதை அணுகுவதற்கு முன்பு நாம் மறுபடியும் தலை வணங்குவோம். 23கிருபையுள்ள பரலோகப் பிதாவே, உம்முடைய எல்லா நன்மைக்காகவும் இரக்கத்துக்காகவும் நாங்கள் உமக்கு ஸ்தோத்திரத்தை ஏறெடுக்கிறோம். கர்த்தாவே, எங்களுக்கு தரிசனத்தால் கிடைக்கப் பெற்று, பரிசுத்த ஆவியினால் உறுதிப்படுத்தப்பட்டு, வேதத்தினால் ஆதாரப்படுத்தப்பட்ட ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையை நாங்கள் ஆராய்வதற்கென, எங்களை அமரிக்கையாக்குவீராக. எங்களுக்கு புரிந்து கொள்ளும் தன்மையை அளித்து, தீங்கான வல்லமைகள் எங்களை இப்பொழுது சூழ்ந்து கொண்டிருப்பதை நாங்கள் காணும்போது, இந்தக் கடைசி நாட்களில் நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று அறிந்து கொள்ளச் செய்யுமாறு வேண்டிக் கொள்கிறோம். யுத்தம், கடைசி யுத்தம் நிகழவிருக்கிறது. கர்த்தாவே, நாங்கள் உண்மையுள்ள, திடகாத்திரமுள்ள போர் வீரர்களாக, விசுவாசமென்னும் கேடயத்தைப் பிடித்துக் கொண்டு, தேவனுடைய வார்த்தையாகிய பட்டயத்தைக் கையிலேந்தினவர்களாய் முன் செல்வோமாக. இயேசுவின் நாமத்தில். ஆமென். 24இப்பொழுது, அணிவகுத்துள்ள போரில் முன்னேறிச் சென்று, போர் புரிய ஆயத்தமாகி - ஒரு உண்மையான போரில் விசுவாசப் போராட்டத்தைப் போராடுவதைக் குறித்து சிந்திக்கும் போது.... இங்குள்ள சகோதரி ஷெப்பர்டும், சகோ. ஷெப்பர்டும் எங்களுக்கு மிகவும் அருமையான நண்பர்கள். அவர்கள் இந்த கூடாரத்துக்கு வருபவர்கள். அவர்கள் விலையேறப்பெற்ற தேவனுடைய பிள்ளைகள். இந்த சகோதரி ஷெப்பர்ட்... எனக்கு வந்த கடிதங்களை நான் அஞ்சலகத்தில் எடுத்துக் கொண்டிருந்த போது (யாராகிலும் ஒருவர், “எனக்கு இத்தனை ஜெப உறுமால்களை அனுப்புங்கள்” என்பதை போன்ற கடிதங்களுக்கு பில்லி பதில் எழுதி விடுவான். நான் உறுமால்களின் மேல் கைகளை வைத்து ஜெபித்து விடுவேன். பில்லி பதிலெழுதி அவைகளை அனுப்பி விடுவான். ஆனால் எனக்கு வரும் தனிப்பட்ட கடிதங்களுக்கு, நானே பதிலெழுத வேண்டும். பாருங்கள்?)... எனவே எனக்கு வந்த தபாலை நான் எடுத்து வீட்டுக்குச் சென்று படித்துக் கொண்டிருந்தபோது, “சகோதரி ஷெப்பர்டிடமிருந்து”, என்று ஒரு கடிதம் இருந்தது. அது சில மாதங்களுக்கு முன்பு அவள் கண்ட சொப்பனத்தைக் குறித்தது. இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்பு, ஞாயிற்றுக் கிழமையன்று நான் ஏழு சபை காலங்களைக் குறித்தும் - ஏழு கனிகளைக் குறித்தும் - 2 பேதுரு, எப்படி நம்முடைய விசுவாசத்துடன் மற்றவைகளைக் கூட்டுதல் (2-பேதுரு முதலாம் அதிகாரம்) என்பதைக் குறித்து நான் போதிக்கும் வரைக்கும் அவளுக்கு அதன் அர்த்தம் புலப்படவில்லை. 25முதலாவது: அஸ்திபாரமாக விசுவாசம். இரண்டாவதாக: உங்கள் விசுவாசத்தோடே வல்லமையை கூட்டுங்கள்; உங்கள் வல்லமையே ஞானம்; உங்கள் ஞானத்தோடே தன்னடக்கம்: தன்னடக்கத்தோடே பொறுமை; பொறுமையோடே தேவபக்தி; தேவபக்தியோடே சகோதர சிநேகம் - சகோதர அன்பு; அதன் பிறகு அன்பு தலைக்கல் - ஏழு காரியங்கள். ஏழு சபை காலங்கள் (பாருங்கள்?), ஏழு சபை காலங்களின் ஏழு நட்சத்திரங்கள். இவையனைத்தும் பரிசுத்த ஆவியானவரால் ஒன்றாக இணைக்கப்படுகின்றன. கிறிஸ்துவின் ஊழியக்காரனாவதற்கு அதுதான் அவசியம். கிறிஸ்து தமது சபையை ஏழு சபை காலங்களில் கட்டுகிறார் - அவருடைய மணவாட்டி, ஒரு நபர், ஸ்திரீ, சபை. ஏழு சபை காலங்கள் ஒருமித்து மணவாட்டியை தோன்றச் செய்கின்றன: சிலர் இந்த காலத்திலிருந்து, சிலர் அந்த காலத்திலிருந்து, வேறு சிலர் அந்த காலத்திலிருந்து, இப்படியாக ஒன்று சேர்ந்து, அது கூர்நுனிக் கோபுர வடிவில் அமைந்துள்ளது. 26கூர்நுனிக் கோபுரங்களைக் கட்டின ஏனோக்கைப் போன்று; அவன் அதை கட்டினான் என்று நாம் விசுவாசிக்கிறோம்... அதன் மேல் தலைக்கல் வைக்கப்படவில்லை. ஏனெனில் தலைக்கல் புறக்கணிக்கப்பட்டது. எனவே இதை நாம் ஒரு உபதேசமாக ஏற்றுக் கொள்ளாமல், இங்குள்ள சபை புரிந்து கொள்வதற்கென இவைகளை... தேவன் தம்மை மூன்றில் பரிபூரணப்படுத்துகிறார். அவர் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் ஒரே தேவனின் மூன்று அலுவல்களில் தம்மைப் பரிபூரணப்படுத்துகிறார். அவர் நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பவைகளில் தம்மைப் பரிபூரணப்படுத்துகிறார் -கிருபையின் பரிபூரண கிரியைகள். அவர் மூன்று வருகைகளில் தம்மைப் பரிபூரணப்படுத்துகிறார் முதலாம் முறை தமது மணவாட்டியை மீட்டுக் கொள்ள, இரண்டாம் முறை தமது மணவாட்டியை பெற்றுக் கொள்ள, மூன்றாவது முறை மணவாட்டியுடன் ஆயிரம் வருட அரசாட்சியில். எல்லாமே மூன்றுகளில் பரிபூரணப்படுகின்றன. ஏழு என்பது தேவனை வழிபடும் எண்ணிக்கையாகும். தேவன் ஏழில் தொழப்பட்டு, பூரணப்படுகிறார். பரிபூரணப்பட்டு, பூரணப்படுதல். விசித்தரமான காரியம் என்னவெனில் (இதை உள்ளே நுழைக்க முயலவில்லை, உங்களுக்கு காண்பிப்பதற்காக), நான் சுட்ட கடைசி மானுக்கு, ஒரு புறம் ஐந்து முனைகளும், மறுபுறம் மூன்று முனைகளும் உண்டாயிருந்தன (பாருங்கள்?): கிருபையும் பரிபூரணமும். 27இதை கவனியுங்கள், கிறிஸ்து... தேவன் மூன்று வேதாகமங்களை எழுதினார். முதலாம் வேதாகமம் வானராசிகள் என்று அழைக்கப்படுபவைகளால் வானத்தில் எழுதப்பட்டது. உங்களுக்கு யோபுவின் புத்தகம் தெரியாமலிருந்தால், இதைக் குறித்து மறந்துவிடுங்கள். ஏனெனில் யோபு தான் இதை விவரிக்கிறன்: அவன் மேலே நோக்கிப் பார்த்து, வானத்திலுள்ள இவைகளுக்குப் பெயர் சூட்டுகிறான். கவனியுங்கள், வானராசிகள் எதில் தொடங்குகின்றன? வானராசிகளில் முதலாவது கன்னிராசி. வான ராசிகளில் கடைசி சிம்ம ராசி, கிறிஸ்துவின் முதலாம் வருகை கன்னியின் மூலம், இரண்டாவதாக சிங்கமாக, யூதா கோத்திரத்துச் சிங்கம். 28பிறகு ஏனோக்கு தன் காலத்தில், அவன் வாழ்ந்த முன் காலத்தில், கூர்நுனிக்கோபுரத்தைக் கட்டிமுடித்தான். அது... இதை பின்புறக்காட்சியாக கொண்டு, கூர்நுனிக் கோபுரம் எவ்வாறு அறைகளை கொண்டதாய் மேலே எழும்பி வந்தது என்று விவரிக்க நமக்கு நேரமில்லை. அது இப்பொழுதுள்ள கடைசி காலம் வரைக்கும் எடுத்துரைக்கிறது. அளவுகளின்படி, இப்பொழுது அவர்கள் ராஜாவின் அறையில் இருக்கிறார்கள். ஆனால் கூர்நுனிக் கோபுரத்தின் மேல் தலைக்கல் வைக்கப்படவில்லை. அது கட்டிட வேலைப்பாட்டில் மிகச் சிறந்து விளங்கி, ஒரு கூர்மையான சவரக் கத்தியும் கூட... அவர்கள் அதை எப்படிக் கட்டினார்கள் என்று தெரியவில்லை, அதை புரிந்து கொள்ள முடியவில்லை -காரையே கிடையாது. அது பிழையற்ற விதத்தில் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவும் சபையும் ஒன்றாகும் போது அப்படித்தான் இருக்கும். இடையே காரை இருக்காது: இடையே ஒன்றும் இருக்காது. தேவனும் அந்த நபரும் மாத்திரமே - தேவனாகிய கிறிஸ்துவும் அந்த நபரும். 2974, அந்த தலைக்கல்லை அவர்கள் எங்கும் காணவில்லை. இங்கிலாந்து ராஜாவை முடிசூட அவர்கள் அங்கு வைத்துள்ள ஸ்கோண் கல் (stone of scone) உங்களுக்குத் தெரியுமல்லவா?ஆனால் தலைக்கல்.... அமெரிக்க டாலர் நோட்டிலுள்ளதைக் கவனியுங்கள். அதை நீங்கள் அமெரிக்க டாலர் நோட்டில் காணலாம். அதன் ஒரு புறம், இடது பக்கத்தில் அமெரிக்க முத்திரை. கையில் ஈட்டியைப் பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு கழுகு அச்சடிக்கப் பட்டுள்ளது. இரண்டாம் பக்கத்தில்... இது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முத்திரையென்று அழைக்கப்படுகிறது. ஆனால் மறுபுறத்தில் ஒரு கூர்நுனிக் கோபுரமும், அதற்கு மேல் ஒரு பெரிய கண்ணும் உள்ளன. அதன் கீழ் “பெரிய முத்திரை” என்று எழுதப்பட்டுள்ளது. இது ஏன் இந்த நாட்டின் பெரிய முத்திரையாக, நமது நாட்டின் முத்திரையை விட மேலானதாக இருக்க வேண்டும்? பாருங்கள்? நீங்கள் என்ன செய்த போதிலும், அது பேசும்படி தேவன் செய்கிறார். பாருங்கள்? அவர் அதைக் குறித்து நாடுகள் பேசும்படி செய்கிறார். எல்லாமே அவரைக் குறித்து பேச வேண்டும் - நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும். அது அங்குள்ளது. இப்பொழுது கவனியுங்கள், அதில் ஒரு கண் உள்ளது - தேவனுடைய கண், அதன் தலை - தலை முத்திரை - வரவில்லை. ஏனெனில் அது புறக்கணிக்கப்பட்டது. அதுதான் தேவனுடைய குமாரன், கட்டிடத்தின் மூலைக்கல், கூர்நுனிக் கோபுரத்தின் தலை முத்திரை, இவையெல்லாம். இப்பொழுது, 30இப்பொழுது, நான்... எனக்குப் பிரியமில்லை... சில சமயங்களில் அவர்கள் இதை ஒலிப்பதிவு செய்து, அது சபைகளிலுள்ள மற்ற சபைகளிலுள்ள - சகோதரரை சென்றடைகிறது. அந்த சகோதரர்கள் இதைக் கேட்கும் போது, நான் சகோதரரைக் குறித்து ஏதோ கூறுகிறேன் என்னும் தவறான அபிப்பிராயம் கொள்கின்றனர். நான் அப்படி கூறவில்லை. நான்... நீங்கள் கவனமாகக் கேட்டு புரிந்து கொள்வீர்களானால் (பாருங்கள்?), நான் எந்த சகோதரனுக்கும் விரோதமாகப் பேசவில்லை. ஏனெனில் சகோதரர் ஒருவருக்கொருவர் விரோதமாகப் பேசுவது உகந்ததல்ல. நாம் ஒருவருக்கொருவர் சார்பாக பேச வேண்டுமேயன்றி. ஒருவருக்கொருவர் விரோதமாய் அல்ல. நான் பிரஸ்பிடேரியன், மெதோடிஸ்டு போன்ற குறிப்பிட்ட ஸ்தாபனம் ஒன்றைக் குறித்து சில நேரங்களில் பேசும்போது, அவர்கள், “பாருங்கள், அவர் அதற்கு விரோதமாய் இருக்கிறார்'', என்கின்றனர். அதிலுள்ள சகோதரன் அல்லது சகோதரிக்கு விரோதமாய் எனக்கு ஒன்றுமில்லை. சகோதரத்துவத்தைப் பிரிக்கும் முறைமைக்கு விரோதமாகத்தான் நான் பேசுகிறேன், தேவனுடைய பிள்ளைகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களேயன்றி வெவ்வேறு குழுக்கள் அல்ல. 31அவர்களில் சிலர், “நான் ஒரு மெதோடிஸ்டு, எனவே நான் அதனுடன் எவ்வித தொடர்பும், கொள்ள மாட்டேன்'', என்கின்றனர். பாருங்கள்? இப்பொழுது, அது... பாருங்கள், அந்த ஸ்தாபனத்தின் முறைமை அந்த சகோதரத்துவத்தை முறித்துப் போடுகிறது. பாருங்கள்? இப்பொழுது அந்த... நான் கூறினது போல்: நீங்கள் ஒரு ஓட்டை படகில் ஆற்றில் சென்று நீர்வீழ்ச்சியைக் கடக்க முயன்று, அது முடியாதென்று நான் அறிந்து, உங்களைப் பார்த்து கூச்சலிடவோ, உங்களைக் கடிந்து கொள்ளாமலோ இருந்தால்-உங்களைப் படகிலிருந்து வெளியே வரவைக்க நான் முயல்கிறேன் (பாருங்கள்?). ஏனெனில் அந்த படகு உடைந்துவிடும் நீங்கள் தண்ணீரில் மூழ்கிவிடுவீர்கள். எனவே நான் படகிலுள்ள சகோதரனைக் கடிந்து கொள்ளவில்லை. என்ன நடக்கப்போகிறதென்று சகோதரனுக்கு உணர்த்தவே நான் அவரைப் பார்த்துக் கூச்சலிடுகின்றேன். நல்லது, மனிதர் தங்கள் சாதனைகளால் உண்டாக்கிய இந்த முறைமைகள் அனைத்தும் உடைய வேண்டும். அவ்வளவுதான். அவர்கள் வர வேண்டும். நாம் சகோதரத்துவத்தில் ஒன்றுபட வேண்டும், அதுவே... என் வாழ்க்கையின் நோக்கமே ஒன்றுபடுத்த முயல்வதேயன்றி, ஸ்தாபனத்தை உடைப்பதல்ல. அவர்கள் தங்கள் கருத்துக்களை விட்டோய்ந்து, மறுபடியும் பிறந்த ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் சகோதரராயிருக்கட்டும். அது - அது தான் கருத்து. அதில் தான் நான் நிற்கிறேன். நல்லது, இப்பொழுது, சகோதரர் அதை கவனிப்பார்களானால், நான்... 32நம் சகோதரரில் பலர், நமது முழு சுவிசேஷகுழுவைச் சார்ந்தவர்களும் கூட, பாப்டிஸ்டுகள், மெதோடிஸ்டுகள், லூத்தரன்கள் போன்றவர்களுக்கு வாய்ப்பே கிடையாது என்னும் எண்ணம் கொண்டுள்ளனர். ஆனால் நான்... ஒருக்கால் அவர்கள் கருத்து சரியாயிருக்கலாம். ஆனால் என்னால் இணங்க முடியாது. அன்றிருந்த காலமாகிய லூத்தரன் காலத்தில்; அது சர்தை சபையின் காலம் என்றழைக்கப்பட்டதென்று நினைக்கிறேன்; அதன் பிறகு தோன்றின மெதோடிஸ்டுகளுக்கான பிலதெல்பியா சபையின் காலத்திலும், அதன் பிறகு பெந்தெகொஸ்தேகாரருக்கான லவோதிக்கேயா காலத்தில்... அவையே அந்த காலங்கள் என்று நினைக்கிறேன், தேவன் இந்த காலங்கள் ஒவ்வொன்றிலும் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களை தெரிந்து கொண்டார். அதில்? எபிரெயர் 11-ம் அதிகாரத்தில் கூறப்பட்டது போன்று, நம்மையல்லால் அவர்கள் பூரணராவதில்லை. பாருங்கள்? ஆனால் இப்பொழுது, சபை அதிலிருந்து சிறுபான்மையோரைக் கொண்டதாகவே வந்து பெந்தெகொஸ்தே காலத்தை அடைந்துள்ளது. 33இதை நான் கூறும் காரணம் என்னவெனில்: அந்த சகோதரி கண்ட சொப்பனத்தைக் குறித்த கருத்தை நீங்கள் அறிந்து கொள்ளவே, அந்த சொப்பனம் நான் போதித்து வந்ததுடன் நிச்சயம் ஒத்துப்போகிறது. இப்பொழுது இங்கு கவனியுங்கள், 2 பேதுரு முதலாம் அதிகாரம் 6-ம், 7-ம் வசனங்கள் உங்களுக்கு சொல்லும் அனைத்தும், அது உங்கள் விசுவாசத்தினால் கொண்டு வரப்படுகிறது, அது தான் முதலாவது. ஜனங்கள் மறுபடியும் பிறவாமலேயே இப்பண்புகளைக் கொண்டுள்ளதாக உரிமை கோருகின்றனர். நான் ஒரு கடூரமான குறிப்பைக் (remark) கூறி, ஒரு கறுப்பு பறவை மயிலின் இறகுகளை சொருகிக் கொண்டு தன்னை மயில் என்று அழைத்துக் கொள்வது போல என்று கூறினேன். அதனால் அப்படி அழைத்துக் கொள்ள முடியாது. அது இயற்கையாகவே அந்தப் பறவையில் வளர வேண்டும். அதற்குள் இருப்பது, இந்த இறகுகளை வெளியே வளரச் செய்ய வேண்டும். 34எப்பொழுதுமே - நமது சகோதரிகள் தலைமயிரைக் கத்தரித்து, முகம் முழுவதிலும் வர்ணம் பூசிக் கொள்வதைக் குறித்து அவர்களை நான் கடுமையாகத் தாக்குவதாக எப்பொழுதும் குற்றஞ்சாட்டப்படுகிறேன். அதற்கு விரோதமாக எனக்கு ஏதோ ஒன்றுண்டு என்றல்ல, ஸ்திரீயானவள் நல்லவள் அல்ல: அவள் தெருவில் திரியும் ஒருத்தி என்று நான் கூற வரவில்லை. அதுவல்ல என் மனப்பான்மை, என் கருத்து இதுவே: அவள் வெளிப்புறத்தில் அவ்வளவு செயற்கையான சாதனங்களைப் போட்டுக் கொள்ளும் போது, அவளுக்குள்ளே அதிகமான செயற்கை உள்ளதை அது காண்பிக்கிறது (பாருங்கள்?) அவள் கிறிஸ்துவினால் நிறைந்திருக்க வேண்டியவள், வெளிப்புறம் எப்பொழுதுமே உள்ளே என்ன உள்ளது என்பதை வெளிப்படுத்துவதாய் உள்ளது. ''அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்''. பார்த்தீர்களா? கிறிஸ்து உள்ளே இருக்க வேண்டியபோது, மற்ற காரியங்களுக்காக அதிக கவலை கொண்டு, செயற்கை ஆடம்பரத்தில் அதிக முக்கியத்துவம் செலுத்துவது - உங்களுக்குத் தெரியும், பச்சை கண் இமைகள், மனிதரைப் போலவே காட்சியளிக்காதபடிக்கு இப்படிப்பட்டவைகள்... நான் அதை ஆதரிப்பதில்லை. வேதமும் அதை ஆதரிப்பதாக எனக்குத் தெரியவில்லை. நாம் எவ்வண்ணமாக இருக்கிறோமோ அவ்வாறு இருக்கவே நான் பிரியப்படுகிறேன். 35இப்பொழுது கவனியுங்கள், ஒரு பெண்ணுக்கு நகங்களே இல்லாமல் இருந்து அவள் நகங்களை அணிந்து கொள்ள விரும்பினால், அவளுக்கு பற்களே இல்லாமல் இருந்து செயற்கை பற்களைக் கட்டிக் கொள்ள விரும்பினால் உங்களுக்கு ஒரு கரம் இல்லாமலிருந்து, உங்களுக்கு கரம் அவசியமாயிருந்தால்; உங்களுக்கு தலைமயிர் இல்லாமல் இருந்து உங்களுக்கு அது அவசியமாயிருந்தால்; இவைகள் உங்களுக்கு இல்லாமலிருந்தால், அது வேறு விஷயம். ஆனால் உங்களுக்குள்ள நல்ல பற்கள் இருக்க வேண்டிய விதத்தில் வெண்மையாக இல்லை என்னும் காரணத்தால் அவைகளைப் பிடுங்கிப்போட்டால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். உங்களுக்கு சிகப்பு தலைமயிர் இருந்து, உங்களுக்கு கறுப்பு தலைமயிர் பிரியம் என்பதற்காக நீங்கள் கறுப்பு சாயம் அடித்துக் கொண்டால்... நீங்கள் தவறு செய்கிறீர்கள். ஆம், அப்படித்தான் நான் நினைக்கிறேன், ஆனால் முக்கியமான காரியம் என்னவெனில்... அதற்கு ஆதாரமாக வேதத்தில் எந்த வசனமும் இல்லை, ஆனால் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்ளக்கூடாதென்று வேதத்தில் நிறைய வசனங்கள் உள்ளன. எனவே, அது சரியாவென்று நாம் மிகவும் உறுதி கொள்ள விரும்புகிறோம். 36இப்பொழுது, இப்பொழுது, நமது சகோதரி தன் சொப்பனத்தில்: அவள் என்ன சொப்பனம் கண்டாள் என்றால்... முதலாவதாக, அவளுக்கு மனக்கலக்கம் ஏற்பட்டது. அவள், ''நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று தேவன் கூறியிருக்க, அதை நாம் பெறாமலிருந்தால், அதற்காக வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முயற்சி செய்வதனால் என்ன பயன்?'', என்று எண்ணினாள். எனக்குத் தெரியவில்லை... ஒருக்கால் அவர்கள் இதை ஒலிப்பதிவு செய்து கொண்டிருக்கலாம். அவர்கள் அப்படி செய்யாவிட்டால் - அப்படி செய்தால், இது சபைக்கு மாத்திரமே. பாருங்கள்? ஏதோ ஒரு சகோதரனுக்கு இந்த ஒலிநாடா கிடைத்து, சகோதரனே, இதைக் குறித்த என் குரலை நீங்கள் கேட்க நேர்ந்தால், இதை என் சபைக்குப் போதிக்கிறேன் என்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் எப்பொழுதுமே, உங்கள் சபையோர் கேட்பதற்கு முன்... இந்த ஒலிநாடாக்களைப் போட்டுக் கேளுங்கள். உங்கள் சபையோர் இவைகளைக் கேட்கக் கூடாதென்று நீங்கள் கருதினால், அவர்களைக் கேட்க சம்மதிக்க வேண்டாம். சகோ. நெவிலும் நானும் பரிசுத்த ஆவியினால் போதக ஊழியம் செய்து போதிக்கும் இங்குள்ள இந்த சிறு குழுவுக்கு இதை நான் கூற முயல்கிறேன். 37சில காரியங்களைக் குறித்து நீங்கள் என்னுடன் பயங்கரமாக இணங்காமல் இருக்கலாம். அப்படி இருக்குமானால், வறுத்த கோழியைத் தின்பது குறித்து நான் அடிக்கடி கூறுவது போல்; உங்களுக்கு எலும்பு கிடைக்குமானால், நீங்கள் கோழியைத் தூர எறிந்து விடுவதில்லை. எலும்பைத் தான் தூர எறிகிறீர்கள். செர்ரி பழத் தின்பண்டத்தை தின்னும் போது, கொட்டை அகப்பட்டால், நீங்கள் தின்பண்டத்தை தூர எறிந்து விடுவதில்லை, கொட்டையைத் தான் தூர எறிகிறீர்கள். இதைக் கேட்கும் விஷயத்திலும் அவ்வாறே செய்யுங்கள். நான் நினைக்கிறேன், இன்றைக்கு பரிசுத்த ஆவியைக் குறித்து இவ்வளவு குழப்பம் உள்ள காரணம், அது சரியான படி போதிக்கப்படாததாலே. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து போதிக்கப்படுகிறது. ஆனால் “அபிஷேகம்'' என்று மாத்திரம் சொல்லி விட்டுவிடுகின்றனர். அதன் பிறகு... உதாரணமாக, நீங்கள் ”'மோட்டார் வாகனம்'' என்று சொல்லுகிறீர்கள், நமது சபையில் மோட்டார் பழுது பார்க்கும் அநேக மெக்கானிக்குகள் உள்ளனர். எனக்கு அதைக் குறித்து ஒன்றுமே தெரியாது. எனவே நான் தவறு செய்ய நேர்ந்தால், சகோதரனே, நான்... நான் ஒரு மெக்கானிக் அல்ல என்பதை நினைவில் கொள்ளவும். கம்பிச் சுருள்கள், ப்ளக்குகள், பாய்ண்டுகள், வால்வுகள் போன்று எல்லாம் ஒன்று சேர்ந்தது தான் மோட்டார் வாகனம். அது போன்று நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்துப் பேசும்போது, அதனுடன் அநேக காரியங்கள் சம்பந்தப்பட்டுள்ளன, அநேக காரியங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. இங்கு பரிசுத்த ஆவி உள்ளதென்று தேவன் இப்படித்தான் நிரூபிக்கிறரென்று எண்ணுகிறேன். 38பேதுரு முதலில் விசுவாசம் என்று கூறினான். இப்பொழுது இதை மிகவும் கூர்ந்து கவனியுங்கள். இதை நாம் சில நிமிடங்கள் போதிக்கப் போகிறோம். உங்களுடைய முதலாவது விசுவாசம். விசுவாசத்தோடே வல்லமையைக் (virtue) கூட்டுங்கள்; உங்கள் வல்லமையோடே ஞானம்; உங்கள் ஞானத்தோடே தன்னடக்கம்; உங்கள் தன்னடக்கத்தோடே பொறுமை; உங்கள் பொறுமையோடே தேவபக்தி; உங்கள் தேவபக்தியோடே சகோதர அன்பு, சகோதர சிநேகம்; அதன் பிறகு அன்பு. அன்பே தேவன் என்று எவருமே அறிவர். தேவன் அன்பாயிருக்கிறார். பாருங்கள்? இப்பொழுது அந்த - இதிலிருந்து, இதை ஏழு சபை காலங்களுடன் இணைக்கலாம். தேவன் ஏழு சபை காலங்கள் தோறும் கிறிஸ்துவுக்கு ஒரு மணவாட்டியை உருவாக்கி வருகிறார். பிலதெல்பியா, தீயத்தீரா, பெர்கமு, சிமிர்னா, எபேசு, சபை காலங்கள் தோறும். இயேசு, “மணவாளன் முதலாம் ஜாமத்தில் - இல்லை ஏழாம் ஜாமத்தில் வந்தபோது நித்திரையடைந்திருந்த இந்த கன்னிகைகள் எல்லோரும் எழுந்தனர்” என்று கூறினார். இவர்கள் நித்திரையினின்று எழுந்தனர் - எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பில்தெல்பியா, லவோதிக்கேயா சபை காலங்களில் இருந்த கன்னிகைகள். அதை கவனித்தீர்களா? அவர் வந்து நித்திரையடைந்திருந்த கன்னிகைகளை எழுப்பினது ஏழாம் சபை காலமே, அது முன்காலத்திலிருந்து இக்காலம் வரைக்கும் உள்ளவர்களைக் கொண்டு வருகிறது. இதன் மூலம், ஆண்டுகள் தோறும், காலங்கள் தோறும், அவர் ஒரு மணவாட்டியை உருவாக்கிக் கொண்டு வந்தார். அவர் கிறிஸ்துவுக்காக ஒரு மணவாட்டியை உலகத்தில் ஜநிப்பித்தார். அவர் இந்த மணவாட்டியை ஜநிப்பித்த அதே விதமாக தனிப்பட்ட நபர்களையும் ஜநிப்பித்தார். 39சகோதரியின் சொப்பனம் கூறப்படும்போது நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை முன்னுரையாகக் கூறுகிறேன். பரிசுத்த ஆவியானவர் ஒரு கிறிஸ்தவனை முத்தரிப்பதற்கு முன்பு; அது தலைபாகத்தில் வந்து ஒரு பூரணமான பிரிவு (Unit) ஆவதற்கு முன்பு இவைகள் நிச்சயமாக அவனில் இருக்க வேண்டும். இப்பொழுது நமது சகோதரியின் சொப்பனம். அவளுக்கு பரிசுத்த ஆவி உள்ளதா இல்லையாவென்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். அவளுடைய கணவர் செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்தபோது, அவள் சாய்வுபடுக்கையில் படுத்து இளைப்பாறினாள் (என்னைப் போல அவளுக்கும் சிறு பிள்ளைகள் உண்டு. அவர்கள் எப்பொழுதும் சத்தமிட்டுக் கொண்டிருப்பார்கள்). எனவே அவள் சாய்வு படுக்கையில் இளைப்பாறிக் கொண்டிருந்த போது பத்து பதினைந்து நிமிடங்கள் உறங்கிவிட்டாள், அப்பொழுது அவள் ஒரு சொப்பனத்தைக் கண்டாள். ஓராண்டு காலமாக, இச்செய்தி போதிக்கப்படும் வரைக்கும், அவளால் சொப்பனத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவோ அல்லது சொப்பனத்தை ஒன்று சேர்க்கவோ முடியவில்லை. இதை நான் போதித்துக் கொண்டிருந்தபோது, அவளுக்கு சொப்பனம் முழுவதும் நினைவுக்கு வந்தது. அவள் ஜெபித்துக் கொண்டிருந்ததாக சொப்பனம் கண்டாள். அவள் சொப்பனம் காண்பதற்கு முன்பு, தரையில் இங்குமங்கும் நடந்து கொண்டு, கைகளைப் பிசைந்து கொண்டே, ''கர்த்தாவே, எனக்கு பரிசுத்த ஆவி உள்ளதா?அதை நீர் நிரூபித்துக் காண்பிப்பீரா என்று சந்தேகித்துக் கொண்டிருந்தாள். நான் கூச்சலிட்டதனால் அதைப் பெற்றுள்ளதாக சிலர் கூறுகின்றனர். நான் அந்நியபாஷை பேசினதால் அதை பெற்றுள்ளதாக சிலர் கூறுகின்றனர் (நாம் அதில் விசுவாசம் கொண்டுள்ளோம்.) ஆனால் நான் உண்மையில் அதைப் பெற்றிருக்கிறேனா?'' என்று எண்ணினாள். 40நான் அந்நியபாஷை பேசுதல், கூச்சலிடுதல் போன்ற எல்லா விதமான வெளிப்படையான செயல்களில் விசுவாசம் கொண்டிருக்கிறேன், அவை ஒவ்வொன்றையும் நான் விசுவாசிக்கிறேன். ஆனால் இது இல்லாமல் அது இருக்குமானால் ஏதோ தவறுள்ளது. பாருங்கள்? இப்பொழுது, பாருங்கள்? நீங்கள்... உங்களுக்கு மேலோடு (Shell) உள்ளது. கவனியுங்கள், அதைக் குறித்து அவள் கவலை கொண்டாள். எனவே அவள் சாய்வு படுக்கையில் படுத்தாள். அப்பொழுது அவளுடைய கணவர் படித்துக் கொண்டிருந்தார். அவள் உறங்கிவிட்டாள். அவள் ஒரு மலையின் மேல் இருந்ததாக சொப்பனம் கண்டாள். இந்த மலையில்... மேலானதாக... சொப்பனம் எழுதப்பட்டுள்ள தாள் என்னிடம் இல்லை. ஆனால் அது இப்படித்தான் என்று நினைக்கிறேன். மலையின் மேல் கற்பாறையினால் செய்யப்பட்ட ஒரு பெட்டி வைக்கப்பட்டிருந்ததாக அவள் சொப்பனம் கண்டாள். அவளுடைய கணவர் அவளுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தார். பெரிய உருவம் படைத்த ஒரு மனிதன் பணி உடை அணிந்தவனாய், சட்டை கைகளை மேலே சுருட்டிவிட்டுக் கொண்டு, அவள் அது வரை கண்டிராத மிகச் சுத்தமான தண்ணீரை மொண்டு மலையின் மேலிருந்த அந்த பெட்டியில் ஊற்றிக் கொண்டிருந்தான், அந்த கற்பாறைபெட்டி மலையின் மேல் இருந்தது. அந்த கற்பாறைபெட்டியில் தண்ணீர் நிற்கவில்லை. அது அங்கிருந்து வடிந்து அங்கிருந்த குப்பை குச்சிகள் அனைத்தும் எரித்து, மலையின் கீழே ஓடிவந்து அவளுடைய பாதங்களை வந்தடைந்தது. அவள் அந்த தண்ணீரில் நின்று கொண்டிருந்தாள், ஆனால் அது அவள் பாதங்களின் மேல் ஒட்டிக் கொள்ளவில்லை.அது ஏன் அந்த பெட்டியில் நிற்கவில்லை என்று அவள் கேட்ட போது, அந்த மனிதன், ''அது தண்ணீர் அல்ல. அது பரிசுத்த ஆவி. அதை எதுவுமே பிடித்து வைக்க முடியாது'', என்றான். 41அவன் சென்று ஒரு பெரிய வாளியைக் கொண்டு வந்தான். அதில் முழுவதும் தேன் இருந்தது. அவன் அந்த தேனைப் பெட்டியில் கொட்டி, ''இது பெட்டியில் நிற்கும்“ என்றான். அந்தப் பெட்டி வெடித்து தேனைச் சிந்திவிடும் என்று அவள் நினைத்தாள், ஆனால் அப்படி நடக்கவில்லை. தேன் அந்தப் பெட்டியிலே ஒட்டிக் கொண்டு நின்றது. அவள் மலையிலிருந்து கீழே இறங்கி வந்தாள். அவள் மலையின் கீழிருந்து திரும்பிப் பார்த்த போது, இந்த சுத்தமான, தெளிவான தண்ணீர், அது கடந்து வந்த பொருட்களினால் அழுக்கடையாமல், சுத்தமாயும் தெளிவாயும் ஐந்து ஆறுகளாக வேகமாய் வருவதைக் கண்டாள். அதன் பிறகு அதன் வேகம் குறைந்து, ஏறக்குறைய மறைந்து விட்டது. இந்த ஐந்து ஆறுகளும் மலையின் அடிப்பாகத்தை அடையுமா என்று வியந்தபோது, அவள் விழித்து கொண்டாள். அது ஏறக்குறைய சரியென்று நினைக்கிறேன். அல்லவா? சகோதரி ஷெப்பர்ட், 42அந்த கடிதத்தைத் திறந்து நான் படிப்பதற்கு முன்பு, அவளுடைய சொப்பனத்தை நான் கண்டேன். அப்படித்தான் சொப்பனங்களுக்கு அர்த்தம் உரைக்கப்படுகின்றன. உங்களில் அநேகர் என்னிடம் வந்து நீங்கள் கண்ட சொப்பனங்களை கூறியிருக்கிறீர்கள். அப்பொழுது நான், “சற்று பொறுங்கள், நீங்கள் முழுவதும் என்னிடம் கூறவில்லை (பாருங்கள்?)” என்று சொல்லி, நீங்கள் கூறத் தவறினவைகளை நான் கூறினதுண்டு. நீங்கள் கண்ட சொப்பனத்தை என்னால் கூற இயலவில்லை என்றால், அதற்கு நான் கூறும் அர்த்தம் சரியா இல்லையாவென்று உங்களுக்கு எப்படித் தெரியும் பாருங்கள்? நீங்கள் கண்ட சொப்பனத்தை நானும் காணவேண்டும். ஒரு தரிசனம் அந்த சொப்பனத்தை எனக்கு அறிவிக்க வேண்டும். ஒருவர் கண்ட சொப்பனத்தை நீங்களும் கண்டு, அவர் கூறுவதற்கு முன்பே நீங்கள் கூறுவீர்களானால், அப்பொழுது அந்த சொப்பனத்திற்கான வியாக்கியானத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள். 43நல்லது, அது வேதத்திலும் இருக்கிறதென்று நினைக்கிறேன். ஒரு முறை தானியேல் (அது சரிதானே?)... ஆம், அப்படித்தான் என்று நினைக்கிறேன். அதைக் குறித்து எனக்கு ஞாபகம் வந்தது. பாருங்கள்? நீங்கள் சொப்பனத்தைக் காண்பீர்களானால், நீங்கள் உரைக்கும் அர்த்தம் சரியாயிருக்கும். ஒருவர் உங்களிடம் அவர் கண்ட சொப்பனத்தைக் கூறிக் கொண்டிருக்கும் போது, நீங்கள் அவரை நிறுத்தி, “சற்று பொறுங்கள். அது இப்படி- இப்படி, அது இப்படி- இப்படியாக இருந்தது. மேலும் இப்படி இப்படியாக இருந்தது” என்று கூறினால். அவர், “முற்றிலும் உண்மை” என்கிறார். பாருங்கள்? அன்றொரு நாள் ஒருவர் தாம் கண்ட சொப்பனத்தை என்னிடம் கூறிக் கொண்டிருந்தார். அவர், ''நல்லது'' என்று சொப்பனத்தை சொல்லிக் கொண்டேயிருந்தார்... நான், “சகோதரனே, இந்த பாகத்தைக் கூற ஏன் மறந்து விட்டீர்கள்?” என்றேன். அவர், “எந்த பாகத்தை?'' என்று கேட்டார். நான், ''நீங்கள் ஒரு கல்லை மேலே எறிந்ததாக சொப்பனம் கண்டீர்கள். அதை நான் சுடப்போய், அதன் தூள்களில் சில என் கண்களில் விழுந்தன'' என்றேன். அவர், ''சகோ, பிரன்ஹாமே, அது முற்றிலும் உண்மை“ என்றார். அவர்கள் நேற்று அதன் கடைசி பாகத்தை வெளியே எடுத்தார்கள். எனவே அது தான். பாருங்கள்? பார்த்தீர்களா? நீங்கள் ஏன்...அதன் உண்மையைக் கூறுவதில்லை. ஆனால் பாருங்கள், நீங்கள் கண்ட சொப்பனத்தை அது வெளிப்படுத்திக் தருகிறது. அப்பொழுது அது சரியென்று நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். 44இதோ அவளுடைய சொப்பனத்தின் அர்த்தம். அவள் பரிசுத்த ஆவி பெறுவதைக் குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். அவள் மலையின் மேல் கண்ட பெட்டி கற்பாறை பெட்டியாதலால், கற்பாறைப் பெட்டி என்பது கல் ஆகும், அது “அறிக்கை” என்பதே, இயேசு வேதாகமத்தில் என்ன கூறினாரென்றால், அவர் சொன்னார். பேதுரு சொன்னான். இயேசு “மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யாரென்று சொல்லுகிறார்கள்?” என்று கேட்டார். அவர்கள், ''உம்மை எலியாவென்றும், மோசேயென்றும் சொல்லுகிறார்கள்“ என்றார்கள். அவர், ''நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு பேதுரு, ''நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து“ என்றான். 45இப்பொழுது, சிலர் சொல்கின்றனர்... கத்தோலிக்க சபை, ரோமன் கத்தோலிக்க சபை, கூறுவது என்னவெனில், இயேசு, ''இந்த கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை'' என்று கூறின போது அவர் குறிப்பிட்ட கல்... பேதுருவின் மேல் தான் அது கட்டப்பட்டதென்றும், பேதுருவே அந்தக் கல் என்றும் கூறுகின்றனர். ஏனெனில் பேதுரு என்றால் “சிறு கல்” என்று அர்த்தம். ''இந்தச் சிறு கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன். “பேதுருவின் மேல் அவர்கள் - அப்போஸ்தல வாரிசு - சபையைக் கட்டினர். பிராடெஸ்டெண்டு சபையோ, அது தவறென்று உரைத்து, அவர் மேலேயே அவர் சபையைக் கட்டிக் கொண்டதாகக் கூறுகின்றனர். இப்பொழுது, நான் இணங்கக் கூடாதென்பதற்காக அல்ல. ஆனால் அதை நான் காணும் விதம் எவ்வாறென்றால் இருவருமே தவறு. அவர் பேதுருவின் மேல் அதைக் கட்டவில்லை. தம் மேலேயும் அதைக் கட்டிக் கொள்ளவில்லை; ஆனால் அவர் யாரென்று பேதுருவுக்குக் கிடைக்கப் பெற்ற வெளிப்பாட்டின் மேல் அது கட்டப்பட்டது. பாருங்கள்? ''மனுஷ குமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்... “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து.'' ''யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான். மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. (ஏதோ ஒரு வேத சாஸ்திரப் பள்ளி. பாருங்கள்?) பரலோகத்திலிருக்கிற என் பிதாவே இதை உனக்கு வெளிப்படுத்தினார். நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லாகிய அறிக்கையின் மேல், இந்த வெளிப்பாட்டின் மேல் என் சபையைக் கட்டுவேன்.“ அன்று முதல் ... 46ஒவ்வொரு சபை காலத்திலும் அந்த அறிக்கையாகிய கல் இருந்து வந்து, இந்த லவோதிக்கேயா சபை காலம் வரைக்கும் அந்த அறிக்கையாகிய கல் தொடர்ந்து வந்துள்ளது. இப்பொழுது, நீங்கள் பரிசுத்த சபையை உண்டாக்க முடியாது. பரிசுத்த சபை அல்லது பரிசுத்த ஸ்தாபனம் என்பது கிடையாது, அதில் பரிசுத்த ஆவியைக் குறித்து பிரசங்கிக்கப் படலாம். ஆனால் அதில் நல்லவர்கள், கெட்டவர்கள், துரோகிகள், அலட்சியமாயுள்ளவர்கள் போன்றவர்களைக் காணலாம். எனவே ஒரு ஸ்தாபனம் அதைக் கொண்டிருக்க முடியாது. நீங்கள், “'நாங்கள் பெற்றுள்ளோம், மற்றவர்கள் அதைப் பெறவில்லை'' என்று கூற முடியாது. இல்லை ஐயா! பரிசுத்த ஆவி தனிப்பட்ட நபர்களின் மேல் ஊற்றப்படுகிறது. அது தனிப்பட்ட நபர். எனவே, கல் என்பது... இந்த பிற்காலத்திய பெந்தெகொஸ்தே சபை ஆதி சபை பெற்றது போலவே பரிசுத்த ஆவியைப் பெற்றது... காலங்கள் தோறும் அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டு வந்தனர், ஆனால் இப்பொழுது நாம் பெற்றுக் கொண்டிருக்கின்ற அளவிற்கு அல்ல. ஏனெனில் இது ஆதி சபையின் நிலை திரும்ப அளித்தலாகும். நாம் குத்து விளக்கை எடுத்துக் கொண்டால் - அல்பாவும் ஓமேகாவும் - அவர்கள் முதலாம் குத்து விளக்கைப் பற்ற வைத்தனர். அது பிரகாசமாகிக் கொண்டே சென்று, பிறகு வெளிச்சம் மங்கிக் கொண்டே வந்து, மறுபடியும் பிரகாசமாகிறது (பாருங்கள்?)- ஆதியும் அந்தமுமானவர். 47இந்தச் சபையின் காலத்தில், செய்தியானது சபைக்குள் ஊற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் சபை சரீரம், ஒன்றாக... இந்தக் கூடாரத்தை நாம் எடுத்துக் கொள்வோம். இங்குதான் அவள் சபைக்கு வருகிறாள். இந்த கூடாரம் பரிசுத்த ஆவி கூடாரமல்ல. அப்படியொன்றும் கிடையாது. இந்தச் சபைக்கு வரும் தனிப்பட்ட நபர்களே பரிசுத்த ஆவி கூடாரங்களாவர். அவர்களே பரிசுத்த ஆவியைத் தங்களுக்குள் கொண்டுள்ள கூடாரங்கள் -சரீரமாகிய கூட்டத்தைக் கொண்ட சபையல்ல. எனவே அதிலிருந்து ஒழுகி விடுகிறது. எனவே தண்ணீரை கற்பாறை பெட்டிக்குள் ஊற்றிக் கொண்டிருந்த இந்த மனிதன்- சபையின் செய்தியாளன் செய்தியை சபைக்குள் ஊற்றிக் கொண்டிருக்கிறான்... அந்த தண்ணீர் என்ன செய்தது?அதற்குள் இருந்த குப்பை அனைத்தையும் எரித்து விட்டது. அதைத் தான் பரிசுத்த ஆவி செய்கிறது: அதை எரித்து விடுகிறது. இப்பொழுது, இப்பொழுது, தேன்; சகோதர அன்பை, சகோதர சிநேகத்தைக் குறிக்கிறது. அது தான் இந்த காலம். இப்பொழுது தான் நான் சகோதர சிநேகத்தைக் குறித்து உங்களிடம் சொல்லி முடித்தேன் (பாருங்கள்?). நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் காலம். 48நீங்கள், “பாருங்கள், எனக்கு சகோ. நெவிலைப் பிடிக்காது. எனக்கு சகோ. ஜோன்ஸைப் பிடிக்காது, எனக்கு இன்னார் இன்னாரைப் பிடிக்காது” எனலாம். அப்படி யாரோ ஒருவரை. ஆனால் அவருக்கு ஏதோ ஒன்று நடந்து விட்டால், சகோதரனே, உங்கள் இருதயம் உடைந்து விடுகிறது. அது உங்களை ஏறக்குறைய கொன்று விடுகிறது பாருங்கள்?நாம் சகோதர சிநேகத்தை, ஒருவருக்கொருவர் அந்த உணர்ச்சியைக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு கூட்டம் ஜனங்களில் அதை கொண்டிருப்பதென்பது... நீங்கள் ஏன் அந்த சகோதரனுக்காக கவலை கொள்கிறீர்கள்? ஏனெனில் அவருடன் நீங்கள் பீடத்தண்டை அப்பம் பிட்டீர்கள் - இன்றிரவு நீங்கள் செய்யப்போவது போல் நீங்கள் அவருடன் ஐக்கியம் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அவருடன் கைகுலுக்கியிருக்கிறீர்கள். நீங்கள் அவருடன் சேர்ந்து ஆராதிக்கிறீர்கள். அவர் உங்கள் சகோதரன். அவர் மாம்சத்தில் ஏதாவதொன்றை செய்து, அதனுடன் நீங்கள் இணங்காமலிருந்து அவரிடமிருந்து சற்று ஒதுங்கி அவரைத் தள்ளி வைத்திருக்கக்கூடும் (அப்படி நீங்கள் செய்யக் கூடாது என்றாலும்). ஆனால் உங்கள் இருதயத்தின் ஆழத்தில்; அந்த சகோதரனுக்கு அல்லது சகோதரிக்கு ஏதாவதொன்று நேர்ந்து விட்டால், அது உங்களை ஏறக்குறைய கொன்று விடுகிறது. நான் நான் வயதானவன். ஒரு காலத்தில் நான் வாலிபனாயிருந்தேன், இப்பொழுது எனக்கு வயதாகிவிட்டது. என் வாழ்நாள் முழுவதும் அப்படி நடப்பதை நான் கண்டிருக்கிறேன். “அவருடன் எனக்கு இனி மேல் ஒரு தொடர்பும் இருக்கவே இருக்காது” என்று ஜனங்கள் கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால் அந்த மனிதனுக்கு ஏதாவதொன்று நேர்ந்து விட்டால், அது அவரை ஏறக்குறைய கொன்று விடுகிறது. அவர் உடனே, “ஐயோ, என் விலையேறப்பெற்ற சகோதரருடன் நான் ஒப்புரவாகாமல், அவர் போய்விட்டாரே (பாருங்கள்?)” என்று நினைக்கிறார். பாருங்கள்? பாருங்கள், அதுதான் சகோதர அன்பு. அது ஒட்டாதது போல் காணப்படுகிறது. ஆனால் அது ஒட்டுகிறது. தேன் ஒட்டிக் கொள்கிறது. 49இவள் மலையிலிருந்து இறங்கி அடிவாரத்தை அடைகிறாள்... இந்த மகிமையான தண்ணீர் மலையிலிருந்து ஐந்து ஆறுகளாகப் பெருக்கெடுத்து வருகிறது. ஐந்து என்பது கிருபையின் எண்: இயேசு, விசுவாசம், கிருபை (ஆங்கிலத்தில் J-e-s-u-s, F-a-i-t-h, G-r-a-c-e ஐந்து எழுத்துக்களைக் கொண்டுள்ளன- தமிழாக்கியோன்). ஐந்து கிருபையின் எண் ஆகும். ஐந்து ஆறுகள் இங்கு மேலேயுள்ள தொட்டியிலிருந்து கீழே இங்கு ஓடி வருகின்றன. இந்த காலங்கள் ஒவ்வொன்றிற்கும் அந்த கல் அறிக்கை உண்டாயிருந்தது. நித்திரையடைந்த பரிசுத்தவான்கள். இந்தக் காலம் வரைக்கும் காத்து, காத்து, காத்து, காத்துக் கொண்டிருக்கின்றனர் (பாருங்கள்?), ஆனால் விரைவில் கிறிஸ்துவிலிருந்து ஊற்றப்படும் பரிசுத்த ஆவி வந்து சபையை முத்தரிக்கும். அதன் பிறகு சபை எடுத்துக் கொள்ளப்படும். அது தேவனுடைய முழு 'யூனிட்'டாக, கிறிஸ்துவுக்கு மணவாட்டியாக இருக்கும். கிறிஸ்துவே எல்லாவற்றிற்கும் தலையாயிருப்பார். நான் கூறுவது புரிகிறதா? இப்பொழுது, அவள் வியந்தாள்... அவள் கண்ட சொப்பனத்தில் அவள், இந்த சிறு ஆறு அடிவாரத்தை அடையுமா என்று வியந்தாள். பாருங்கள்? அது உலரத் தொடங்கினது. அவளே.... இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். அவளுக்குப் பரிசுத்த ஆவி உள்ளதாவென்று அவளே தன்னைக் குறித்து வியந்து கொண்டிருந்தாள். 50இதை சில நாட்களுக்கு முன்பு கூறாமல் விட்டுவிட்டேன் - சபையானது இதை கிரகித்துக் கொள்ள போதிய அளவுக்கு ஆவிக்குரியதாய் இருக்கும் என்று நான் எண்ணின காரணத்தால் (இப்பொழுது ஒலிப்பதிவை நான் நிறுத்தி விடுவது நலம். ஏனெனில் இது மற்ற சகோதரர்களினிடையே செல்வதை நான் விரும்பவில்லை). நீங்கள் அந்நியபாஷைகள் பேசலாம். கூச்சலிடலாம், நடனமாடலாம், பிசாசுகளைத் துரத்தலாம், என்ன வேண்டுமானாலும் செய்து இன்னுமாய், பரிசுத்த ஆவியைப் பெறாமலே இருக்கலாம். பிசாசுகள் தங்களுக்குக் கீழ்படிந்ததனாலே சீஷர்கள் சந்தோஷத்துடன் திரும்பி வந்தார்கள் அல்லவா?அப்பொழுது இயேசு... அவர்கள் மத்தியில் யூதாஸும் இருந்தான். இயேசு அவர் வரும் அந்நாளில், “அநேகர் என்னிடத்தில் வந்து: ”கர்த்தாவே, உமது நாமத்தினாலே நாங்கள் பிசாசுகளைத் துரத்தி, மகத்தான கிரியைகளைச் செய்தோம் அல்லவா?என்பார்கள். அப்பொழுது நான்: அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள். நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை என்பேன்“ என்று கூறவில்லையா. இப்படிப்பட்டவை பரிசுத்த ஆவியின் அறிகுறிகளல்ல. அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள. 51நீங்கள், “சகோ. பிரன்ஹாமே, நாங்கள் அந்நியபாஷை பேசலாமா?” என்று கேட்கலாம். நிச்சயமாக அவை தேவனுடைய வரங்கள், ஆனால் அவர்களுக்குள் இந்த நற்பண்புகள் இல்லாமல் இந்த வரங்கள் மாத்திரம் இருக்குமானால், அது அவிசுவாசிக்கு இடறலாய் அமைகின்றது. அது தேவனால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. இதை நீங்கள் முதலில் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் விசுவாசம், வல்லமை, ஞானம், தன்னடக்கம், பொறுமை, தேவபக்தி, சகோதர அன்பு இவைகளைப் பெற்றிருந்தால், பரிசுத்த ஆவி இறங்கி வந்து ஒரு 'யூனிட்'டாக' முத்தரிக்கிறார் -அவர் சபை காலங்களை ஒரு'யூனிட்'டாக' முத்தரிப்பது போல். அவர் தமது மணவாட்டியை உண்டாக்கும் விதமானது தான் அவர் தம்முடைய தனிப்பட்டவர்களை உருவாக்கும் விதமே, ஏவாள் ஆதாமிலிருந்து உருவாக்கப்பட்டது போல, அவன் விலாவிலிருந்து எடுக்கப்பட்ட எலும்பிலிருந்து அதே விதமாக, அதே பொருளினால் அவள் உண்டாக்கப்படுகிறாள். இவைகளை நீங்கள் முதலாவதாக பெற்றிருத்தல் அவசியம். அவைகளை நீங்கள் ஆள் மாறாட்டம், போலித்தன்மை செய்ய முடியாது. அவைகளைப் பெற்றுள்ளதாக நீங்கள் பாவனை செய்ய முடியாது. அவை தேவனால் அனுப்பப்பட்டு தேவனால் பிறந்திருக்க வேண்டும். அதை அப்படியே நடித்துக் காட்டுதல் குழப்பத்தை தான் உண்டாக்கும். ஒரு பிணந்தின்னிப் பருந்து தன் சிறகுகளில் புறவின் சிறகுகளை ஒட்ட வைத்துக் கொண்டு, “பாருங்கள், நான் ஒரு புறா” என்று சொல்ல முடியுமா என்று நான் கூறியதுண்டு. அது புறவல்ல, அது புறவல்ல, அது பருந்து. ஒரு கறுப்பு பறவை மயில் இறகுகளை தன் சிறகில் சொருகிக் கொண்டு, “பாருங்கள்...” என்று கூறுவதை உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? அது தன் சிறகில் சொருகிக் கொண்ட ஒன்று. அது உள்ளேயிருந்து வெளியே வரவேண்டும். அப்பொழுது அது கிறிஸ்தவ மார்க்கத்தை தோற்றுவிக்கும். தேவன், பரிசுத்த ஆவியின் வல்லமையினால்... 52நமது சகோதரி மலையின் அடிவாரத்தை அடைந்தபோது அவளுடைய பாதங்கள் தண்ணீரில் நனைந்தன. சகோதரி ஷெப்பர்ட் தர்ம குணம் படைத்தவள் என்று நாமெல்லாரும் அறிவோம்... அவளுடைய வீடு எப்பொழுதும் திறந்துள்ளது. அவளும் சகோதரனும் - அவன் நாடோடி, பிச்சைக்காரன், யாராயிருந்தாலும் அவர்களுக்குக் கவலையில்லை - அவர்கள் அவனுக்கு ஆகாரம் அளித்து, அவனுகுதவி செய்ய தங்களால் கூடுமான எதையும் செய்வார்கள். ஓ தேவனே அதை அங்கீகரித்தார், அவளுடைய அஸ்திபார பாகத்தை. இங்கு... இப்பொழுது, இந்த பாடத்தை படித்துக் கொள்ளுங்கள்: இது தான் தவறு. (இதை ஒலிப்பதிவு செய்ய நான் ஒலிப்பதிவுக் கருவியை போடக் கூடாது). பிரன்ஹாம் கூடாரத்திலுள்ளவர்களிடமுள்ள தவறு இதுவே. பாருங்கள்? இரண்டு விதமான விசுவாசம் உண்டு, இரண்டு விதமான வல்லமை - அன்றொரு நாள் நான் கூறினது போல்; இரண்டு விதமான ஞானம் உண்டு; இரண்டு விதமான தன்னடக்கம் ('temperance',).ஒருவர் இது மதுவிலக்கை குறிப்பதாக எண்ணுகிறார். அவர்களுக்கு... தேவன் அப்படிப்பட்ட தன்னடக்கத்தைக் குறித்துக் கூறவில்லை. அது நீங்கள் பெற்றுள்ள அந்த தேவபக்தியற்ற, அடக்கமுடியாத கோபத்தன்மை (temper) யாகும் - எரிந்து விழுதல், வீண் சந்தடி போன்றவை. 53பொறுமை முதலியன. இதன் போலியான, பாசாங்கு செய்யும், இயற்கை சுபாவம் அளித்த விசுவாசம், இயற்கை சுபாவம் அளித்த வல்லமை, இயற்கை சுபாவம் அளித்த தன்னடக்கம் போன்றவை உள்ளன. இவை யாவும் இயற்கை சுபாவம் அளித்தவை. நமது விசுவாசத்தின் மிகப் பெரிய பாகம் மனதில் எழும் விசுவாசம் (mental faith). (ஒலி நாடாவில் காலி இடம்- ஆசி) வார்த்தையைக் கேட்பதனால் தேவனை அறிந்து கொள்ளும் உணர்வு மனதில் எழுகிறது. ஆனால், ஓ சகோதரனே, இது மேலேயிருந்து வந்து, எப்பொழுதாவது இதை தாக்குமானால், அது தேவபக்தியுள்ள, ஆவிக்குரிய விசுவாசமாகிவிடுகிறது. அந்த விசுவாசம் என்ன செய்கிறது? அந்த விசுவாசம் வார்த்தையை மாத்திரம் அடையாளம் கண்டு கொள்கிறது. யார் என்ன கூறின போதிலும் அது வார்த்தையை மாத்திரமே அடையாளம் கண்டுகொள்கிறது. ஏனெனில் ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது (வார்த்தை இப்பொழுதும் தேவனாயுள்ளது). அந்த வார்த்தை தேவனாகி நம்மிடையே வாசம் பண்ணினார். வார்த்தையானது நமது விசுவாசத்தில் ஊற்றப்படும் போது, நமது மனதில் எழுந்த விசுவாசம் ஆவிக்குரிய வெளிப்பாடாகி விடுகிறது... ''இந்த அஸ்திபாரத்தின் மேல் என் சபையைக் கட்டுவேன்'', பாருங்கள், சபையைச் சேர்ந்து கொள்ளுதல் என்னும் அறிவினால் விளைந்த கருத்தின் மேல் அல்லது வேறெந்த அறிவினால் விளைந்த கருத்தின் மேல் நீங்கள் பெற்றுள்ள மனதில் எழுந்த விசுவாசத்தின் மேல் அல்ல, ஆனால் வெளிப்பாட்டின் மேல், கிருபையின் ஆறுகள், நீங்கள் பெற்றுள்ள மனதில் எழுந்த விசுவாசத்தின் மேல் ஊற்றப்படும்போது, அப்பொழுது இதன் மேல், ஆவிக்குரிய வெளிப்பாட்டின் மேல், “என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை''. பாருங்கள்? பாதாளத்தின் வாசல்கள் அதற்கு எதிராய் இருக்கும், ஆனால் அது ஒருக்காலும் மேற்கொள்ளாது என்பதை அது காண்பிக்கிறது. ஊ, என்ன மகிமையான காரியம். 54இப்பொழுது, பாருங்கள், விசுவாசம், இந்த ஐந்து ஆறுகள்... ஒரு 'சாக்' (chalk) துண்டு இங்கு வைத்திருந்தேன், அவன் அதைக் கொண்டு வரவில்லையென்று நினைக்கிறேன். இதன் வழியாக வருவதை நீங்கள் காணும் ஐந்து ஆறுகள் இதை ஒன்றாக பக்குவப்படுத்துகின்றன. அது எபேசு சபையை உண்டாக்கிய பரிசுத்த ஆவி. அது சிமிர்னா சபையை எரித்த பரிசுத்த ஆவி. அது இருளின் காலங்களில் பெர்கமு சபைக்கும் தீயத்தீரா சபைக்கும் அளித்த பரிசுத்த ஆவி. அது காலங்கள் தோறும் இப்படியாக தெரிந்து கொள்ளப்பட்டவர்களை ஸ்தாபனங்களிலிருந்து வெளியே இழுத்து மணவாட்டியாக உருவாக்கிய பரிசுத்த ஆவி, பரிசுத்த ஆவி வெளியே அழைத்த, தெரிந்து கொள்ளப்பட்ட, முன்குறிக்கப்பட்ட, இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி ஒருத்தியுண்டு. அது இந்த காலத்திலுள்ள பரிசுத்த ஆவி. அந்த காலத்திலுள்ள பரிசுத்த ஆவி, அந்த, அந்த, அந்த காலங்களில்,மேல் வரைக்கும் பரிசுத்த ஆவி. இப்பொழுது தனிப்பட்ட நபர்களில் இந்த குணங்கள் (அறிவு, தன்னடக்கம் போன்றவை)- இவை நமது விசுவாசத்துடன் சேர்க்கப்பட்டு பிறகு தலைக்கல் வரும்போது பரிசுத்த ஆவி இவைகளை ஒன்றாக இணைக்கிறது. அதுவே பரிசுத்த ஆவியின் அபிஷேகம். ஆகையால் தான் அது இன்று மிகக் குறைவாகக் காணப்படுகிறது. 55இங்கு நான் காணட்டும். இங்கு சில வேத வசனங்களை எழுதி வைத்திருந்தேன். அவளுடைய சொப்பனத்தை விவரிக்கும் ஒரு படத்தை வரைந்து வைத்திருந்தேன். பாருங்கள் உங்களால் அங்கிருந்து இந்த படத்தைக் காண முடியாது. இப்பொழுது, பரிசுத்த ஆவியினிடத்திலிருந்து, என்ன வருகிறது, அப்பொழுது அவர் உங்களுக்கு இயற்கைக்கு மேம்பட்ட விசுவாசத்தை, இங்கே கீழே அமைந்திருக்கின்ற அந்த ஆவிக்குரிய விசுவாசத்தை அளிப்பார். அந்த ஆவிக்குரிய விசுவாசம் வார்த்தையை மாத்திரம் அடையாளம் கண்டு கொள்ளும், யார் என்ன கூறினாலும் உபயோகமில்லை. அந்த வார்த்தையை மாத்திரமே அறிந்திருக்கும். யாராகிலும் ஒருவர், ''அற்புதங்களின் நாட்கள் கடந்து சென்றுவிட்டன என்று சொன்னால், அந்த விசுவாசம் வார்த்தையை மாத்திரமே அறிந்திருக்கும். யாராகிலும் ஒருவர், “பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பது கிடையாது” என்று கூறினால், அந்த விசுவாசம் வார்த்தையை மாத்திரமே அறிந்திருக்கும். அது தான் உண்மையான, ஆவிக்குரிய விசுவாசம். பார்த்தீர்களா? அது உண்மை. பாருங்கள்? அது வார்த்தையை மாத்திரமே அறிந்திருக்கும். அதுதான் நெம்பர் ஒன்று. நெம்பர் ஒன்று உங்களிடத்தில் வருகிறது. பரிசுத்த ஆவி இங்குள்ள உங்கள் மனதில் எழுந்த விசுவாசத்துக்கு வருகிறது. அது மனதில் எழுந்த விசுவாசத்துக்கு வந்து அதை ஆவிக்குரிய விசுவாசமாக மாற்றிவிடுகிறது. அப்பொழுது ஆவிக்குரிய விசுவாசம் வார்த்தையை மாத்திரமே அடையாளம் கண்டு கொள்ளும். 56இப்பொழுது நெம்பர் இரண்டு - மூன்று; அப்பொழுது நீங்கள் ஆவிக்குரியவர்களாக; நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வீர்கள். அந்த பரிசுத்த ஆவி இதை மூடும் போது, இவையனைத்தையும் உங்களுக்குள் முத்தரிக்கிறது. உங்கள் விசுவாசம் தொடங்கி மேல் வரைக்கும், பரிசுத்த ஆவி உங்களை கிறிஸ்துவுடன் முத்தரிக்கிறது. அப்பொழுது நீங்களும் கிறிஸ்துவும் ஒன்றாகிவிடுகின்றீர்கள். ஆமென்! (இதை வழியிலிருந்து எடுத்துப் போடுங்கள். இது என் கரங்களை உறுத்துகின்றது). நீங்கள் ஒன்றாகின்றீர்கள், பாருங்கள், நீங்களும் கிறிஸ்துவும் ஒன்றாக வாழுகின்றீர்கள், ''நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்'' பாருங்கள்? அப்பொழுது அது தேவனாகிய கர்த்தரின் முத்தரிக்கப்பட்ட 'யூனிட்'டாகி விடுகிறது. அதன் பிறகு அவர்கள் உறுதிப்படுத்தப்பட்டு, ஸ்தானத்தில் பொருத்தப்படுகின்றனர். நேரம் வரும் போது, அவர்கள் உறுதிப்படுத்தப்பட்ட தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாகின்றனர். 57உங்களுக்கு நினைவிருக்கிறதா, மத்தேயு புத்தகம் 17-ம் அதிகாரம், 1 முதல் 5 வசனங்கள், மறுரூபமலையின் மேல் இயேசு? அதைக் குறித்த என் பிரசங்கத்தைக் கேட்டிருக்கிறீர்கள்... ''அவருக்குச் செவிகொடுங்கள்“ என்னும் பிரசங்கத்தை ஒரு ஆண்டுக்கு முன்பு இங்கு பிரசங்கித்தேன். அது மிகவும் மக்களால் விரும்பப்பட்டது, அவருக்குச் செவி கொடுங்கள் என்னும் பிரசங்கம், எபேசியர் 1:6ல் மகன் தன் ஸ்தானத்தில் வைக்கப்படுவதும் கூட: தேவன் நம்மைச் சுவீகாரப்புத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார். பாருங்கள், ஒரு குடும்பம்... குடும்பத்தில் ஒரு ஆண் பிள்ளை பிறக்கும் போது, அது ஆண்பிள்ளையாயிருக்கிறது. அந்த பிள்ளையை வளர்க்க ஆசான்கள் இருக்கின்றனர். அவன் சரியான குமாரனாக வளராமல் போனால், அவன் சுதந்தரவாளியாக முடியாது. ஆனால் அவன் தகப்பனுக்கு கீழ்ப்படிகிற சரியான மகனாக வளர்ந்தால், அவன் சுவீகாரப்புத்திரனாகி தன் ஸ்தானத்தில் வைக்கப்படுகிறான். தகப்பனுக்குள்ள எல்லாவற்றிற்கும் அவன் சுவீகாரப் புத்திரனாகிறான். அதைத் தான் தேவன் மறுரூபமலையின் மேல் செய்தார். தம் சொந்த குமாரன் எல்லா சோதனைகளையும் சகித்து, சரியான குமாரன் என்று நிரூபித்த போது (பாருங்கள்?), அவரை மறுபரூபமலையின் மேல் கொண்டு சென்று அவரை நிழலிட்டார். 58உங்களுக்குத் தெரியும், பழைய ஏற்பாட்டில் அவர்கள் குமாரனுக்கு நல்ல உடை உடுத்தி, பொது ஜனங்களுக்கு முன்னால் நிறுத்துவார்கள். அவர்கள் ஸ்தானத்தில் வைக்கும் நாம் சுவீகாரம் என்றழைக்கும் - வைபவத்தை நடத்துவார்கள். கலாத்தியர் நிரூபத்தில் பரி. பவுல் இதை சுவீகாரபுத்திரர் என்றழைக்கிறான் என்று நினைக்கிறேன். இப்பொழுது, குமாரனை ஸ்தானத்தில் வைக்கும் போது... போதகர்களுக்கும் ஆவிக்குரிய வேத வாசகர்களுக்கும் குமாரனை ஸ்தானத்தில் வைப்பது என்னவென்று தெரியும். வேறு விதமாகக் கூறினால், ஒரு குமாரன் பிறக்கும் போது அவன் குமாரனாயிருக்கிறான். அங்குதான் நமது பெந்தெகொஸ்தே ஜனங்கள் தவறு செய்கின்றனர். பரிசுத்த ஆவியினால் ஒரு குடும்பத்தில் பிறப்பதென்பது சரியே, ஆனால் நாம் சரியான விதமான பிள்ளைகளாய், சரியான ஆசானால் கற்பிக்கப்பட வேண்டும். பாருங்கள்? 59பழைய காலத்திலிருந்த ஒரு மனிதன் தன் மகனை குறித்து சிந்தனை பண்ணி, அவன் சரியான மகனாக வேண்டுமென்று விரும்பி, அவனுக்கு சிறந்த ஆசானை நியமிக்கிறான். ஒரு சிறந்த ஆசிரியனை-ஏனெனில் அவனுடைய மகன், தன் தகப்பனைப் போல் ஆக வேண்டுமென்று அவன் விரும்புகிறான். பாருங்கள், எனவே அவன் நல்ல ஆசானை நியமிக்கிறான். உலகிலுள்ள ஒரு மனிதன் சிறந்த ஆசானை நியமிக்க வேண்டுமென்று எண்ணமுடையவனாயிருக்கும் போது, நமது பிதாவாகிய தேவனுடைய எண்ணம் எப்படியிருக்கும்? அவர் இதற்கென்று பேராயர்களையோ, கார்டினல்களையோ, குருவானவர்களையோ நியமிக்கவில்லை. அவர் பரிசுத்த ஆவியை நமது ஆசானாக நியமித்திருக்கிறார். பரிசுத்த ஆவியே நமது ஆசான். அவர் சபையிலிருக்கிறார். அவர் செய்தியை பிதாவினிடம் கொண்டு செல்கிறார். தகப்பன் - ஆசான் தகப்பனிடம் வந்து, ''நல்லது, தகப்பனே...“ என்று சொன்னால்; தனக்கு புகழைத் தேடிக் கொள்ள விரும்பும் ஒரு ஆசானை தகப்பன் விரும்பமாட்டான். ஆசான், ''ஓ, நான் தகப்பனிடம் பிள்ளையைக் குறித்து ஏதாவதொன்றைக் கூறினால்... அந்த பையன் துரோகி என்பது உண்மையே. ஆனால் அதை கூறினால் எனக்கு சம்பள உயர்வு கிடைக்காது'', என்று சரியான ஆசான் உத்தமமானவனாக, உண்மையைக் கூற வேண்டும். பரிசுத்த ஆவி தேவனுடைய சமூகத்தில் வரும்போது, நம்மைக் குறித்த உண்மையைக் கூறுகிறார். ஆம். 60எனவே அவர் வருகிறார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? “நீர் உமது குமாரத்திகளிடம் தங்கள் தலைமயிரை கத்தரித்துக் கொள்ளக் கூடாது என்று கூறியிருக்க, அவர்கள் கத்தரித்துக் கொள்கின்றனர். உமது குமாரர்கள் ஸ்தாபன மனப்பான்மையைக் கொண்டவர்களாய், ஒருவரோடொருவர் இணங்குவதில்லை. இதற்கு பதிலாக இதை, இதற்கு பதிலாக அதை அவர்கள் நுழைத்துவிட்டனர்'' என்று கூறும்போது அவருடைய முகம் சிவக்கும்! அந்த ஆசான் தகப்பனிடம் வந்து, ”ஓ, என்னே! உமது மகன் உண்மையான மகன், அவன் தகப்பனைப் போலவே இருக்கிறான்'' என்று கூறுவதைக் கேட்க அவர் எவ்வளவு மகிழ்ச்சியடைவார்! ஊ, அவர் எவ்வளவாக மகிழ்ச்சியடைவார்! பாருங்கள்? அப்பொழுது தகப்பன் பெருமையினால் நிறைந்து, “இவன் என் குமாரன்” என்பான். அதைத் தான் தேவன் மறுரூபமலையின் மேல் செய்தார். மோசேயும் எலியாவும் அங்கு காணப்பட்டார்கள் என்பதைக் கவனியுங்கள். இயற்கைக்கு மேம்பட்ட ஒன்று நடைபெற்றது; பேதுரு, உணர்ச்சிவசப்பட்டான். அவன், “ஒன்று உமக்கும், ஒன்று மோசேக்கும், ஒன்று எலியாவுக்குமாக மூன்று கூடாரங்களைப் போடுவோம்” என்றான். அவன் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது தேவன் அவனுடைய வாயை அடைத்து, “இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன். இவருக்கு செவி கொடுங்கள்” என்றார், தேவன் தம்மை பின்புறத்தில் வைத்துக் கொண்டு, “இவர் என்னுடைய நேச குமாரன்'' என்று அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தார். 61மோசே நியாயப்பிரமாணத்துக்கு எடுத்துக்காட்டாய் இருந்தான். தீர்க்கதரிசிகள் அவருடைய நீதிக்கு (Justice) எடுத்துக் காட்டாய் இருந்தனர். அவருடைய நியாயப்பிரமாணத்தினால் நாம் வாழ முடியாது . அவருடைய நீதியினால் நாம் வாழ முடியாது . அவருடைய நீதியை நான் கேட்கவில்லை. அவருடைய இரக்கத்தையே கேட்கிறேன் - நீதியையல்ல. அவருடைய நியாயப் பிரமாணத்தை என்னால் கைக்கொள்ள முடியாது. அவருடைய நீதியின் நிர்ணயத்தை என்னால் அடைய முடியாது. ஆனால் அவருடைய இரக்கம் எனக்குத் தேவை. நியாயப்பிரமாணமும் நீதியும் இயேசுவில் சந்திக்கப்பட்டது என்று தேவன் கூறினார்.''இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவி கொடுங்கள். அது அவரே, அது அவர் தான்“ என்றார். பழைய ஏற்பாட்டில் அந்த குமாரன் சுவீகரிக்கப்பட்டு குடும்பத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்போது, காசோலையில் அவனுடைய கையெழுத்து அவனுடைய தகப்பனுடைய கையெழுத்தைப் போலவே தகுதியுள்ளதாயிருக்கும். ஆம், ஐயா. அவர்களுக்கு... அந்நாட்களில் அவர்களுக்கு ஒரு மோதிரம் இருந்தது - ஒரு அடையாளம். ஒரு சிறு அடையாளம் அவர்கள் அதன் மேல் துப்பி (சகோ. பிரன்ஹாம் துப்பும் சத்தம் உண்டாக்கி தன் கை முட்டியினால் பிரசங்க பீடத்தைக் குத்துகிறார்- ஆசி) அதை விரலில் போடுவார்கள். அது ஒரு அடையாளமாயிருந்தது. அது ஒரு... அவன் தகப்பன் மோதிரத்தை அணிந்தான். அவனுடைய அடையாளம், அது தன் தகப்பன் அணிந்திருப்பதைப் போலவே தகுதியுள்ளதாயிருந்தது. இயேசு கீழ்ப்படிந்த போது - இயேசு தேவனுக்கு கீழ்ப்படிந்த போது, தேவன் அவரை தமது ஸ்தானத்தில் நிறுத்தி “இது அவர்” என்றார். இப்பொழுது, ஒரு அங்கத்தினன் பரிசுத்த ஆவியினால் தேவனுடைய குடும்பத்தில் பிறந்து, அவனில் இந்த நற்பண்புகள் உள்ளதாக நிரூபிக்கும் போது; தேவன் வல்லமை, அறிவு, தன்னடக்கம், பொறுமை, சகோதர சிநேகம், தேவபக்தி இவைகளை உங்களில் காணும்போது, அப்படிப்பட்டவனை தேவன் முத்திரித்து அவனை ஸ்தானத்தில் நிறுத்துகிறார். அங்கு, அப்பொழுதுதான் நீங்கள் தேவனுடைய குமாரரையும் குமாரத்திகளையும் காண்கிறீர்கள். 62''நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்'' என்று எபேசியர் 4:30 உரைக்கிறது. நித்திய பாதுகாப்பில் நம்பிக்கை கொண்டிருக்கிற பாப்டிஸ்டுகளாகி உங்களில் சிலர், அந்த கட்டத்துக்கு வருவீர்களானால், அது நித்திய பாதுகாப்பு என்று உங்களை ஆதரிப்பேன். அந்த நிலைக்கு நீங்கள் வருவீர்களானால். ஆனால் யாராவது ஒருவர் “நான் சென்று பாப்டிஸ்டு சபையைச் சேர்ந்து கொள்வேன். நான் ஒரு பிரஸ்பிடேரியன், நான் நித்திய பாதுகாப்பு பெற்று கொண்டு விட்டேன்” என்று கூறினால், அது தவறு. உங்கள் சொந்த வாழ்க்கை, அதை நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லை என்பதை நிரூபிக்கிறது. இது அங்கு இருந்து, தேவன் உங்களை சுவிகாரப் புத்திரராக்கிக் கொண்டு, உங்களை பரிசுத்த ஆவியினால் அவருடைய இராஜ்யத்துக்குள் முத்தரிக்கும் வரைக்கும்... அதன் பிறகு அதிலிருந்து விலக வழியேயில்லை. நீங்கள் நித்திய காலமாக பாதுகாப்பில் இருக்கிறீர்கள். ''விசுவாசியுங்கள்- நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று நீங்களும், தேவன் உங்களுக்கு அளித்த நற்பண்புகளும் முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்“. 63முன்குறிக்கப்பட்ட மணவாட்டி ஒருத்தி இருக்கிறாள் என்று நான் விசுவாசிக்கிறேன். கறைதிரையற்ற சபையைப் பெற்றுக் கொள்வதாக தேவன் கூறியுள்ளார் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் முன்குறித்தலில் நம்பிக்கை கொண்டவன். மணவாட்டி முன்குறிக்கப்பட்டிருக்கிறாள் என்று. அவள் அங்கு இருந்துதான் ஆக வேண்டும். நானும் அவளுடன் இருப்பேன் என்று நம்புகிறேன், அது... பாருங்கள்? நான் அவளுடன் இருக்கிறேன். இவைகளெல்லாம் தேவனால் அங்கீகரிக்கப்பட்டு அதன் பிறகு அவருடைய ராஜ்யத்துக்குள் முத்திரிக்கப்படும் வரைக்கும், என் சொந்த இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்பட வேண்டியது என்னைப் பொறுத்தது. பரிசுத்த ஆவி அங்கு உள்ளது. தேவனுடைய உண்மையான கிரியைகள் அங்குள்ளன. அது மீட்கப்படும் நாள் வரைக்கும் முத்திரிக்கப்பட்டுள்ளது. அதுதான் அவள் சொப்பனம். அது மிகவும் அழகானது என்று எண்ணினேன். 64ஆகையால் அவள் அதை செய்யும் போது, சபையானது - இல்லை தனிப்பட்ட நபர் - அந்த இடத்துக்கு வரும் போது.... சபையானது அங்கிருக்கப் போகின்றது. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை தெளிவாகக் கூறுகிறேன்: அங்கிருக்க சபை முன்குறிக்கப்பட்டுள்ளது. அதில் நானும் இருக்க விரும்புகிறேன், அதில் நான் இருக்கக்கூடிய ஒரே வழி, அதன் பாகமாக இருப்பதே. அதன் பாகமாக நான் எப்படி இருக்க முடியும்? அதில் இருப்பதன் மூலமே. அதற்குள் நான் எப்படி செல்ல முடியும்? ஞானஸ்நானத்தின் மூலம். 1- கொரிந்தியர் 12 , ''நாம் எல்லோரும் ஒரே ஆவியினால் ஒரே சரீரத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம். “ஒரே சரீரம், அதற்குள் ஞானஸ்நானம் பண்ணப்படுதல். 65இந்த சிறு காரியங்களை உங்கள் மேல் ஒட்டவைத்துக் கொண்டு, “நான் அந்நியபாஷைகளைப் பேசினேன், ஆகையால் பெற்றுக் கொண்டிருக்கிறேன்” என்று கூறமுடியாது. நீங்கள் அங்கு சென்று, கோபமடைந்து, சபித்து, இப்படியெல்லாம் செய்கிறீர்கள் (பாருங்கள்?), அது வறவறவெனக் கத்தும் பறவையில் (jay bird) மயிலின் இறகுகளைச் சொருகுவதாகும். நீங்கள் அப்படி செய்ய முடியாது. உங்கள் சொந்த வாழ்க்கையே அது அப்படியல்ல என்பதை நிரூபிக்கும். ஆனால் இவைகள் தேவனால் உங்களில் இயங்கும்போது நீங்கள் முத்திரிக்கப்பட்டுவிட்டீர்கள். அதன்பிறகு அதைக் குறித்த எவ்வித அணிந்து கொள்ளும் பாவனையும் இருக்காது. நீங்கள் நீங்களாகவே இருப்பீர்கள். அப்பொழுது தரிசனங்கள், தேவனுடைய பரிபூரணமான பரிசுத்த ஆவியின் கிரியைகள் இவையெல்லாம் வெளிப்படும். ஏன்? நீங்களும் கிறிஸ்துவும் ஒன்றாகி விட்டீர்கள், (அதை புரிந்து கொண்டீர்கள் என்று நம்புகிறேன்), நீங்களும் கிறிஸ்துவும் ஒன்றாகிவிட்டீர்கள். நான் கூற நினைத்த வேறு சிலவற்றை இங்கு எழுதி வைத்திருக்கிறேன். அது நம்மை ஜீவனுள்ள இடத்திற்குக் கொண்டு வருகிறது. அப்பொழுது நீங்கள் -நித்திய ஜீவனைப் பெறுகிறீர்கள். 66இங்கு நான் கிரேக்க வேதாகமமாகிய 'எம்பாடிக் டயக்ளாட்'டை (Emphatic Diaglott) வைத்திருக்கிறேன். அன்றொரு நாள் ஒரு வசனத்தை அதில் படித்தேன். யோவான் 14 - இல்லை, யோவான் 3: 16ல் “'நித்திய ஜீவன்'' என்று ஓரிடத்தில் உள்ளதை நாம் காண்கிறோம். ஆனால் கிரேக்க வேதாகமத்தில் எபிரெய மொழியில் அது ”முடிவில்லாத ஜீவன்“ (Life without end) என்று எழுதப்பட்டள்ளது. அதற்கான கிரேக்கச் சொல் 'ஏய்னியோயன்' (A-i-n-i-o-a-n)... அது 'இயான்' (acon) என்பது போன்றது. 'இயான்' என்பது இடைவெளி... அது எண்ண முடியாத எண்ணிக்கை. அது லட்சங்களிலும், கோடிகளிலும், நூற்றுக்கணக்கான கோடிகளிலும் அதிகமானது. ஆனால் இது காலத்தின் 'ஏயோனியன்' ஆகும். அதற்கு ஈடான ஆங்கிலச் சொல் 'இடர்னல்' (atemal). அதை நாம் இடர்னல், ஏயோனியன், முடிவற்ற ஜீவன் என்று அறிந்திருக்கிறோம். உங்களுக்கு முடிவற்ற ஜீவன் இருக்குமானால், நீங்கள் எப்படி அழிந்து போக முடியும்? நீங்கள் நித்தியத்தின் ஒரு பாகமாகிவிடுகிறீர்கள். ஒன்று மாத்திரமே நித்தியமானது. சாத்தான் நித்தியமானவன் அல்ல. அல்ல! அவன் - அவன் சாத்தானாக மாறினான். நரகம் நித்தியமானதல்ல. அது சிருஷ்டிக்கப்பட்ட ஒன்று. அது நித்தியமானதல்ல. இந்த சரீரங்களும் நித்தியமானதல்ல. அவை சிருஷ்டிக்கப்பட்டவைகள் ஆகும். ஆனால் தேவனுடைய ஆவி நித்தியமானது. அதற்கு தொடக்கம் இருக்கவில்லை, அதற்கு முடிவும் கிடையாது. நாம் நித்திய ஜீவனைப் பெறக்கூடிய ஒரே வழி அந்த கிரேக்க சொல்லான, “தேவனுடைய சொந்த ஜீவன்” என்று பொருள்படும் “சோ (Zinc)” என்பதைக் கொண்டு பார்ப்போமானால், நாம் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாகி தேவனுடைய ஒரு பாகமாவதன் மூலமே, அப்பொழுது நமக்கு 'ஏயோனியன்' ஜீவன் உண்டு. எனவே வார்த்தையை இங்கிருந்து அது வரைக்கும் அடையாளம் கண்டு கொள்ளும் அந்த பாகம் - அதாவது நாம் - அந்த ஏயோனியன் ஜீவன், முடிவற்ற ஜீவனின் மூலமே. அது நமக்குள் இருக்கும் தேவனுடைய சொந்த ஜீவன். ஆமென். ஊ, ஊ. 67அன்றொரு நாள் நான் பயணம் செய்த போது யேகோவா சாட்சி குழுவைச் சேர்ந்த ஒருவருடன் விவாதிக்க நேர்ந்தது. யாருடைய விசுவாசத்தையும் அவமானிக்க இதை கூறவில்லை. யேகோவா சாட்சியிலிருந்து மனம் மாறிய அநேகர் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். நமது சபையின் தர்மகர்த்தாக்களில் ஒருவர் யேகோவா சாட்சி குழுவைச் சேர்ந்தவராயிருந்து இரட்சிக்கப்பட்டார் - அவரும் அவருடைய குடும்பத்தினரும். அவருடைய தகப்பனார் ஒரு “ரீடராக” இருந்தார் - சகோ. உட்ஸும் மற்றவர்களும். அவருடைய சகோதரரும் சகோதரிகளும், ஏறக்குறைய அவர்கள் எல்லோருமே, அவர்கள் என்ன செய்தனர் என்று தேவனுடைய தரிசனங்கள் அவர்களிடம் கூறின காரணத்தால் இங்கு வந்து பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டனர்... பாருங்கள்? அது தான் இதை செய்தது. 68ஆனால் இங்குள்ள யேகோவா சாட்சிகளின் புத்தகம். நாம் சுவாசிக்கும் சுவாசமே ஆத்துமா என்று கூறுகிறது. அது உண்மையாக இருக்க முடியாது. நீங்கள் சுவாசிக்கும் சுவாசமானது ஆத்துமா அல்ல. நீங்கள் - நீங்கள்... ஒரு முறை நீங்கள் ஒரு வித ஆத்துமாவாகவும், மற்றொரு முறை நீங்கள்... வேறொருவர் அந்த ஆத்துமாவை ஊதினார். நீங்கள் எந்நிலையில் இருப்பீர்கள் என்பதை பாருங்கள், சுவாசம் என்பது காற்று. இந்த காற்றையே நீங்கள் நாசியின் வழியாக சுவாசிக்கின்றீர்கள். யேகோவா சாட்சிகள், “தேவன் ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், அவன் ஜீவாத்துமாவானான்'' என்னும் வசனத்தை எடுத்துக் கொள்கின்றனர். உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். அவன் மனிதனாயிருந்தால், தேவன் ஜீவ சுவாசத்தை அவனுக்குள் ஊதுவதற்கு முன்பு அவன் எந்த விதமான சுவாசத்தை சுவாசித்திருந்தான்? பாருங்கள்? எந்த விதமான சுவாசத்தை... அவன் சுவாசிக்கும் ஜீவனுள்ள மனிதனாயிருந்தான். அவர்கள் சொல்வது உண்மையானால், ஒவ்வொரு மிருகமும் ஜீவாத்துமாவே, ஏனெனில் அவைகளும் மனித ஆத்துமாக்களைப் போல சுவாசிக்கின்றன. அப்படியானால் இயேசு மரிக்க அவசியமில்லை, மிருகங்களின் பலியே போதுமானதாயிருந்திருக்கும். பாருங்கள்? எனவே சகோதரனே, அந்த விவாதம் நிற்காது. தேவன் என்ன செய்தாரென்றால், அவர் நித்திய ஜீவனின் சுவாசத்தை ஊதினார் (ஆமென்!). அப்பொழுது அவன் ஜீவாத்துமாவானான் - மரிக்க முடியாத ஆத்துமா. இப்பொழுது கவனியுங்கள். இதை நாங்கள் உங்களுக்கு தெளிவாக்கப் போகிறோம், கவனியுங்கள், நித்திய ஜீவனின் சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். அவன் நித்திய ஆத்தமாவானான். ஏனெனில் தேவன் ஊதினார் (அது இயற்கை செய்ததல்ல, தேவன் செய்தது) - ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், அவன் ஜீவாத்துமாவானான் (living soul). நீங்கள் என்னிடம், 69''சகோ. பிரன்ஹாமே, ஆதாம் மரித்தானே“ எனலாம். ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள் ஆதாம் மரிப்பதற்கு முன்பு, ஒரு ஆட்டுக்குட்டி அவனை மீட்டது. அல்லேலூயா! அவர் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார். அவர்களை மீட்க அவர் ஆட்டுக்குட்டியை வைத்திருந்தார். அவன் ஒரு அடையாளமாயிருந்தான், ஆதாம் விழுந்து போனான். ஆதாமுக்காக ஒரு ஆட்டுக்குட்டி பலி செலுத்தப்பட்டது. ஏனெனில் அவனுடைய நாசியில் நித்திய தேவனின் சுவாசம் ஊதப்பட்டு அவன் ஜீவாத்துமாவானான். அவனுடைய சுவாசம் அல்ல. அதற்கான ஆப்பிரிக்கச் சொல் (இப்பொழுது அதற்கான கிரேக்க சொல் எனக்கு ஞாபகம் வரவில்லை, ஆனால்...), ஆப்பிரிக்க மொழியில் அவர்கள் அமோயா (Amoyah) என்றழைக்கின்றனர். அதற்கு “'காற்று, காணக்கூடாத சக்தி” என்று பொருள், மிருகங்கள் அமோயாவை சுவாசிக்கின்றன. பாவிகள் அமோயாவை சுவாசிக்கின்றனர். 70நமக்குள் ஊதப்பட்டது நித்திய ஆத்துமாவாக இருக்குமானால், நாம் ஏன் நித்திய ஜீவனுக்காக போராட வேண்டும்? சகோதரனே, அது நம்மையே திரும்பவும் தாக்குகிறது. பாருங்கள்? அது அப்படி இருக்க முடியாது. ஆனால் தேவன் விசேஷமாக ஆதாமுக்குள் நித்திய ஜீவனின் சுவாசத்தை ஊதினார். அவன் தேவனுடன் நித்திய ஆளாக ஆனான். அவனுக்கு தேவனைப் போல் வல்லமை இருந்தது. அவன் குட்டி தேவனாக (amateur god) இருந்தான். அவன் பூமிக்கு தேவனாயிருந்தான், பரலோகத்திற்கு தேவன் அல்ல - பூமிக்கு தேவனாயிருந்தான். என்றாவது ஒரு நாள் தேவனுடைய குமாரர்கள் மறுபடியும் தேவர்களாவார்கள். இயேசு அவ்வாறு கூறினார். ''தேவர்களாயிருக்கிறீர்கள்“ என்று உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? தேவன் சந்தித்தவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, நீங்களும் அவர்களை அப்படி அழைக்க, என்னை கண்டனம் செய்யலாமா?” என்றார் அவர். பாருங்கள்? நாம் ஆழமான ஒன்றிற்குள் செல்கிறோம். இதை நாம் ஆணித்தரமாகக் கூறும் போது கவனியுங்கள். 71இப்பொழுது, இதோ அவர்கள். ஆதாம் தேவனுடைய குமாரனாயிருக்கிறான், ஆனால் அவன் தவறு செய்கிறான். அவன் தவறு செய்வதாக அறிந்திருக்கிறான். இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை. வேதம் அவ்வாறு உரைக்கிறது. 1 தீமோத்தேயு 3 “ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை. ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்குட்பட்டாள்”. ஆதாம் ஏவாளுடன் பாவத்தில் நடந்தான். ஏனெனில் அவள் அவன் மனைவி. கிறிஸ்துவும் அதே போன்று சாத்தானால் வஞ்சிக்கப்படவில்லை. ஆனால் மணவாட்டியுடன் அவர் மரணத்துக்குள் நடந்தார். அவர் சபையை மீட்பதற்கென மணவாட்டியுடன் சேர்ந்து கொண்டார். ஆதாம் தான் செய்வது தவறென்று அறிந்தும், ஏவாளுடன் கூட நடந்து சென்றான். பாருங்கள்? ஆனால் அவர்களுக்காக ஒரு ஆட்டுக்குட்டி பலிக்காக நியமிக்கப்பட்டிருந்ததால், அவர்கள் மீட்கப்பட்டனர், அது போல் தேவனால் முன்னறிந்து அழைக்கப்பட்ட இன்றைய ஆட்டுக்குட்டிகளுக்கு ஒரு மீட்பர் இருக்கிறார். “என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால், அவன் என்னிடத்தில் வரமாட்டான்; பிதாவானவர் எனக்குத் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும். அது சரியா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர்-ஆசி) எனவே உலகத் தோற்றத்துக்கு முன்பே பலிக்கென்று நியமிக்கப்பட்ட ஒரு ஆட்டுகுட்டி இருந்தார். அப்பொழுது அவர்களுடைய பெயர்கள் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டுவிட்டது. அவர்கள் ஒவ்வொருவரும் உயிர்த்தெழுதலில் செல்வதற்கென கிருபையின் வழி உண்டாக்கப்பட, ஆட்டுக்குட்டியானவர் அளிக்கப்பட்டிருந்தார். அளிக்கப்பட்ட ஒரு ஆட்டுக்குட்டி, ஆதாமின் ஆட்டுக்குட்டி. இப்பொழுது கவனியுங்கள் - ஆதாமுக்கு ஒரு ஆட்டுகுட்டி அளிக்கப்பட்டிருந்தது போல். 72இப்பொழுது அது இன்றைய சபை. நான் ஸ்தாபன சபையைக் குறிப்பிடவில்லை. என்ன தெரியுமா? அவபக்தியாகவோ யாராவது ஒருவரின் மனதைப் புண்படுத்த வேண்டுமென்றே இதை நான் கூறவில்லை. அதை செய்வதற்காக இங்கு நான் இருக்கவில்லை. என்னைக் குறித்து நான் ஏற்கனவே விளக்கியிருக்கிறேன். நான் உதவி செய்யவே இங்குள்ளேன். நான் செய்ய முயல்வது என்னவெனில்... என்ன தெரியுமா? உண்மையில் இந்த சபைகள், சபைகள் அல்ல. ஒரே ஒரு சபை மாத்திரமேயுண்டு. இவை விடுதிகள் (பாருங்கள்?) இவை விடுதிகள் (lodges) அவர்களுக்கு விரோதமாக எனக்கு ஒன்றுமில்லை.... அது பரவாயில்லை, இவை விடுதிகளே என்று இன்னும் சில நிமிடங்களில் நிரூபிக்க விரும்புகிறேன். நீங்கள் மெதோடிஸ்டு விடுதி, பிரஸ்பிடேரியன் விடுதி, அல்லது பெந்தெகொஸ்தே விடுதியைச் சேர்ந்திருக்கிறீர்கள். அவைகளைப் பொறுத்த வரையில் அவை... பாருங்கள்? விடுதிகள், பாருங்கள்? உங்களால்... பாருங்கள், சபைகள் என்னப்படுபவை உண்மையில் விடுதிகளே, அங்கு ஒரே கருத்துள்ள ஜனங்கள் ஒன்று சேருகின்றனர். ஆனால் ஒரேசபை உள்ளது. நீங்கள் சபையைச் சேரமுடியாது நீங்கள் அதில் பிறக்கிறீர்கள். நீங்கள் அதில் பிறக்கும் போது அதன் அங்கத்தினராகிவிடுகிறீர்கள். என் குடும்பத்தை போல் - நான் பிரன்ஹாம் குடும்பத்தில் ஐம்பத்து மூன்று ஆண்டுகளாக இருந்து வருகிறேன். அந்த குடும்பத்தில் சேர்ந்து கொள்ள அவர்கள் என்னிடம் கூறவில்லை. ஏன்? அந்த குடும்பத்ததைச் சேர வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது. நான் பிரன்ஹாமாக பிறந்தேன். அவ்வாறே நீங்கள் சபையில் பிறக்கிறீர்கள் மற்றவை விடுதிகளே, அதைக் குறித்து நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா? (சபையார் “ஆமென்” என்கின்றனர்- ஆசி) ஆம் ஐயா! 73ஒரு நாள் நான் புல் வெட்டிக் கொண்டிருந்தபோது, ''நல்லது, அவர்கள் அதை மகா பரிசுத்த கத்தோலிக்க சபை என்றழைக்கின்றனர்“ என்று சிந்தித்துக் கொண்டே, இப்படி புல் வெட்டிக் கொண்டிருந்தபோது. ஏதோ ஒன்று என்னை ஸ்திரமாக பிடித்து நிறுத்தி, ”அதை அவ்வாறு அழைக்காதே“ என்றது. நான் சுற்றிலும் பார்த்து விட்டு, புல்வெட்டத் தொடங்கின போது, அது மறுபடியும் என்னை நிறுத்தி ”அவர்களை அவ்வாறு அழைக்காதே. அவர்கள் மற்றவைகளைப் போல் ஒரு விடுதியே. அவர்கள் சபையல்ல. ஒரு சபை மாத்திரமே உள்ளது'' என்றது . பாருங்கள்? அவர்கள் ஒரு விடுதியின் அங்கத்தினர்கள், நீங்கள் விடுதியில் சேரலாம். ஆனால் சபையில் சேர முடியாது. நீங்கள் சபையில் பிறக்கிறீர்கள். புது பிறப்பின் மூலம் நீங்கள் குடும்பத்தின் அங்கத்தினராக, அதில் சகோதரன் அல்லது சகோதரியாக இருக்கின்றீர்கள். 74இப்பொழுது நான் 'எம்பாடிக் டயக்ளாட்'டிலிருந்து வெளிப்படுத்தல், 17:3 ஐ உங்களுக்கு படித்துக் காண்பிக்கப் போகின்றேன். எம்பாடிக் டயக்ளாட்டிலுள்ள அபோகாலிப்ஸிலிருந்து. இதை கவனியுங்கள். இது எவ்வாறு எழுதப்பட்டுள்ள தென்றும், இது எவ்வளவு அழகாக அதனுடன் ஒப்பிடுகிறது என்றும் வெளிப்படுத்தல் 16-17 சரி. இதை நாம் ஒரு நிமிடம் படிப்போம். இதை கூர்ந்து கவனியுங்கள், வெளிப்படுத்தல் 17:3: ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தாதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி... (நான் கிரேக்க வேதாகமத்திலிருந்த படிக்கிறேன்)... நீ வா, திரளான தண்ணீர்கள் மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசிக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி...@@ 75அது வாடிகன் என்று நாமெல்லாரும் அறிவோம் கத்தோலிக்க சபையிலிருந்து வரும் 'சண்டே விஸிட்டர்' என்னும் அந்த பத்திரிகை நம்மிடமுள்ளது. அது என்னவென்பதை அது நமக்கு தெளிவாகக் கூறுகிறது. பாருங்கள், 666 என்பது போப்பாண்டவரைக் குறிக்கிறது என்று நாம் கூறுவதற்கு பதிலளிக்கும் வண்ணம் அது, “ஒரு நிமிடம் பொறுங்கள், எத்தனையோ பெயர்களை இவ்வாறு கூட்டினால் 666 கிடைக்கும்'', என்கிறது. நான், “ஒரு நிமிடம் பொறுங்கள்”, என்றேன். அவர், “உங்கள் பெயரைக் கூட்டினாலும் 666 கிடைக்க வகையுண்டு” என்றார். நான், ''ஆனால் நான் ஏழு மலைகளின் மேல் உட்கார்ந்து கொண்டு உலகத்தை ஆளுகை செய்யவில்லையே'', என்றேன். பாருங்கள்? பாருங்கள், அது உண்மை. பாருங்கள்? (சகோதரன் பிரன்ஹாம் வெளிப்படுத்தல் 17:1 ஐ ''எம்பாடிக் டயக்ளாட்“டிலிருந்து வாசிக்கின்றார்-ஆசி) ...திரளான தண்ணீர்கள் மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசிக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி தண்ணீர்கள், வெளிப்படுத்தல், 17:15, அவை ஜனங்கள், கூட்டங்கள், ஜாதிகள், பாஷைக்காரர், பாருங்கள்). அவளோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம் பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமான மதுவால் பூமியின் குடிகளும் வெறி கொண்டிருந்தார்களே... இப்பொழுது கவனியுங்கள். ஆவிக்குள் என்னை வனாந்திரத்திற்குக் கொண்டு போனான்... இது எம்பாடிக் டயக்ளாட், பாருங்கள்?... அப்பொழுது... தூஷணமான நாமங்களால் (blasphemous names) நிறைந்ததுமான சிவப்பு நிறமுள்ள மிருகத்தின் மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக் கண்டேன். இப்பொழுது, ஜேமஸ் அரசன் வேதாகமம் என்ன கூறுகிறதென்றால்... தூஷணத்தின் நாமங்களால் நிறைந்தது (Fall of the names of blasphemy) என்று, (சற்று பொறுங்கள், இன்னும் ஒரு நிமிடத்தில் வெளிப்படுத்தல் 3-க்கு திரும்புகிறேன்). சரி, இதோ அது. சரி. வெளிப்படுத்தல். நான் 17ம் அதிகாரத்தைக் குறிப்பிட்டேன், 7 அல்ல 17. இப்பொழுது 3-ம் வசனத்தை கவனியுங்கள். ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டு போனான். அப்பொழுது... தூஷணத்தின் நாமங்களால் (names of blasphemy) நிறைந்ததுமான சிவப்பு நிறமுள்ள மிருகத்தின் மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக் கண்டேன். (தமிழ் வேதாகமத்தில் தூஷணமான நாமங்கள் என்று சரியாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது- தமிழாக்கியோன்). ஆங்கில வேதாகமம் அவ்வாறு கூறுகிறது. ஆனால் மூல கிரேக்க மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட டயக்ளாட் இவ்விதம் வெளிப்படுத்தல் 17:3ல் உரைக்கிறது. உன்னிப்பாக கவனியுங்கள். ஆவிக்குள் என்னை வனாந்திரத்திற்குக் கொண்டு போனான். அப்பொழுது... தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்பு நிறமுள்ள மிருகத்தின் மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக் கண்டேன். ''தூஷணத்தின் நாமங்கள்“ (names of blasphemy) என்பதற்கும் ''தூஷணமான நாமங்கள்” (blasphemous names) என்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அது என்ன? நாம் இப்பொழுது, அவள் வேசிகளின் தாய் 76அதை நாமெல்லாரும் அறிவோம். இப்பொழுது, அது என்ன? நீங்கள் அதை சேர்ந்திருக்க வேண்டுமென்பது கிடையாது... நல்லது, அது உண்மை. அது ரோமன் கத்தோலிக்க சபையைக் குறிக்கிறது, ஆனால் அவள் தூஷணமான நாமங்களால் நிறைந்திருக்கிறாள்: மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், லூத்தரன் போன்றவை. அவையனைத்துமே தங்களை தேவனுடைய சபைகள் என்று அழைத்துக் கொள்கின்றன - தூஷணமான நாமங்கள். “தூஷணத்தின் நாமங்கள்” என்பதற்கும். ''தூஷணமான நாமங்கள் என்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. தங்களை தேவனுடைய சபையென்று அழைத்துக் கொண்டு, உலகத்துக்கு முன்பாக அவ்வாறு காண்பித்துக் கொண்டு. அதே சமயத்தில் சீட்டு கச்சேரிகளும். குடித்தலும், 'சூப்' இரவு உணவு போன்ற எல்லா விதமான செயல்களிலும் ஈடுபட்டு.... ஒரே ஒரு சபை மாத்திரமேயுண்டு. நீங்கள் அதற்குள் பிறக்கிறீர்கள். நீங்கள் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, பரிசுத்த ஆவியினால் முத்திரிக்கப்படும் வரைக்கும் அதற்குள் வருவதில்லை. 77''தூஷணத்தின் நாமங்கள்“ என்பதற்கும் ”தூஷணமான நாமங்கள்“ என்பதற்கும் என்ன ஒரு வித்தியாசம்!புரிகிறதா? (சபையார் ”ஆமென்“ என்கின்றனர்- ஆசி). இன்று காலை இங்கு வருவதற்கு முன்பு நான் படித்துக் கொண்டிருந்தபோது, அது எனக்குத் தெளிவானது. ஏதோ ஒன்று என்னிடம், ”அறைக்குச் சென்று டயக்ளாட்டை எடு“ என்றது. அது கீழ்படிதல், அவ்வளவுதான். நான் உள்ளே நடந்து சென்று, வெளிப்படுத்தல் 17க்குத் திருப்பினேன். நான், ”என்னை ஏன் இதை படிக்கக் கூறுகிறீர்?'' என்று எண்ணினேன். நான் படிக்கத் தொடங்கி அந்த இடத்திற்கு வந்த போது, (சகோ. பிரன்ஹாம் தன் விரலை சொடுக்குகிறார்- ஆசி.) “இதோ இங்குள்ளது'' என்று அறிந்து கொண்டேன். நான் ஒரு பென்சிலை எடுத்து அதை எழுதிக் கொண்டேன். நான், ''இதோ இங்குள்ளது'' என்றேன். 78நான் ஸ்தாபனங்களுக்கு விரோதமாயுள்ளேன் என்று என்னைப் பார்த்து கூச்சலிடுகின்றனர். இந்த தூஷணமான நாமங்களையுடையவர்களே தங்களை தேவ சபை, கிறிஸ்து சபை, மெதோடிஸ்டு சபை என்று அழைத்துக் கொள்கின்றனர். இவை விடுதிகள், சபைகள் அல்ல. ஒரே சபைதான் உண்டு, அது தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சபை. அது என்ன?பூமியில் இயங்கிக் கொண்டிருக்கும் காணக்கூடாத இயேசு கிறிஸ்துவின் சரீரம். இந்த சபைகளில் கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத்தினராயுள்ள எந்த அங்கத்தினரையும் அது கொண்டுள்ளது. நீங்கள் அதற்குள் பிறக்கவேண்டும். அதில் சேர முடியாது. அதில் சேர்ந்து கொள்வதென்பது தூஷணமான நாமங்களைத் தரித்துக் கொள்வதாகும். 79இந்த ஸ்திரீ, இந்த ஸ்திரீ, அவளுடைய அதிகாரம்... மதத்தைக் குறித்து விசித்தரமான கருத்துக்களைக் கொண்டுள்ள ஜனங்கள் அனைவரையும் அவர்கள் எங்கே அனுப்பப் போகிறார்கள் என்று பாருங்கள். அவர்களை அலாஸ்காவுக்கு அனுப்பப் போகிறார்களாம். அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நம்முடைய விசித்திரமான விசுவாசம் அனைத்துமே... அது என்ன? ஆலோசனை சங்கம் - உலக சபைகளின் ஆலோசனை சங்கமும் கத்தோலிக்கரும் வாடிகனில் பெரிய இணைப்பு கூட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அங்கே அவர்கள் முயன்று கொண்டிருக்கின்றனர். இந்த பேராயர்களும் எல்லோரும், அவர்கள் கம்யூனிஸத்தை எதிர்ப்பதற்காக ஒரு ஒப்பந்தத்துக்கு வர முயன்று கொண்டிருக்கின்றனர். உலகமானது கம்யூனிஸத்தை எதிர்த்துப் போரிடுவதற்கென கத்தோலிக்க மதத்துடன் இணைகிறது. 80இன்று இங்குள்ளது போல்: நான் கூறினது போல் நாம்... தங்கள்... நாம் ஏறக்குறைய திவாலாகி விட்டோம். நாம் கடன் வாங்கி, பதினான்கு வருடங்களுக்கு பிறகு செலுத்த வேண்டிய தொகைக்கு இப்பொழுது வரிப் பணம் செலுத்திக் கொண்டிருக்கிறோம். நாம் அந்த நிலையை அடைந்துவிட்டோம். உலகத்தின் செல்வத்தை யார் பெற்றுள்ளது? கத்தோலிக்க சபை. அது எப்படி அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு கடனாக செலுத்தப்படும்? இந்த புகையிலை, விஸ்கி கம்பெனிகளை நடத்துவதற்காக. அவர்கள் நிச்சயம் கடன் வாங்குவார்கள். அப்படி செய்யும் போது அவர்கள் தங்கள் சேஷ்ட புத்திர பாகத்தை ரோமன் கத்தோலிக்க சபைக்கு விற்றுப் போடுவார்கள். நாம் ஒன்று சேருகிறோம். இதை கவனியுங்கள். இது தெளிவாயுள்ளது, இது செய்தித்தாள் படிப்பதைக் காட்டிலும் மிகத் தெளிவாயுள்ளது. அது இங்குள்ளது. பாருங்கள்? 81மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், இன்னும் மற்றவர் தங்களை தேவனுடைய சபையென்று அழைத்து கொள்கின்றனர். கத்தோலிக்கரும் மற்றவர்களும். இந்த மிருக அதிகாரம் இப்படிப்பட்ட தூஷணமான நாமங்களால் நிறைந்துள்ளது. உங்களை நீங்கள் அதன் பெயரால் அழைத்துக் கொண்டு, “நான் - நான்...” என்கிறீர்கள். நான் சொன்னேன்... அண்மையில் ஒரு நபருக்காக ஜெபம் செய்ய நான் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். நான், “நாம் ஜெபம் செய்யப் போகிறோம்” என்றேன். அது என் தாய். நான் “தாயாருக்காக ஜெபம் செய்யப் போகிறோம்” என்றேன். அந்த பெண், ''திரையை இழுத்து விடுங்கள்“ என்றாள். நான், “'நீ கிறிஸ்தவள் தானே” என்று கேட்டேன். அவள், “நாங்கள் மெதோடிஸ்டுகள்” என்றாள். நான், “நன்றி. நீ விசுவாசி என்று நினைத்தேன்” என்று கூறிவிட்டு திரையை இழுத்து விட்டேன். பாருங்கள்? எனவே நீங்கள் கிறிஸ்தவர் அல்ல என்றால், அது வித்தியாசமான ஒன்று... (பாருங்கள்?.) “'நாங்கள் மெதோடிஸ்டுகள்” அது தூஷணம். 82மிருகம், சபைகள், சபைகள் என்று அழைக்கப்படுபவை, சபைகள் அல்ல. இது பதிவு செய்யப்படுகிறது என்று நான் உறுதி கொள்ளட்டும். அவை சபைகள் அல்ல; அவை விடுதிகள். ஜனங்கள் அதில் சேருகின்றனர். ஆனால் நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய சபையைச் சேர முடியாது, நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் அதற்குள் பிறக்கிறீர்கள், நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறும் போது, இந்த நற்பண்புகள் பரிசுத்த ஆவியினால் உங்களுக்குள் முத்தரிக்கப்படுகின்றன. ஆகவே “தேவனால் பிறந்த எவனும் பாவஞ் செய்யான்”. செய்ய முடியாது. பார்த்தீர்களா? ஓ, என்னே! நாம் நாள் முழுவதும் பேசிக் கொண்டே போகலாம். இல்லையா? 83சபையானது காணக்கூடாத கிறிஸ்துவின் சரீரம், தேவனுடைய சுவாசத்தினால் அது பிறக்கிறது. ஊ, ஊ! உங்களுக்கு விளங்குகிறதா? (சபையார் “ஆமென்” என்கின்றனர்- ஆசி) தேவனுடைய சபை தேவனுடைய சுவாசத்தினால் பிறக்கிறது. தேவன் சுவாசத்தை, ஆவியாக, ஆதாமின் நாசியில் ஊதினார், அவன் ஜீவாத்துமாவானான். பெந்தெகொஸ்தேயினர் - அதாவது உண்மையான பெந்தெகொஸ்தே சபை -தேவனுடைய சுவாசத்தினால் பிறந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? “ஆமென்''. அதைக் குறித்த ஒன்றை இன்னும் ஒரு நிமிடத்தில் உங்களுக்கு நான் வாசித்துக் காண்பிக்கட்டும். இன்னும் ஒரு நிமிடத்தில். பரி. யோவான் என்று நினைக்கிறேன். அதற்குத் தான் நான் சென்று கொண்டிருக்கிறேன். தேவனுடைய சபை அப்படி பிறந்ததா இல்லையாவென்று பார்ப்போம். பரி. யோவான்... நாம் பார்ப்போம். நான் நினைக்கிறேன். அது 16, 19, 20 அதிகாரங்களில் ஏதோ ஒன்று. சரி. இது நமக்கு இங்குள்ளதென்று நினைக்கிறேன். சரி. ஆதாமுக்கு ஆதியில் நடந்தது போல, சபையானது தேவனுடைய சுவாசத்தினால் பிறந்ததா இல்லையாவென்று இதைப் படித்து அறிந்து கொள்ளலாம். கவனியுங்கள். வாரத்தின் முதல் நாளாகிய அன்றையத் தினம் சாயங்கால வேளையில், சீஷர்கள் கூடியிருந்த இடத்தில் யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக் கண்டு சந்தோஷப்பட்டார்கள். இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக; பிதா என்னை அனுப்புகிறது போல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி, கவனியுங்கள்! அவரை அனுப்பின பிதா அவருக்குள் வாசம் செய்து அவருடன் சென்றார். இயேசுவும் ஒரு சீஷனை அனுப்பும் போது, அவனுக்குள் வாசம் செய்து அவனுடன் செல்கிறார். அதே ஒருவர் அனுப்பப்பட்டார்; தேவன். அவர்கள் மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். 84சபையானது தேவனுடைய சுவாசத்தினால் பிறக்கிறது. இந்த சிலை சரியான நிலையில் உருவாக்கப்பட்ட பிறகு தேவன் அவர்கள் மேல் சுவாசத்தை ஊதுகிறார், அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்கின்றனர். அப்பொழுது நீ தேவனுடைய குமாரனாகிறாய். நீ விரும்பின எதை வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம், ஆனால் நீ ஜீவனுள்ள தேவனுடைய தேவனுடைய சுவாசத்தினால் பிறக்கிறாய். தேவன் அவர்கள் மேல் ஊதி “பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார். ஓ, என்னே பார்த்தீர்களா? “வந்து எங்களைச் சேர்ந்து கொண்டு, உங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளுங்கள்” என்றல்ல - உங்கள் 'சூப்' இரவு உணவும் அதனுடன் சேர்ந்த மற்ற அனைத்தும். அப்படியானால் நீங்கள் ஒரு விடுதியைச் சேர்ந்து கொள்கிறீர்கள். நீங்கள் மெதோடிஸ்டு விடுதி, பாப்டிஸ்டு விடுதி, பிரஸ்பிடேரியன் விடுதி, கத்தோலிக்க விடுதி பெந்தெகொஸ்தே விடுதி போன்ற நீங்கள் விரும்பின எந்த விடுதியையும் சேர்ந்து கொள்ளலாம். ஆனால் நீங்கள் ஒரு விடுதியையே சேருகிறீர்கள். நீங்கள் தேவனுடைய பிள்ளையாகும் போது, நீங்கள் தேவனுடைய சுவாசத்தினால் பிறக்கிறீர்கள். ஆமென்! இதை இங்கு நிறுத்திக் கொள்வோம். சரி, 85அப்படியானால், தேவனுடைய ஜீவன் உங்களுக்குள் இருக்கிறது. இயேசு சொன்னார் (ஒரு நிமிடம்), “நானே திராட்சச் செடி, நீங்கள் கொடிகள்”, என்று. இப்பொழுது கவனியுங்கள். இயேசுவுடன் அவர்கள் ஏன் சண்டையிட்டனர்? அவர் மனிதனாயிருந்தும் தம்மை தேவனுக்குச் சமமாக்குகிறார் என்று அவர்கள் இயேசுவுடன் சண்டையிட்டனர். அவர் தேவனாயிருந்தார், தேவன் கிறிஸ்துவுக்குள் வாசம் செய்தார். பாருங்கள்? அவர் அவர்களிடம், “என்னைப் பார்க்க வேண்டாம். அது நானல்ல. அது என் பிதா, அவர் என்னில் வாசமாயிருக்கிறார்'', என்றார். பாருங்கள்? அவர்கள் மரியாள் பிரசவித்த அந்த சரீரத்தை பார்த்தனர். பாருங்கள்? அது தேவனல்ல, அது தேவனுடைய குமாரன். ஆனால் தேவன் அந்த சரீரத்தில் வாசம் செய்தார். அது தேவன். அவர், “என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், என்னைக் குற்றப்படுத்துங்கள். என்னிடத்தில் பாவம் (வார்த்தையின் பேரில் அவிசுவாசம்) உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்? தேவன் உரைத்த எந்த வார்த்தை என்னில் நிறைவேறாமல் இருந்தது? என்னிடத்தில் பாவம் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்? (பாவம் என்பது அவிசுவாசம்). எனக்குக் காண்பியுங்கள். என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால் நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. செய்தேனேயானால்... என்னை விசுவாசியாதிருந்தாலும், நான் செய்யும் கிரியைகளை விசுவாசியுங்கள். அவைகள் சாட்சி கொடுக்கின்றன” என்றார். வேறு விதமாகக் கூறினால், “என் பிதா என்னில் வாசம் செய்து தம்மைக் குறித்து சாட்சி கொடுக்கிறார்”. ஏனெனில் தேவன் கிறிஸ்துவுக்குள் வாசம் செய்து உலகத்தைத் தம்முடன் ஒப்புரவாக்கிக் கொண்டார். உங்களுக்கு விளங்குகிறதா? நல்லது, திராட்சச் செடியிலிருந்து அதே ஜீவன் கொடியிலும் உள்ளது. அதில் எப்படி நீங்கள் சேரமுடியும்? உங்களால் முடியாது. 86அண்மையில், அரிசோனாவிலுள்ள சகோ. ஷரீட் என்பவரின் தோட்டத்தில் ஒரு மரத்தைக் கண்டேன். அதில் ஒன்பது வகை எலுமிச்சை வகை (citrus fruits) பழங்கள் இருந்தன. அது ஒரு ஆரஞ்சு மரம். ஆனால் அதில் எலுமிச்சம் பழம், டாங்கரீன், டாங்கெலோ, கிரேப் பழம் இன்னும் மற்றும் பல எலுமிச்சை வகை பழங்கள் இருந்தன. நான் நின்று கொண்டு, அதை பார்த்த வண்ணம், ''சகோ. ஷரீட், இது ஆரஞ்சு மரம் என்று கூறுகிறீர்கள்?'', என்று கேட்டேன். அவர், ''நிச்சயமாக“, என்றார். நான், ''அப்படியானால் அதில் இங்கு கிரேப் பழம், இங்கு டாங்கரீன், இங்கு டாங்கெலோ, இங்கு எலுமிச்சம் பழம் இன்னும் பல பழங்களைக் காண்கிறேனே, அது எப்படி?“ என்று கேட்டேன். அவர், “நல்லது, பாருங்கள், இவை ஒட்டுப் போடப்பட்டவை”, என்றார். நான், “ஓ, அப்படியா, உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். இதிலிருந்து எலுமிச்சம் பழத்தை இப்பொழுது பறித்துவிடுகிறீர்கள். அடுத்த ஆண்டு என்ன நடக்கும்? அந்த கிளையில் ஆரஞ்சு பழம் உண்டாகுமா?” என்று கேட்டேன். அவர், “ஓ, இல்லை. அந்த கிளையில் எலுமிச்சம் பழம் மாத்திரமே உண்டாகும்'', என்றார். நான், “ஓ, உங்களுக்கு நன்றி” என்றேன். பாருங்கள்? 87உங்களால் அப்படி செய்ய முடியாது. நீங்கள் அதில் சேர்ந்து கொள்ள முடியாது. அவர் என்ன சொன்னார் என்றால், அந்த மரத்துக்கு ஒரு வயது கூடுதலாகி அது புது கிளையைத் தோன்றச் செய்தால், அது ஆரஞ்சு பழங்களைத் தரும் என்று அந்த மரமே தன் சொந்த கிளையைத் தோன்றச் செய்தால். நாம் என்ன செய்ய முயல்கிறோம் என்றால், அவருக்குள் அங்கத்தினர்களாக சேர்ந்து கொண்ட கிறிஸ்தவ மார்க்கம் என்னும் பெயரில் வாழ விரும்புகிறோம். ஏனெனில் நாம் (சாதாரண முறையில் கூறினால்) - “நாம் எலுமிச்சை வகை பழம்” - கிறிஸ்தவ சபை. ஆனால் அந்த மரமானது தன் சொந்த கிளையை அதில் தோன்றச் செய்தால், அதில் முதலில் தோன்றின கிளையைப் போலவே அது இருக்கும். அதில் தோன்றின முதலாம் கிளை அப்போஸ்தலருடைய நடபடிகளின் புத்தகம் எழுதக் காரணமாயிருந்தால், அது வேறொரு கிளையைத் தோன்றச் செய்யும்போது, அதுவும் வேறொரு அப்போஸ்தலருடைய நடபடிகளின் புத்தகம் எழுதக் காரணமாயிருக்கும். அது உண்மை 88எனவே நீங்கள் விடுதிகளையே சேருகிறீர்கள். ஆனால் நீங்கள் திராட்சச் செடியிலிருந்தே பிறக்கும் போது உங்களிடம் கனி உள்ளது. அது உண்மைதான். உங்களிடம் கனி உள்ளது. ஆனால் அதைக் கொண்டு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறீர்கள். நீங்கள் அடையாளங்களை மறுதலிக்கிறீர்கள். நீங்கள் பரிசுத்த ஆவியை மறுதலிக்கிறீர்கள். நீங்கள் அந்நியபாஷைகளை மறுதலிக்கிறீர்கள்; நீங்கள் தரிசனங்களை மறுதலிக்கிறீர்கள்; நீங்கள் தீர்க்கதரிசனங்களை மறுதலிக்கிறீர்கள். நீங்கள் தெய்வீக சுகமளித்தலை மறுதலிக்கிறீர்கள். இருப்பினும் ஒரு நாமத்தினால் உங்களை அழைத்துக் கொள்கிறீர்கள். பரிசுத்த ஆவி, “ஒரு கூட்டம் ஜனங்கள் தூஷணமான நாமங்களால் நிறைந்து (நிச்சயமாக!) தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொண்டு, தேவபக்தியின் வேஷத்தை தரித்தவர்களாய், அதன் பெலனை மறுதலிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. இப்படிப்பட்டவர்கள் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண் பிள்ளைகளுடைய வீடுகளில் நுழைந்து அவர்களை வசப்படுத்திக் கொள்கிறார்கள்”, என்று கூறினதில் வியப்பொன்றுமில்லை. எல்லா விதமான ஸ்தாபனங்கள்; சபையானது இந்த விதமான சங்கம், அந்த விதமான சங்கம் என்பவைகளால் நிறைந்துள்ளது. இயேசு கிறிஸ்துவின் சங்கத்தைக் குறித்தென்ன? பாருங்கள். இந்த மற்ற காரியங்களை நாம் கொண்டவர்களாய், சபையை பாரப்படுத்துகிறோம். இப்பொழுது அந்த நிலையை தான் நீங்கள் அடைந்திருக்கிறீர்கள். 89நீங்கள் சபையை சேர்ந்து கொள்ள முடியாது. ஒரு விடுதியை தான் சேர்ந்து கொள்ள முடியும். நீங்கள் ஒரு விடுதியின் அங்கத்தினர் - விடுதியில் ஒரு கூட்டம் ஜனங்கள் உள்ளது போல். ''நாங்கள் இதை விசுவாசிக்கிறோம், எங்களுக்கு கட்டளைகள் உள்ளன. எங்களுக்கு இரகசிய நியதிகள் உள்ளன. ''சபை என்று அழைக்கப்படுவதை நீங்கள் சேரும்போது அதையே செய்கின்றீர்கள். ஆனால் நீங்கள் சபையை சேர முடியாது. நீங்கள் அங்கத்தினர் கொண்ட விடுதியை சேருகிறீர்கள், ஆனால் நீங்கள் சபையை சேர முடியாது. ஏனெனில் நீங்கள் சபைக்குள் பிறக்கின்றீர்கள். அந்த திராட்சச் செடியே... ஒரு நிமிடம் பொறுங்கள். கவனியுங்கள்! சிறிது நேரம் கழித்து நான் முடித்து விடுகிறேன். கவனியுங்கள்! என்னை மன்னியுங்கள், அதை கூற நான் நினைக்கவில்லை. பாருங்கள். தேவன் இந்த மணவாட்டியை அந்த ஆவியினாலே ஒன்றாக பக்குவப்படுத்தியிருந்தால், அது தனிப்பட்ட நபரையும் அந்த ஆவியினாலே ஒன்றாக பக்குவப்படுத்துகிறது. பாருங்கள்? அப்பொழுது நீங்கள் அந்த ராஜ்யத்துக்குள் பிறக்கிறீர்கள். அப்பொழுது இந்த சபையில் உள்ள அதே ஜீவன் அந்த சபையில், அந்த, அந்த, அந்த, அந்த சபையில் உள்ளது. திராட்சச் செடி, இயேசுவில் இருந்த அதே ஜீவன், அவர் தோன்றச் செய்த அங்கத்தினரிலும் உள்ளது. மகிமை! “நான் செய்கிற அதே காரியங்களை; நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். அது தான் கிறிஸ்துவின் சரீரத்தின் உண்மையான அங்கத்தினன். அதனுடன் எந்த விதமான நாமமும் இணைக்கப்படுவதில்லை. அந்த நபர் செய்யும் கிரியைகள் அவன் எங்கிருந்து வந்தான் என்பதை நிரூபிக்கின்றன. அந்த ஜீவன் அவன் யாரென்று சாட்சி கொடுக்கின்றது. ''நீ... எதனுடைய அங்கத்தினன் - நீ எந்த சரீரத்தை சேர்ந்தவன்? “கிறிஸ்துவின் சரீரத்தை”. “நல்லது, நீ எப்பொழுது அதில் சேர்ந்தாய்?'' நான் அதில் சேரவில்லை, “அதில் பிறந்தேன்'', பாருங்கள்? ”நான் அதில் பிறந்தேன்“. நீங்கள் அவர்களிடம் கூற வேண்டியதேயில்லை. என்ன நடந்ததென்று அவர்கள் அறிந்து கொள்வார்கள். நீங்கள் ''நீங்கள் விளக்கைக் கொளுத்தி அதை எப்படி மரக்காலால் மூடி வைக்க முடியும்?'' என்றார் அவர். பாருங்கள்? முடியாது, முடியாது! 90நீங்கள் அந்த தேவனுடைய ராஜ்யத்தில் பிறக்கும் போது, அந்த ஜீவன், இயேசுவுக்குள் இருந்த அதே ஜீவன். அப்பொழுது நீங்கள் ஆத்துமாக்களில் சிரத்தை கொள்கிறீர்கள். ஜனங்கள் பீடத்தண்டை வர நீங்கள் கெஞ்ச வேண்டிய அவசியமாயிருக்காது. பீடத்தண்டை வந்துள்ளவர்களிடம் ஆலோசனை கூற யாராகிலும் வரும் படி நீங்கள் கெஞ்ச வேண்டிய அவசியமிருக்காது. இவைகளனைத்தும் தானாகவே நடக்கும். ஏனெனில் அது உங்களில் முத்திரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் தேவனுடைய 'யூனிட்'டாக இருக்கிறீர்கள் நீங்கள் பரிசுத்த ஆவியினால் முத்தரிக்கப்பட்டிருக்கிறீர்கள். இப்பொழுது, பரிசுத்த ஆவி என்றால் என்ன அர்த்தம் என்று அறிந்து கொண்டீர்களா? ''நான் குதித்தேன் கூச்சலிட்டேன், எனக்கு விசித்தரமான உணர்வு ஏற்பட்டது“, என்றல்ல. அவையெல்லாம் சரிதான். நானும் கூட குதித்து, கூச்சலிட்டிருக்கிறேன், எனக்கும் விசித்தரமான உணர்வு ஏற்பட்டுள்ளது. நானும் அந்நிய பாஷைகளில் பேசியிருக்கிறேன். பரிசுத்த ஆவி அந்நியபாஷை பேசுவார் என்னும் நம்பிக்கை கொண்டவன் நான். நிச்சயமாக நான் பாஷைக்கு அர்த்தம் உரைத்திருக்கிறேன். ஆம், ஐயா! அதிலும் நான் நம்பிக்கை கொண்டவன். ஆனால் அதுவல்ல இது. அதைக் குறித்து இப்பொழுது நான் பேசவில்லை. எங்காவது ஒரு ஒழுக்கல் உண்டாக வகையுண்டு. உங்கள் பொறுமையில் ஒழுக்கல் உண்டாகலாம். யாராகிலும் ஒருவர் உங்களை ஒரு கன்னத்தில் அடித்தால், நீங்கள் மறுகன்னத்தைக் காட்டுகிறீர்களா? நீங்கள், ”அந்த பயங்கர மாய்மாலக்காரன்'' என்கிறீர்கள். எங்கோ ஒரு ஒழுக்கல் உண்டாகியிருக்கக்கூடும். இதை நாம் நிறுத்திக் கொள்வோம். சரி. ஆனால் நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? நீங்கள் கிறிஸ்துவின் சரீரத்திற்குள் முத்தரிக்கப்பட்டிருந்தால், நீங்கள் ஆவியில் நிறைந்தவர்களாகி, தேவனுடைய குமாரனாகின்றீர்கள். 91ஓ, இங்கு ஒன்றைப் படிக்க பத்து நிமிடம் கிடைத்தால் நலமாயிருக்கும், (சபையார் ''சகோதரனே, வாசியுங்கள்'' என்கிறார்கள்-ஆசி) ஆனால் நான்... என்னை இன்னும் பத்து நிமிடம் பொறுத்துக் கொள்வீர்களா? (''ஆம்'') இங்கு ஒன்றை படிக்க விரும்புகிறேன், ஒரு சிறு பாகம். நான்... உண்மையில், காரியம் ஒன்றும் கெட்டுப் போகாது என்று உங்களுக்கு நான் உறுதி கூறுகிறேன் (பாருங்கள்?). இதை சில நிமிடங்கள் படிப்பதனால், இது மிகவும் நல்லதானால், இதை விடக்கூடாது. என் நினைவுக்கு இப்பொழுது வரும் ஓரிரண்டு காரியங்களை நான் கூற விரும்புகிறேன். இப்பொழுது நாம் பரி. யோவான் சுவிசேஷம் 3-ம் அதிகாரத்துக்குத் திருப்புவோம் - நித்திய ஜீவனைக் குறித்து பேசுகிறது. நித்திய ஜீவனின் பிரச்சினையை குறித்து, தேவனுடைய ஜீவனைக் குறித்து இது என்ன கூறுகிறதென்று பார்ப்போம். இப்பொழுது, இங்கு கவனியுங்கள்: யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்ய மாட்டான் என்றான். இப்பொழுது, அவர்கள் - அந்த சனகரீப் சங்கத்தினர் இவர் தேவனுடைய குமாரன் என்று அடையாளம் கண்டு கொண்டிருந்தனர், அவர்கள் இதை அறிந்திருந்தனர். இதோ அவர்களுடைய அதிகாரி அவரிடம், ''நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் தேவனுடைய ஜீவன் உமது வழியாகப் பாய்கிறது“ என்றான். 92பாருங்கள்? ''உமக்கு சொந்தமாக நீர் போதிக்கிறதில்லை என்று அறிந்திருக்கிறோம். அது தேவனிடத்திலிருந்து வருகிறது. ஏனெனில் தேவன் அதை நிரூபிக்கிறார், பாருங்கள்? “தேவனுடைய ஜீவன் உமது வழியாகப் பாய்கிறது. இப்பொழுது கவனியுங்கள்! இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார் ஓ, என்னே! ”என் சபையை நீ சேராமல் போனால்...'' ஓ, பாருங்கள், அதை எவ்வாறு விலக்கி விட்டீர்கள்? பாருங்கள், பாருங்கள்? இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம். காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது... (பாருங்கள்? அது மறுபடியும் கூறப்பட்டுள்ளது . பாருங்கள்? மறுபடியும் வருகிறது. பாருங்கள்?) காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார். அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா?.... அங்கே பார். சகோதரனே, டி.டி.. பிஎச்.டி., எல்.எல்.டி. பட்டங்களைப் பெற்றவன். பாருங்கள்?... இவைகளை அறியாமலிருக்கிறாயா? மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்கு சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி நாங்கள் கண்டதைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறோம். நீங்களோ எங்கள் சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.... இவைகளை நாங்கள் அறிந்திருக்கிறோம், இவைகளை நாங்கள் கண்டிருக்கிறோம்; இவைகள் எங்களுக்குத் தெரியும். ஆனால் சபையைச் சேர்ந்தவனே, எங்கள் சாட்சியை நீ ஏற்றுக் கொள்ளுகிறதில்லை. பாருங்கள்? பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்.... இப்பொழுது இதை கவனியுங்கள். இப்பொழுது, கவனியுங்கள். பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை . அதை சற்று யோசித்துப் பாருங்கள். 93ஒரு சமயம் அவர், ''கிறிஸ்துவைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய குமாரன்?'', என்றார். அவர்கள், “அவர் தாவீதின் குமாரன்”, என்றார்கள். அவர், அப்படியானால் தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லயிருக்கிறது எப்படி? 'நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார்' என்று சொல்லியிருக்கிறானே. அவர் அவனுக்கு ஆண்டவரும் குமாரனுமாயிருப்பது எப்படி? என்று கேட்டார். அன்று முதல் ஒருவனும் அவரைக் கேள்வி கேட்கத் துணியவில்லை. வெளிப்படுத்தின விசேஷத்தில் அவர், “நான் தாவீதின் வேரும் சந்ததியுமாயிருக்கிறேன்” என்றார். பாருங்கள்? “நானே திராட்சச் செடியும் கொடியுமாயிருக்கிறேன். நான் ஆதியாயிருக்கிறேன். நான் ஆதிக்கு முன்பாய் இருந்தேன். நான் ஆதியும், அவன் சந்ததியுமாயிருக்கிறேன்.” இங்கு அவர், “பரலோகத்திலிருந்திறங்கின மனுஷ குமாரனே பரலோகத்திலிருக்கிறவர்” என்றார். ஒரு முறை ஒரு ஸ்திரீ என்னிடம், ''இந்த கேள்விக்கு பதில் தாருங்கள். கெத்சமனே தோட்டத்தில் இயேசு யாரிடம் ஜெபித்தார்?“ என்று கேட்டாள். நான், ''பரலோகத்திலிருந்திறங்கினவரும், பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல், பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை என்று இயேசு கூறினபோது யாரைக் குறிப்பிடுகிறார்?“ என்று கேட்டேன். 94இதோ அவர், ஒரு வீட்டுக்கூரையின் மேல் நின்று கொண்டு நிக்கொதேமுவிடம், “பரலோகத்திலிருக்கிறேன்'' என்றார். அது சரியா? (சபையோர் ”அதுசரி“ என்கிறார்கள் -ஆசி) இதை இன்றிரவு வரைக்கும் விட்டு வைப்போம். என்ன சொல்லுகிறீர்கள்? (”ஆமென்“) மிகவும் தாமதமாகி விட்டது. ஒ, என்னே! இதைக் குறித்து இன்று பிற்பகல் சிறிது ஆழ்ந்து சிந்திப்போம். நீங்கள் எப்படி சபையைச் சேருகிறீர்கள்? (சபையோர் “பிறப்பதனால்” என்கிறார்கள் - ஆசி) பிறப்பதனால். எதன் மூலம்? தேவனுடைய சுவாசத்தின் மூலம். என் மேல் ஊதுவீராக, என் மேல் ஊதுவீராக; ஜீவனுள்ள தேவனின் ஆவியே, என் மேல் ஊதுவீராக அதுவே என் ஜெபம். பரிசுத்த ஆவி ஊதுவீராக என்னே, தேவனுடைய சுவாசம். அது என்ன? நான் முதலில் ''இயேசுவை விசுவாசிக்கிறேன்“ என்று அறிக்கையிட்ட போது தேவனுடைய ராஜ்யத்தில் முத்தரிக்கப்படுவேன் என்று அறிந்திருத்தல். ஆம். 95அதன் பிறகு என் விசுவாசத்தோடே நான் வல்லமையை, தேவபக்தியுள்ள வல்லமையை கூட்டுகிறேன். பிறகு என் வல்லமையோடே நான் வார்த்தையின் அறிவை கூட்டுகிறேன். பிறகு என் அறிவோடே தன்னடக்கத்தை கூட்டுகிறேன். அது எனக்குப் பிடிக்கும். “என் தேகம் உம்முடையது.... என் ஆத்துமாவை தன்னடக்கத்தினால் முடிசூடுவீராக... சமுத்திரத்திலிருந்து பளிங்கான சமுத்திரம் வரைக்கும்” பொறுமை. ஓ, என்னே! சோதிக்கப்பட்டுவிட்டது: கவலைப் படாதீர்கள். சாத்தான் உங்களிலுள்ள இவைகளை சோதிப்பான். நான் ஏணிப்படிகளில் இப்பொழுது ஏறிச் செல்கிறேன். பாருங்கள்? நான் வல்லமை, அறிவு, தன்னடக்கம் இவைகளைக் கூட்டிவிட்டேன். இப்பொழுது நான் பொறுமையை கூட்ட வேண்டும். நான் இன்னமும் பரிசுத்த ஆவியைப் பெறவில்லை. நான் பொறுமையை கூட்டின பின்பு, தேவ பக்தியைக் (godliness) கூட்டுகிறேன். அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? தேவனைப் போல் இருத்தல். அதை நான் கூட்டுகிறேன். நான் தவறாக நடந்து கொள்ளாமல் சீர்ய குணம் படைத்த கிறிஸ்தவர் (Christian Gentleman) நடந்து கொள்ள வேண்டிய விதத்தில் நடந்து கொள்கிறேன். அது பாவனை செய்வதல்ல. எனக்குள் இருக்கும் ஏதோ ஒன்று,தேவனுடைய அன்பு, கொந்தளிக்கிறது. பாருங்கள், பாருங்கள்? “நான், நான் - நான், அதை என்னால் செய்ய முடியும், ஆனால் செய்யாமலிருப்பது நலம்” என்று கூறுவதல்ல. பாருங்கள் உ, ஊ, உ, ஊ ; அது எப்படியாயினும் அங்குள்ளது. அது ஒரு பிறப்பு, நான் இதற்குள் பிறந்திருக்கிறேன், இதற்குள், இதற்குள், இதற்குள், இதற்குள், இதற்குள். அதன் பிறகு தேவனுடைய அன்பு, கிறிஸ்து, இறங்கி வந்து எனக்குள்ள எல்லாவற்றையும் ஊழியத்திற்கென்று முத்திரிக்கிறது. பாருங்கள். 96அவர் எனக்கு பரிசுத்த ஆவியை அளித்த பிறகு என்ன செய்கிறார்?அவர் உங்களை தனியாக, தனிமையான இடத்தில் நிறுத்தி, உங்களை குறியிடுகிறார். பாருங்கள்? அப்பொழுது நீங்கள் வித்தியாசமான ஆளாக இருக்கிறீர்கள். நீங்கள் இனி ஒருபோதும் உலகத்தாரல்ல (பாருங்கள்?) நீங்கள் உடுக்கும் உடை வித்தியாசமாயுள்ளது. நீங்கள் வித்தியாசமாக உடுத்தியிருக்கிறீர்கள். இந்த வெளிப்புறமான உடையல்ல. இல்லை, இல்லை! நீங்கள் வினோதமாக, விசித்திரமாக, உங்கள் கழுத்துப்பட்டையத் திருப்பி, நீண்ட அங்கியை உடுக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் சரீரப்பிரகாரமாக உடையுடுக்கிறீர்கள். ஆனால் இந்த ஆவிக்குரிய வஸ்திரம் முக்கியமானது. கலியாண வஸ்திரம் உங்களுக்கு தரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? இயேசுவைப் போல். 97கவனியுங்கள், அவர் நிழலிடப்பட்டார். அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார். அவருடைய வஸ்திரம் சூரியனைப் போல் வெண்மையாயிற்று. அதோ அவர், இயேசு, தேவன் தம்முடைய சொந்த குமாரனை ஸ்தானத்தில் நிறுத்துகிறார், பாருங்கள்? அதன் பிறகு மோசே அங்கு வருகிறான், அதன் பிறகு எலியா அங்கு வருகிறான். பேதுரு, “உங்களுக்குத் தெரியுமா, இங்கே இருக்கிறது நல்லது'' என்கிறான். மனிதன் எந்நிலையை அடைகிறான் பாருங்கள்? ஓ, இயற்கைக்கு மேம்பட்டது செய்யப்படும்போது... அவன் ”இங்கே மூன்று கூடாரங்களைப் போடுவோம், ஒன்று மோசேக்கு, ஒன்று எலியாவுக்கு, ஒன்று உமக்கு“ என்றான். அவன் பேசி முடிப்பதற்கு முன்பு, தேவன் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு, “இவர் என்னுடைய நேசகுமாரன். நான் மோசேயிலிருந்து எதிர்பார்த்த அனைத்தும்; மோசேயின் மூலமாக நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தேன், தீர்க்கதரிசிகளின் மூலம் நீதியைக் கொடுத்தேன், அவர் இவையனைத்தும் சந்தித்துவிட்டார். அவருக்குச் செவி கொடுங்கள். நான் இப்பொழுது காட்சியை விட்டு போகப் போகிறேன். அவருக்குச் செவிகொடுங்கள். அவருக்குச் செவி கொடுங்கள்”, என்றார். ஓ, என்னே, எவ்வளவு அழகான காரியம்! 98இந்த தகுதிகளை நாம் பெற்று தேவனுடைய நற்பண்புகளினாலும் தேவனுடைய காரியங்களினாலும் நிறையப்படும்போது, பரிசுத்த ஆவி இறங்கி வந்து நம்மை அவருடைய ராஜ்யத்துக்குள் முத்தரிக்கிறது. கவலைப்படாதீர்கள். நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள் என்று எல்லோருமே அறிந்து கொள்வார்கள். நீங்கள், ''நல்லது, தேவனுக்கு மகிமை, நான் பெற்றுக் கொண்டேன் என்று அறிந்திருக்கிறேன். நான் அந்நிய பாஷைகள் பேசினேன். தேவனுக்கு மகிமை, நான் பெற்றுக் கொண்டேன் என்று அறிந்திருக்கிறேன். நான் ஒரு முறை ஆவியில் நடனமாடினேன்'', என்று கூற வேண்டிய அவசியமில்லை. அதைக் குறித்து நீங்கள் ஒரு வார்த்தை கூற அவசியமில்லை. நீங்கள் பெற்றுள்ளதாக எல்லோருமே அறிந்து கொள்வார்கள். கவலைப்படாதீர்கள், அது தனக்குத் தானே சாட்சி கூறும். அவர் அதை ஜனங்களின் மத்தியில் அறியப்படும்படி செய்வார். 99தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இன்று காலை இங்கு உங்களுடன் கூட இருந்து இந்த ஐக்கியத்தின் நேரத்தை பெற்றதற்காக மிக்க மகிழ்வுறுகிறேன். கவனியுங்கள்! எங்கள் சபை கட்டிடம் மிகவும் சிறியது, இங்கு வரும் ஜனங்களுக்கு போதிய இடம் கிடையாது. நாங்கள் ஒரு ஸ்தாபனம் அல்ல. நாங்கள் விசுவாசித்து எல்லா ஸ்தாபனங்களுடனும் ஐக்கியம் கொள்கிறோம். நீங்கள் வர விரும்பினதால் இங்கு வந்திருக்கிறீர்கள். நீங்கள்... நாங்கள் உங்களை நேசிக்கிறோம். நாங்கள் விரும்புவது என்னவெனில், ஒவ்வொரு ஸ்தாபனமும், ஒவ்வொரு நபரும்... அந்த ஸ்தாபனங்கள் அனைத்திலும் கிறிஸ்தவர்கள் உண்டென்று நான் விசுவசிக்கிறேன். அவர்கள் கிறிஸ்துவுக்குள் சகோதரரும் சகோதரிகளுமாவர். எனவே எங்களுக்கு எந்த நோக்கமோ, எதையும் சேர்வதோ, எதையாகிலும் செய்ய வேண்டுமென்பதோ கிடையாது. நாங்கள் கிறிஸ்தவர் களாயிருக்கவே விரும்புகிறோம். 100ஹாவர்ட் காடில் கூறினது போல், ''எங்களுக்கு அன்பைத் தவிர வேறு சட்டம் கிடையாது, வேதாகமத்தைத் தவிர வேறு புத்தகம் கிடையாது. கிறிஸ்துவைத் தவிர வேறு சபை பிரமாணம் கிடையாது.“ அது உண்மை. எங்களிடம் வருகை தாருங்கள். நாங்கள் மகிழ்ச்சியடைவோம்... நாங்கள் முழு சுவிசேஷத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம்... வார்த்தை ஒவ்வொன்றிலும். அது எழுதப்பட்ட விதமாகவே அதை விசுவாசிக்கிறோம். அதனுடன் நாங்கள் ஒன்றையும் கூட்டுவதில்லை. அதிலிருந்து ஒன்றையும் எடுத்துப் போடுவதில்லை, ஸ்தாபன கோட்பாடுகள் ஒன்றையும் நாங்கள் கூட்டுவதில்லை. அது எப்படியுள்ளதோ அப்படியே அதை விட்டு விடுகிறோம். அதுதான், உங்களை நாங்கள் வரவேற்பதில் எப்பொழுதும் மகிழ்ச்சி கொண்டிருப்போம். உங்களால் முடியும் போதெல்லாம் வந்து எங்களுடன் இருங்கள். நாங்கள் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிறோம். வேதம் செய்யக் கூறின ஒவ்வொன்றிலும் நாங்கள் விசுவாசம் கொண்டுள்ளோம். நாங்கள் எங்கள் பெலவீனங்களை பின்னால் மறந்து, பரம அழைப்புக்காக இலக்கை நோக்கித் தொடருகிறோம். 101இன்னும் ஒரு காரியம் உண்டு. அதைக் கூற அனுமதிப்பீர்களா?நேற்று முந்தின நாள் காலையில்... அறிக்கை பலகையில் தரிசனம் என்று எழுதப்பட்டுள்ளதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். எனக்கு ஒரு தரிசனம் உண்டானது. அது சுமார் 5 மணியிருக்கும். பின்னால் உள்ள என் மனைவி அதை அறிவாள், அல்லது 6 மணி. நான் உறக்கத்தினின்று எழுந்தேன். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப ஆயத்தப்படுத்த நாங்கள் எழுந்தோம். எனக்கு அவ்வப்போது இத்தரிசனங்கள் உண்டாகும். நீங்கள் எல்லோரும், இங்குள்ள ஒவ்வொருவரும், அவை தவறினதேயில்லை என்பதை அறிந்திருக்கிறீர்கள். அவை முற்றிலும் பிழையற்றவை (பாருங்கள்?), அவை ஒருக்காலும் தவறினதில்லை. நான் இதுவரை இல்லாத அளவிற்கு மிகுந்த மகிழ்ச்சியுள்ள நபர் என்று எண்ணினேன். நான் தரிசனத்தில் சூரியனில் நின்று கொண்டு திரளான ஜனங்களுக்கு இது ஒலிப்பதிவு செய்யப்படுகிறதா என்று பார்க்க எண்ணினேன். அது மிகுந்த திரள் கூட்டம். அவர்கள் காட்டில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் வார்த்தையை பெற்றுக் கொண்டிருந்தபோது சூரிய ஒளிக்கதிர்கள் இங்கும் அங்கும் அவர்கள் மேல் பிரகாசித்துக் கொண்டிருந்தது. 102நான் வழக்கம் போல் நீண்ட நேரமாக, அதிக தாமதமாக, நீண்ட நேரம் பிரசங்கம் செய்து கொண்டிருந்தேன். நான் நீண்ட நேரம் பிரசங்கம் செய்து கொண்டிருந்த காரணத்தால், சபையோருக்கு வயிற்றுப்பசி உண்டாகி அவர்களுக்கு உணவு தேவைப்பட்டது. அவர்களில் சிலர், களைப்புற்று, உணவு பெற புறப்பட்டு வெளியே செல்லத் தொடங்கினர். நான் “போகாதீர்கள், போகாதீர்கள்” என்று அவர்களைக் கேட்டுக் கொண்டேன். என் பிரசங்கத்தில் இரண்டு உச்சக்கட்டங்களை குறிப்பிட விரும்பினேன். தேவன் அதை எனக்குக் கொடுத்திருந்தார். தேவன் அதை கொடுத்தார் என்று நீங்கள் உண்மையில் அறிந்திருக்கும் போது, அதை ஜனங்களுக்கு எடுத்துக் கூற நீங்கள் துடியாய் துடிப்பீர்கள் என்று எந்த பிரசங்கியுமே அறிவார். சார்லி, நான் மிகவும் வைராக்கியமாக பிரசங்கித்து, அதை அவர்களுக்கு முன்பாக வைத்து, “இந்த மகத்தான காரியங்களெல்லாம்... இது தேவன் செய்வதாகும், இதை பாருங்கள். அவர் இருதயத்தின் சிந்தனைகளை பகுத்தறிந்து கூறுகிறார். அது என்ன? வார்த்தை'' என்று இப்படியாக சொல்லிக் கொண்டே சென்றேன் 103ஒ, நான் என்ன கூறினேன் என்றும், பிரசங்கத்துக்காக நான் தெரிந்து கொண்ட பொருள் என்னவென்றும் எனக்கு ஞாபகமிருந்தால் நலமாயிருக்கும். எனக்கு ஞாபகம் வரவில்லை. பாருங்கள்? நான் பிரசங்கித்துக் கொண்டே சென்றேன். அவ்வாறு நான் செய்வதை நானே கீழே நின்று கொண்டு கவனிக்க முடிந்தது. அவ்வாறு நானே நின்று கொண்டு நான் பிரசங்கிப்பதை கவனித்துக் கொண்டிருந்தபோது..., அதை ''ஏற்றுக் கொள்ள மறுத்தவருக்கு“ நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். சிறிது கழிந்து நான், ”தேவனுக்கு மகிமை“ என்று நினைத்துக் கொண்டு, ”இந்த அற்புதமான காரியங்களைப் பாருங்கள். இதை, அதை... என்று சத்தமிட்டேன். நேரடியாக, ஜனங்களுக்கு வயிற்றுப் பசி எடுப்பது போல் தோன்றினதை நான் கவனித்தேன். ஆவிக்குரியதை அவர்கள் போதுமான அளவிற்கு பெற்றுக்கொண்டனர். எனவே அவர்கள் நடந்து செல்லத் தொடங்கினர். அவர்களில் சிலர் (சகோ. பிரன்ஹாம் கொட்டாவி விடுவதைப் போல் காண்பிக்கிறார்- ஆசி) - நடந்து செல்லத் தொடங்கினர். நான், “இவர்களுக்கு என்ன நேர்ந்தது?'' என்று நினைத்துக் கொண்டேன். நான் பார்த்துக் கொண்டிருக்கையில், சில இளம் தம்பதிகள் என் பக்கமாக நடந்து செல்வதைக் கண்டு அவர்களை நிறுத்தினேன். நான், ''ஒரு நிமிடம் பொறுங்கள் நண்பர்களே, ஒரு நிமிடம் பொறுங்கள், சாயங்கால நிழல்கள் விழும்போது நீங்கள் மறுபடியும் வருவீர்கள்”, என்றேன். இந்த முதலாம் உச்சக்கட்டத்தை உங்களிடம் கூற விரும்புகிறேன். நான், ''நான் உங்களுக்குக் காண்பித்தவை எல்லாம் எங்கிருந்து வருகின்றன? அவை எங்கிருந்து வருகின்றன? இதோ அவை. அவை தேவனுடைய வார்த்தையில் உள்ளன. அவை கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாய் உள்ளன. ஏனெனில் அது அவருடைய வாக்குத்தத்தம். ஏனெனில் அது எனக்களிக்கப்பட்ட கட்டளை 'தேவனுடைய வார்த்தையில் நிலைத்திரு' என்பதே. அதற்கு நீங்கள் எல்லோரும் சாட்சிகளாயிருக்கிறீர்கள்“ என்றேன். நான், ''உங்கள் எல்லோருக்கும் என்ன நேர்ந்தது? உங்களால் வார்த்தையைப் புரிந்து கொள்ள முடியவில்லையா? நீங்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும்”, என்றேன். அங்கிருந்தவர்களில் சிலர். “எனக்கு சில பிஸ்கோத்துகள் தின்ன வேண்டும் போலிருக்கிறது...” என்றனர். 104நான், 'நல்லது, தேவனுக்கு மகிமை. அவர்களுக்கு பிஸ்கோத்துகள் வேண்டுமென்றால், போய் வாங்கிக் கொள்ளட்டும்'', என்று எண்ணிக் கொண்டேன். எனவே நான் - நான் திரும்பிப் பார்த்தேன். ''ஓ, என்ன தெரியுமா? சற்று கழிந்து நிழல்கள் வரப்போகிறதே உடனடியாக“ என்று எண்ணினேன். பிறகு நான், ”இன்றிரவு சபையோர் மறுபடியும் கூடி வரும் போது“ என்று எண்ணினேன். நான் அவர்களிடம் இந்த உச்சக்கட்டத்தை எடுத்துக் கூறி, நான் செய்ய அவர்கள் கண்ட யாவும் தேவனுடைய வார்த்தையில் காணப்படுகிறதென்றும், அது ஏதோ ஒரு கட்டுக்கதை புத்தகம் அல்லது ஏதோ ஒரு ஸ்தாபனத்தில் காணப்படவில்லை என்றும், அவையனைத்தும் தேவனுடைய வார்த்தையில் காணப்படுகிறதென்றும், (பாருங்கள்?), அதை செய்யும்படி நான் கட்டளை பெற்றிருக்கிறேன்”, என்றும் கூறினேன். “அவர்கள் ஒவ்வொருவரும் இன்றிரவு திரும்ப வருவார்கள். நான் இப்படி செய்யலாமென்று நினைக்கிறேன். இதை முன்னுரையாக அவர்களுக்குத் திரும்பக் கூறுவேன்'', என்று எண்ணினேன். நான் சபைகாலங்களைக் குறித்து பிரசங்கித்தபோது, ஏற்கனவே கூறியதை திரும்பவும் முன்னுரையாக உரைப்பது வழக்கமென்று உங்களுக்குத் தெரியும். ''நான் வார்த்தையை ஆதாரப்படுத்தி இதை முன்னுரையாக உரைத்து, அதன் பிறகு இந்த மகத்தான, அற்புதமான உச்சக்கட்டத்தை... அது எவ்வளவு மகத்தான நேரமாயிருக்கும்! ”தேவனுக்கு ஸ்தோத்திரம்'' என்று எண்ணினேன். அப்பொழுது நான் சிறிது சுயநினைவுக்கு வந்து, ''தேவனுக்கு ஸ்தோத்திரம்“ என்று கூறுவதைக் கேட்டேன். அதன் பிறகு தரிசனத்திலிருந்து என் உருவம் இப்படி மறைந்து போனது. நான் நின்று கொண்டிருந்தேன். 105அதன் வியாக்கியானம் இதுவே. பாருங்கள்? நான் முதலில் செய்த காரியம்: செய்யப்பட்ட காரியங்கள் ஜனங்களுக்கு புதிராகவே இருந்தது. பெரும்பாலோருக்கு நான் முழு சுவிசேஷக் கூட்டத்தாரையும் தேவனுடைய பரிசுத்தவான்களையும் குறிப்பிடவில்லை, பெரும்பாலான மற்ற மக்களையே குறிப்பிடுகிறேன். நீங்கள் உலகத்தாரை நோக்கி (“Cosmos”) அவர்கள் தேவனுடைய செய்தியை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைப்பதில்லை. நீங்கள் உள்ளே செல்லும் போது என்ன கூறுகிறீர்கள் என்றால்... ஜோசப் போஸ் கூறினது போல, “நான் எப்பொழுதுமே...'' அவர், ''தேவன் என்னை சிக்காகோவுக்கு மகிமைக்கென்று சிக்காகோவை அசைப்பார் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு நான் சொப்பனம் கண்டேன்” என்றார். நான், “ஜோசப், அவர் அதை ஏற்கனவே செய்து விட்டார்” என்றேன். அவர், “மூடி (Moody)க்குப் பிறகு அவர்கள் அசைக்ப்படவேயில்லையே” என்றார். நான், ''அது... நான் சபையைக் குறித்து பேசுகிறேன். அங்குள்ளவர்கள் போரில் பலியாக வேண்டியவர்கள். அவர்கள் பூமியின் புழுதி - தெருக்களில் நெருக்கிக் கொண்டு செல்லும் கூட்டத்தினர், வர்ணம் பூசின யேசபேல்கள், மற்றவர்கள். அங்குள்ள பெரிய பழைய விடுதிகளும் மற்றவைகளும் தவிடு பொடியாகி தெருக்களில் விழுந்து போகும். அவர் சொப்பனத்தில் குறிப்பிட்டது சபையை. சபையானது இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுதல் தத்ரூபமாக்கப்பட்டதை கண்டது, அவர்கள் அதை அடையாளம் கண்டு கொண்டனர். சிக்காகோவிலிருந்து பதினைந்து பேர்கள் கூட இருக்க முடியாது. இந்த சந்ததியில் சிக்காகோ நகரம் முழுவதிலுமிருந்து வருபவர்கள் பத்து பேர் கூட இருக்க முடியாது'' என்றேன். அதைக் குறித்து நீங்கள் எப்பொழுதாகிலும் சிந்தித்ததுண்டா? 106நோவாவின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வருகையில் நடக்கும். அப்பொழுது எட்டு ஆத்துமாக்கள் மாத்திரமே காப்பாற்றப்பட்டனர். சோதோமிலிருந்து எத்தனை பேர் வெளி வந்தனர்? நான் என்ன கூறுகிறேன் என்று விளங்குகிறதா? வெகு சிலர் மாத்திரமே என்று வியக்கிறேன். பாருங்கள்? ஆனால் சபையானது அசைக்கப்படுதலை பெற்றுவிட்டது. அவர்கள் அதை அடையாளம் கண்டு கொண்டனர். அவர்கள் வார்த்தையை அறிந்திருந்தனர். எனவே வார்த்தை உருவகமானது (materialized), அவர்கள் அதை பிடித்துக் கொண்டனர். இப்பொழுது ஒரு நிமிடம் பாருங்கள், இந்த முதலாம் செய்தியை அவர்கள் கண்டபோது எல்லோரும் ஒன்று சேர்ந்து அதற்கு அனுப்பி அவருடைய தேவனுக்கு மகிமை! ஓ, என்னால் காணமுடியுமானால்... இது, அது, மற்றது'' என்றனர். அவர்கள் வந்த வழியே திரும்பிச் சென்று விட்டனர். பாருங்கள்? இப்பொழுது அவர்கள், ''எனக்குத் தெரியவில்லை. நான் எங்கே போய் சேர்ந்து கொள்வேன்? இதனுடன் நான் போய்விட்டால், அது இப்படியாகிவிடும். நான் உதைக்கப்பட்டு அங்கு தள்ளப்படுவேன். அப்பொழுது இங்கு எனக்குத் தொடர்பிருக்காது“ என்று எண்ணுகின்றனர். 107சகோதரர் உட்கார்ந்து கொண்டு, “நான் என்ன செய்வேன்...?” என்று யோசிக்கின்றனர். பார்த்தீர்களா? தேவன் வாக்குத்தத்தம் பண்ணின வார்த்தை வெளிப்படுகின்றது (பாருங்கள்?) என்று அறிந்து கொள்ள அவர்கள் போதிய காலம் நிலைத்திராமல் நடந்து சென்று விட்டனர். ஆனால் கவலைப்படாதீர்கள், நிழல்கள் சமீபமாயுள்ளன. பாருங்கள்? நான் சுவிசேஷ வேலைக்கு திரும்பிச் சென்ற போது.... அன்றொரு இரவு நான் மூலைக்கல்லை நாட்டின் போது அவர் எனக்களித்த செய்தி உங்களுக்கு ஞாபகமிருக்கும். அவர் ''... வேலையைச் செய்“ என்றார். அவர், ”நீ தரிசனத்திலிருந்து வெளியே வரும்போது2 தீமோத்தேயு 4-ம் அதிகாரத்தைப்படி“ என்றார். அது மூலைக்கல்லில் வைக்கப்பட்டள்ளதை நீங்கள் அறிவீர்கள் - முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர், ''சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று. ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனமில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக் கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்து போகும் காலம் வரும்” என்றார். அது வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறினது. 108ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள், அன்றிரவு நான் மீதி பாகத்தைப் படிக்கவில்லை. இந்த கூடாரத்தில் நான் பிரசங்கித்து வந்த இந்த முப்பது சொச்சம் ஆண்டுகளில் ஒரு முறையாவது நான் அதற்கு அப்பாலுள்ள பாகத்தைப் படித்ததில்லை. ஏனென்று எனக்குத் தெரியவில்லை. நான் அடிக்கடி வியந்ததுண்டு. ஆனால் ஒரு நாள், இயேசு புத்தகச் சுருளை எடுத்து தீர்க்கதரிசனத்தில் பாதியை படித்து நிறுத்தி விட்டு (கப்பர்நகூமில்), “இந்த தீர்க்கதரிசனம் இன்றையத் தினம் நிறைவேறிற்று” என்று கூறினதைக் கண்டேன். அவர் ஏன் மீதி பாகத்தைப் படிக்கவில்லை? அது அவருடைய இரண்டாம் வருகையைக் குறித்த பாகம். பாருங்கள்? அங்கு அது என்னவென்று அறியாமல் நான் படித்தேன்.... அந்த பாகத்தை நான் எடுத்தேன். அது தென் கெரோலினாவிலுள்ள சதர்ன் பைன்ஸ் என்னுமிடத்தில். அது எனக்கு முன்பாக இருந்தது. அன்று காலை, காரின் மேல் சாய்ந்து கொண்டு நின்ற வண்ணம் நான் ஜோசப் போஸுடன் பேசிக் கொண்டிருந்தேன். (சகோ. பிரன்ஹாம் விரல்களைச் சொடுக்குகிறார்- ஆசி). அது என் மனதில் பட்டது, பவுல், ''நான்... எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள். யாருமே என்னோடு கூட இல்லை. தேமா இப்பிரபஞ்சத்தின் மேல் ஆசை வைத்து என்னை விட்டுப் பிரிந்து போய் விட்டான். இப்பொழுது நான்... (பாருங்கள்!) கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமை செய்தான்“ என்றான். 109தேமா என்ன நினைத்திருப்பான் என்று பாருங்கள். ''பவுல் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து வியாதியஸ்தரை சுகப்படுத்துவதை நான் கண்டிருக்கிறேன். இதோ அவரே வியாதிப்பட்டு, எங்கு சென்றாலும், கூட ஒரு வைத்தியரை - லூக்காவை - அழைத்துச் செல்கிறன், தெய்வீக சுகமளிக்கும் ஒரு மனிதன்... ஏன், அவன் ஒரு மனிதனை குருடாக்கினதை நான் கண்டிருக்கிறேன். 'கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்ளவாராக. சில காலம் நீ குருடனாயிருப்பாய்' என்று அவன் சொன்ன மாத்திரத்தில் அவன் குருடானான். அப்படிப்பட்டவனை ஒரு கன்னான் கூட்டத்திலிருந்து துரத்துகிறான். அவன் மனிதனை குருடாக்கும் வல்லமையை இழந்துவிட்டான் என்று எண்ணுகிறேன். இதோ முடிவில் அவன் தெய்வீக சுகமளிக்கும் வல்லமையையும் இழந்துவிட்டான். தேவன் அவனைக் கைவிட்டார்“ என்று நினைத்திருப்பான். 110தேமா உலகத்திற்குள் சென்றிருப்பான் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் அவன், அவனுடைய வரலாறு உங்களுக்குத் தெரிந்திருக்குமானால், அவன் பெரிய, செல்வம் படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவன். அவன் மற்ற ஜனங்களுடன் கூட செல்ல விரும்பினான். ஆனால் பவுல், ஏழை சிறு பவுல், அவனைக் குறித்தென்ன? தேவன் எப்பொழுதுமே ஒரு ஊழியம் அவ்வளவாக தாழ்ந்து போகும்படி அனுமதித்து அதன் பிறகு அதை முடிசூடுகிறார். இயேசு மரித்தோரை உயிரோடெழுப்பவும், அவர் விரும்பின எதையும் செய்யக்கூடிய நிலைக்கு அவரைக் கொண்டு நிறுத்தி (அதை பாருங்கள்!) அதன் பிறகு ஒரு ரோமச் சேவகன் அவருடைய முகத்திலிருந்து தாடியைப் பிய்க்கவும் (சகோ. பிரன்ஹாம் துப்பும் சத்தத்தை உண்டாக்குகிறார் - ஆசி) அவருடைய முகத்தில் துப்பவும், அவரை தலையில் அடிக்கவும். அவருடைய முகத்தை ஒரு கந்தை துணியினால் மூடி, ''நீ தீர்க்கதரிசியாயிற்றே, எனக்குத் தெரிய வேண்டுமே, உன்னை அடித்தது யாரென்று சொல்'' என்றான். எல்லோரும் கையில் கோலுடன் அவரை சூழ்ந்து கொண்டு (சகோ, பிரன்ஹாம் அவரை அடிப்பது போல் காண்பிக்கிறார் -ஆசி) அவரைத் தலையில் அடித்து, ''உன்னை அடித்தது யார்?'' என்று கேட்டார்கள். அவரை அடித்தது யாரென்று அவர் அறிந்திருந்தார். அவர் நிச்சயம் அறிந்திருந்தார். பாருங்கள்? ஆனால் அவருடைய ஊழியம் முடிசூடப்பட ஆயத்தமாயிருந்தது. அது எப்பொழுதுமே மிகவும் பலவீனமான, போய்விடுமோ என்னும் நிலையை அடைந்த பின்னர் தேவன் அதை முடிசூடுகிறார். ஓ, கர்த்தாவே, அது நடக்கட்டும். அது நடக்கட்டும், கர்த்தாவே. நாம் தலைவணங்குவோம். நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் (இப்பொழுது அவரைத் தொழுது கொள்ளுங்கள், நமக்கு ஆழமான போதகம் இருந்தது!) சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் இப்பொழுது நம்முடைய கரங்களை அவரிடம் உயர்த்துவோம். நான் அவரை நேசிக்கிறேன் (இப்பொழுது ஆவியில் இருங்கள். பாருங்கள்?) நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால்... கர்த்தரிடத்திலிருந்து வந்த தரிசனம் இக்காலை சுமார் ஐந்து மணிக்கு நான் என் கட்டிலின் மேல் படுத்துக் கொண்டிருக்கையில் இது சம்பவித்தது, அதாவது இந்த தரிசனம் எனக்கு முன்பாக தோன்றினது, ஆனால் அதை இந்த வேளையில் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அத்தரிசனத்தில் நான் பிரசங்கம் செய்வதாக என்னை நானே காண்பது போலவும் மேலும் நான் சூரியனில் நின்று கொண்டிருப்பது போல் அமைந்திருந்தது. ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியில் அமர்ந்திருந்த ஒரு பெரிய ஜனக்கூட்டத்திற்கு நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன், அந்த காட்டில் சூரிய வெளிச்சம் முழுமையாக அவர்கள் மீது விழாமல் சிறுசிறு பாகங்களாக அந்த காட்டினூடாக சூரிய ஒளி விழுந்து கொண்டிருந்தது. நான் பிரசங்கித்துக் கொண்டிருந்த பொருளின் பேரில் எனக்கு மிகவுமாக குதூகலமடைந்து என் இருதயத்தின் ஆழத்தில் களிகூர்ந்து கொண்டிருந்தேன். பிரசங்கத்தின் பொருளிற்கு இரண்டு உச்சக்கட்டங்கள் இருந்தன. என்னுடைய முதல் உச்சக்கட்டத்திற்கான பின்னணியை நான் பிரசங்கித்துக் கொண்டிருந்த போது, மிகவும் நேரமாகி மதிய வேளைக்கு அருகில் இருப்பதையும் என்னுடைய ஜனக் கூட்டத்திற்கு வயிற்றுப் பசி எடுப்பதையும் நான் சடுதியாக கவனித்தேன். அவர்கள் எழுந்து திரும்ப வரவேண்டும் என்ற எண்ணமுடையவர்களாக வெளியே நடந்து செல்ல ஆரம்பித்தனர், அவர்களுடைய எண்ணத்தின்படி அவர்களுக்கு சரீர ஆகாரம் பெற வேண்டியவர்களாக இருந்தனர், சிலர் மேலும் பிரசங்கத்தை கேட்டு இயலாமல் சோர்வுற்றிருந்தனர். நான் எனது வலது பக்கமாக சில திருமணமான இளவயது மக்கள் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்ததை நான் கவனித்தேன், உடனே நான் “செல்லாதீர்கள்! நான் உங்களுக்கு காண்பித்த இந்த அற்புதமான காரியங்களெல்லாம், அவை எங்கிருந்து வருகின்றன என்றும் அல்லது எங்கே அவைகள் இருக்கின்றன என்பதும் உங்களுக்குத் தெரியாதே!” என்று அவர்களை நோக்கி கூச்சலிட்டேன். ஆகவே அதுவே என்னுடைய முதலாம் உச்சக் கட்டமாக இருக்க வேண்டியதாக இருந்தது. என் வேதாகமத்தை வேகமாக பற்றி எடுத்து, கூச்சலிட்டு, உச்சக்கட்டத்தை கூறினேன், ''அவை வேதாகமத்தில் காணப்படுகிறது, ஏனெனில் இந்த வேதாகமத்தை மாத்திரமே பிரசங்கிக்க எனக்கு கட்டளை அளிக்கப்பட்டுள்ளது!“ என்றேன். ஆனால் ஜனக்கூட்டம் நடந்து சென்று கொண்டேயிருந்தது. நான் அந்த காட்டு சபையை நோக்கிப் பார்த்தேன், அங்கே யாருமே இல்லை. அப்பொழுது நான் திரும்பி அது தான் முதலாம் உச்சக்கட்டம் என்று கூறினேன், ஆனால் அவர்கள் எல்லோரும் மாலை ஆராதனைக்கு திரும்பி வருவார்கள் என்று என் இருதயத்தில் நான் அறிந்திருந்தேன், ஆகவே நான் செய்ய வேண்டியது என்னவென்றால் என் காலை ஆராதனையில் ஒரு சிறு பின்னணியை அமைப்பது மாத்திரமே, பிறகு மாலை ஆராதனையில் அந்த மகத்தான உச்சக்கட்டத்தை எடுத்துக் கூற இயலும். ஆகவே மாலை ஆராதனை துவங்குவதற்காக காத்துக் கொண்டிருக்க என் காட்டு சபையிலிருந்து நான் திரும்புகையில் என் இருதயம் மிகவுமாக குதுகலித்து மெய்சிலிர்த்திருந்தது.